• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏறிக் குதி !

By Super
|

சரவணணும், மார்ட்டினோவாவும் அந்த வேலைக்காக ஜானிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஜான் அந்த நகரத்தில் ஒரு புகழ்மிக்க காண்ட்ராக்டர். கொடுத்த வேலையைக் கச்சிதமாக முடித்துக் கொடுக்கும் வல்லமை கொண்டவன்.

சரவணன் இந்தியாவில் இருந்து பிழைப்புத் தேடி வெளிநாடு போகும் கப்பலில் கப்பல் கழுவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன். தற்செயலாக, ஒரு ஏஜெண்ட் மூலமாக செளதி அரேபியாவிலிருந்து அமெரிக்கா வந்தடைந்தான்.

அமெரிக்கா, செளதியைவிட ஆடம்பரமாகவும் சுதந்திரமாகவும் இருக்கவே அவனுக்குப் பிடித்துப்போனது. அவனுக்குத் திருமணம் ஆகி நான்கு வருடத்தில் மனைவியை ஒரு தடவை பார்த்திருக்கிறான்.

நாகப்பட்டினத்துக் கிராமத்தில் இருக்கும் அவளைப் பத்து நாட்கள் தடவிக் கொண்டு சந்தோஷமாக இருந்தது ஞாபகம் வந்தது. செளதிக்குக் கூட்டிக் கொண்டு போக முடியவில்லை. போதிய வருமானம் இல்லாததால், அவளது விசா நிராகரிக்கப்பட்டது மனதை அழுத்தியது.

இந்த வேலை கிடைக்கட்டும், ஜாலியாக அவளை ஒரு மாதத்தில் கூட்டிக் கொள்ளலாம்.

மார்ட்டினோ மெக்சிக்கோவில் ஜவராஸ் அருகே ஒரு கிராமத்தில் பனையேறியாக இருந்து வந்தான். பிழைப்பதற்காக வயலின்கள் விற்கும் ஒரு கடையில் வயலினைத் துடைத்து வைப்பது, மற்றும் பனையேறிக் கள்ளு இறக்கி ஊரில் விற்று வந்தான்.

அவனது ஊரில் மொட்டை மாடியின் உயரத்தில் ஆண்டெனாவில் மாட்டிக் கொள்ளும் பட்டங்களையும் துணிமணிகளையும் அவிழ்க்க அவழைத் தான் கூப்பிடுவார்கள். ஏறுவதில் திறம் மிக்கவன். அவனது வருமானம் போதுமானதாக இல்லாததால் அவனது தங்கை அமெரிக்காவின் வால்மார்ட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தாள்.

ஜவராஸில், வால்மார்ட்டின் துணித் தைக்கும் பட்டறை இருந்தது. அது அமெரிக்க எல்லைக்கருகே மெக்சிக்கோவில் இருந்தது. மிகக் குறைந்த விலைக்குத் தைக்கும் துணிகளுக்கு குறைந்த கூலியின் நிறைய மெக்சிக்கோ தொழிலாளிகள் அங்கு அல்லும், பகலும் துணிகளைத் தைக்க அந்தத் துணிகள் அமெரிக்கா எங்கும் விற்கப்பட்டன.

மாட்டினோவின் தன்மானம் அவனது தங்கை வேலைக்குப் போய் குடும்பத்தின் செலவுகளைப் பார்த்துக் கொள்வதினால் பாதிக்கப்பட்டிருந்தது. அவனது மனைவி, குழந்தைகளை அவளிடம் ஒப்படைத்துவிட்டு, கனவு தேசமான அமெரிக்காவிற்குத் திருட்டுத்தனமாக ஒரு காய்கறி வேனில் மறைந்து உள்ளே வந்திருந்தான்.

இந்த வேலை கிடைத்தால் நல்லா இருக்கும். மெதுவா இங்கேயே தங்கிப் பிறகு குடும்பத்தை அழைத்துக் கொண்டுவிடலாம். ஜான் நல்லவனாகத் தெரிந்தான்.

ஜான், தன் தொழிலை மிக முனைப்புடன் செய்பவன். அவனுக்கு வேலையாக வேண்டும். அதில் கறாராக இருப்பான். மற்றபடி வேலை செய்யும் தொழிலாளிகள் எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் விருப்பு வெறுப்பு எப்படி என்பதைப் பற்றி அலட்டிக் கொள்ளாதவன்.

நேரமும் கிடையாது அவனிடம். அனைத்தும் நேரப்படி நடந்துவிடும். அதனால் அந்த நகரத்திலேயே நல்ல பெயரெடுத்திருந்தான். ஆனால், வேலையைச் சரியானபஐ வாடிக்கையாளர் வேண்டியபடி செய்ய வேண்டும். சம்பளம் உடனே கிடைத்துவிடும். செய்யத் தவறினால், அடுத்த நிமிடம் வேறொரு ஆளிடம் வேலையை ஒப்படைப்பான்.

ஒருவனத்ை தட்டி சரி பண்ண நேரமில்லை. அந்த ஆளுக்கு வேறு வேலையைக் கொடுப்பான். இல்லை வெளியேறச் சொல்வான்.

ஜான் இருவரையும் மாறி, மாறிப் பார்த்தான். நன்கு குசலம் விசாரித்துவிட்டு, சாப்பிட்டியா, கார் இருக்கிறதா, எங்கு தங்குகிறாய் போன்ற சம்பிரதாயக் கேள்விகள் முடிந்தவுடன் சம்பளம் பற்றித் தெளிவாக அறிவித்தான்.

விசா இருக்கிறதா, இல்லையா என்று கூடக் கேக்கவில்லை. இதெல்லாம் மத்தியக் கிழக்கு நாடுகளில் சாத்தியமில்லை. சரவணன் செளதியில் ஒரு பெரிய கூடாரங்கள் மிக்க மைதானத்தில் தங்க வைத்து தடுப்பூசி போட்டதை நினைவு கூர்ந்தான்.

ஆடு மாடு மாதிரி தன்னை நடத்திய மதவாதிகளை எண்ணிப் பார்த்தான். மாட்டினோ தான் அழுகிய காய்கறியுடன் 12 மணி நேரம் வந்ததை நினைவு கூர்ந்தான்.

ஜான், என்னுடன் வாருங்கள் ஒரு நல்ல வேலை இருக்கின்றனது என்று அவர்களை ஒரு வேனில் அழைத்துக் கொண்டு போனான். அது மிக உயரமான ஐம்பது மாடிக் கொண்ட ஹோட்டல்.

பளபளக்கும் அந்தக் கட்டடத்தில் கால் பதிக்கக் கூச்சமாக இருந்தது. நல்ல ஆடைகள் அணிந்த பெண்களும், ஆண்களும் வேற்று கிரக மனிதர்கள் போன்று இருந்தனர்.

ஐம்பதாவது மாடியின் மேலிருந்த மொட்டை மாடியை அடைந்தனர். அங்கு முன்னே பார்த்தரியாத உபகரணங்கள், தோலாலான கயிறுகழ், இடுப்பைச் சுற்றி கட்டிக் கொள்ளும் பெல்ட்டுகள் போன்றவை இருந்தன.

மொடடை மாடி வெளியே மெல்லி தகடு வேய்ந்த டிராலி போன்ற ஒரு அமைப்புக் கட்டப்பட்டிருந்தது.

ஜான், ஒகே! இப்பே சராவ் நீ இந்தப் பக்கம் முழுவதும், மார்ட்டி நீ அந்தப் பக்கம் முழுவதும் நன்கு அழுக்குப் போகத் துடைக்கணும். நம்ம கஸ்டமர் மகிழ்ச்சியாகணும். பெல்ட் கட்டிக்கோ!. அந்த டிராலியின் பாதுகாப்பா இரு. நிறைய வேலை நமக்கு இந்த ஓட்டல்காரங்க கொடுப்பாங்க. மாலை ஆபிசுக்கு வந்து சம்பளம் வாங்கிகோங்க! சாப்பிட பணம் இருக்கா?. இந்த பத்து டாலரை வைத்துக்கோ!.

இரு பக்கமும் ஐம்பஐ மாடி வழுக்கிய கண்ணாடிகளையும், மெல்லிய டிராலியையும், கீழே எறும்பு மாதிரி ஊறும் கார்களையும் பார்த்துத் திகைப்பற்குள்...

கவனமாக இரு, வேலையை ஆரம்பி, ஏறிக் குதி என்றான் ஜான்.

- கிருஷ்ணக்குமார்(kksash@aol.com)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X