For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழைச் செம்புச் சடங்கும் மூதேவி வழிபாடும்

By Staff
Google Oneindia Tamil News

கலாச்சார மாத இதழ் - பிப்ரவரி 2005

கசாப்புக்காரனின் மனைவி

- லூவிஸ் எர்ட்ரிச்

- தமிழில்: ஜி.திலகவதி

ஒரு மனிதனின் மகிழ்ச்சி நிரம்பிய அனுபவங்களே அவனைப் பிற்பாடு கொன்று விடும் எனும் விசித்திரமானதும் சற்றே முரண்பாடுடையதுமான ஓர்உண்மை இங்கே வெளியாகிறது. அன்றாடம் நாம் காணும் ஒரு குடிகாரனை விட எவ்விதத்திலும் மேம்பட்டவனாகக் காணப்படாவிடினும்,சாமான்யனான டெல்ஃபினே வட்ஸ்காவின் அப்பா, ரோய், சற்று மேம்பட்டவனே.

அவன் காதல்வயப்பட்ட பயங்கரக் கற்பனாவாதியாக இருந்தான். வியப்பிலாழ்ந்த போலந்துக்காரனுக்கேயுரிய அளவற்ற நன்றியுணர்வுடனும்,தன்னலமின்றியும், தன் வாழ்வில் அவன் ஆழமாகக் காதலித்திருந்தான். ஆனால், அவன் காதலித்து மணந்து கொண்ட மின்னி வட்ஸ்கா தற்போதுஅவனுடைய மகள் டெல்ஃபினேவின் உருவத்திலும், புகைப்படங்களிலும் மட்டுமே இருந்தாள்.

டெல்ஃபினே மிகவும் சிறியவளாக இருந்தபோதே மின்னி இறந்து விட்டாள். அதன் பிறகு ரோய் அவளுடைய புகைப்படங்களை ஆராதிக்கத் தொடங்கினான்.சில இரவுகளில் அவன் ஒப்பனை மேசையின் மீது காணிக்கை மெழுகுவர்த்திகளை வரிசையாக ஏற்றி வைத்து விட்டுத் தொடர்ந்து ஓயாமல் குடித்துக்கொண்டும், மதுக்கோப்பையின் ஆழத்திலிருந்து மின்னி அவனுக்கு விடையளிக்கும் வரை அவளுடன் பேசிக் கொண்டும் இருந்தான்.

பொதுவாக, ஆரோக்கியமான ஈரலையுடைய ஒருவனைப் போலவே அவன், மின்னி இறந்ததற்குப் பிந்தைய சில வருடங்களில், குடிப்பதும் பிறகு குடியைநிறுத்துவதுமாக இருந்தான். எதை வேண்டுமானாலும் குடிப்பது என்ற போக்கில், மதுவிலக்கு அமல்படுத்தப்படும் வேளையில் அவன் தண்ணீரில்"மூழ்கியபடியே" இருந்தான். தலைமுடி வளரப் பயன்படுத்தப்படும் சத்து மருந்து நீர், அனைத்து வகையான இருமல் மருந்துகள், பெண்களின் மாதாந்திரத்தொல்லையைப் போக்கும் மருந்துகள் ஆகியவை அனைத்தும் அவனுடைய துக்கம் காக்கும் சடங்கில் எரிபொருளாயின.

தன்னுடைய இதயம் என்று அவன் தவறாகப் புரிந்து கொண்டிருந்த உறுப்பை அவன் படிப்படியாக அழித்து விட்டான். டெல்ஃபினேவுக்கு பன்னிரெண்டு வயதுஆன கால கட்டத்தில், குடிக்க வேண்டும் எனும் அவளுடைய தந்தையின் தேவை அவளுடைய தாயின் நினைவினால் ஏற்படாமல் குடிப்பழக்கத்தினாலேயேஏற்படுவதாயிற்று.

அதன் பிறகு அவள் தன் அப்பாவை மதுவில் தோய்ந்து பாழ்பட்ட ஒரு மனிதனாகவே பெரிதும் அறிந்திருந்தாள். வீடு குழப்பங்களின் கூடாரமானது.டெல்ஃபினே முழு மனுஷியாக இருக்கிற இந்த வேளையில் அவன் சுத்தமாக ஒன்றுக்கும் உதவாதவனாகி விட்டான். 1936ம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் அவள் செயலாளர் பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறி இரட்டை நகரத்திலிருந்து புறப்பட்டு அவனைக் கவனித்துக் கொள்வதற்காகதங்களுடைய மின்னசோட்டா பண்ணைக்கு வந்து சேர்ந்தாள்.

மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக டெல்ஃபினே நகரத்துக்குப் போனபோது தன் தாயை நினைத்துக் கொண்டாள். கழுத்துச் சங்கிலிப் பதக்கத்தக்குஉள்ளே இருக்கும் மின்னியின் சிறிய புகைப்படம் ஒன்று மட்டும் தான் அவளிடம் இருந்தது.

மற்றவையெல்லாம் அவள் வெளியூரில் இருந்தபோது காணாமற் போய் விட்டிருந்தன. தாயின் முகத்தைக் காண வேண்டும் என்ற ஏக்கத்தால்உந்தப்பட்டு பல இடங்களில் திரிந்து போது, டெல்ஃபினே, வால்ட் ஃவோகலின் இறைச்சிக் கடைக்குள் நுழைந்ததனால் ஏவா வால்ட் ஃவோகலைச்சந்திக்க நேர்ந்தது.

அவர்களுடைய மனங்களின் முதலாவது மெய்யான சந்திப்பு பன்றிக் கொழுப்பின் நிமித்தம் நேர்ந்தது. "அரைப் பவுண்டு வேண்டும்" என்றாள் டெல்ஃபினே.எப்படியும் தான் இறக்கப் போவதால் மது வகைகளைக் குடித்து சந்தோஷமாகவே சாகலாமே என்று அவளுடைய அப்பா பிடித்த பிடிவாதத்தில் அவள்மனரீதியாக அலுத்துப் போயிருந்தாள். நாள் முழுவதும் குடித்தபடி முசுக் கட்டை மரங்களின் கீழ் கிடந்த அவன் தனக்குத்தானே சிரிப்பதும் வாயினால்பழங்களைக் கவ்வுவதுமாக இருந்தான். பழச்சாற்றின் செந்நீலக்கறை அவன் மேனியெங்கும் படர்ந்திருந்தது.

"பன்றிக் கொழுப்பில் பல ரகங்கள் இருக்கின்றன" என்றபடி மின் விசிறியினால் குளிர்ச்சியூட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கண்ணாடிப் பேழையை அவள்நெருங்கினாள். " என்னுடைய கணவர் அந்தக் காலத்தில் ஜெர்மனியில் பயிற்சி பெற்ற கசாப்புக்காரர். இந்தக் கொழுப்பைத் தயாரிக்க அவர் ஒரு ரகசியமுறையைப் பயன்படுத்துகிறார். சுவைத்துப் பார்" என்று ஒரு சிறிய தட்டினை நீட்டியபடி அவள் கட்டளையிட்டாள். டெல்ஃபினே தன் விரல் நுனியால்அதிலிருந்து சிறிதளவு வழித்தெடுத்தாள்.

"வெண்ணெய் போலச் சுத்தமாக இருக்கிறது. "

"நாங்கள் அதிகம் உப்பு சேர்க்க மாட்டோம்." யாரும் ஒட்டுக் கேட்டு விடக் கூடாதென்பதைப் போல ஏவா கிசுகிசுப்பாகச் சொன்னாள். "ஆனால்ஐஸ்பெட்டியில் வைக்கவில்லையென்றால் தாங்காது"

"எங்களிடம் ஐஸ் பெட்டி இல்லை. அதாவது இருந்ததை நான் வெளியூரில் இருந்தபோது என் அப்பா விற்று விட்டார் என்றாள் டெல்ஃபினே. "

"உன் அப்பா யார் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?

ஏவாவின் வெளிப்படையான சுபாவம், பழகும் தன்மையையும், மஞ்சள் நிற பென்சில்கள் இரண்டு தைத்துக் கிடந்த செம்பழுப்பு வண்ண முடிக் கொண்டையும்டெல்ஃபினேவுக்குப் பிடித்திருந்தன. ஏவாவின் கண்கள் பச்சைப் புள்ளிகளோடு கூடிய மிக வெளுத்த இள நீல வண்ணத்தில் இருந்தன.

ஒரு கண்ணில் இருந்த வினோதமான ஒரு பொற்கோடு கதவின் குறுக்கே அமைந்த பிளவின் ஊடே வெளிச்சம் வெளியேறுவது மாதிரி அவள் உயிர் உடலில்இருந்து இறுதியாகப் பிரிந்தவுடன் கருத்துப் போய் விடும் போல் இருந்தது.

"ரோய் வட்ஸ்கா" என்றாள் டெல்ஃபினே மெதுவாக.

ஏவா தலையை ஆட்டிக் கொண்டாள். அவளுக்குத் தெரிய வேண்டிய அவ்வளவு விஷயங்களையும் அந்த பெயர் தெரிவித்து போல இருந்தது. "இங்கே வா"ஏவா கல்லாப் பெட்டியைச் சுற்றிக் கைகளைச் சுழற்றினாள். "நீ இதுவரை சாப்பிட்டிருக்கக்கூடிய எந்த வகைக் கொத்துக் கறிப் பணியாரத்தைக்காட்டிலும் சிறந்த ஒரு பணியாரத்தைச் செய்யும் முறையை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன். எல்லாம் அந்த விலங்குகளின் சிறுநீரகங்களைச் சுற்றியுள்ளமாமிசக் கொழுப்பில்தான் அடங்கி இருக்கிறது."

டெல்ஃபினே கல்லாவின் பின்புறம் போய் தாள்களும் கணக்குச் சீட்டுக்களுமாக வழிந்து கொண்டிருந்த அலுவலகத்தைத் தாண்டி, சுத்தமானமுன்னாடைகளையும், சிறு பழைய துணித் துண்டுகளும் அடுக்கப்பட்டிருந்த அலமாரிகளையும், ஜெர்மானிய பீங்கான் உருவங்களும் கண்டா முண்டாப் பொருட்களும்நிரப்பிய சிறிய அலமாரியையும் கடந்தாள். கனமான சுவர்களில் அமைக்கப்பட்டிருந்த பெரிய ஜன்னல்களின் வழியே வந்த வெளிச்சம் நிரம்பிய சமையல்அறைக்குள் அவளும் ஏவாவும் நுழைந்தார்கள்.

காலம் முழுமையாக நின்று விட்டதைப் போலிருந்தது டெல்ஃபினேவுக்கு. அறைக்குள் நுழைந்த மாத்திரத்தில், வாழ்தலின் மேன்மையான அற்புதமானவிரிவு நிலையை அவள் உணர்ந்தாள்.

பீங்கானாலான பெரிய ரொட்டிக் கிண்ணங்களும் இழுப்பறையில் ரொட்டி மாவும் கொண்ட அலமாரி ஒன்று அங்கே இருந்தது. தரை விரிப்புக்குப்பொருத்தமான, பளிச்சிடும் பச்சை வண்ணம் அலமாரிகளிலும் பூசப்பட்டிருந்தது. கனமான, பளபளவென நகாசு செய்யப்பட்ட மாமிச அரவை இயந்திரம்மேசையுடன் பொருத்தப்பட்டிருந்தது. சதுரக் கட்டங்கள் பொறிக்கப்பட்ட வழவழப்பான சிறிய துணி அங்கிருந்த ஒரு வட்டமேசையின் மீது விரிக்கப்பட்டிருந்தது.

சிவப்பு வண்ணக் கோடுகளால் அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு கட்டத்துக்கு உள்ளேயும் கருநீல திராட்சைக் குலைகளோ, பீச் பழமோ, ஆப்பிளோ, அல்லதுமென்மையான பசுமை நிற பியர் பழமோ அச்சிடப்பட்டிருந்தது. ஜன்னல் விளிம்புகளில் இருந்த பூந்தொட்டிகளில் செக்கச் செவேலென்ற ஜெரேனியம்மலர்கள் ஆர்ப்பரிக்கும் வண்ணம் மகிழ்ச்சி பொங்க மலர்ந்திருந்தன.

திடீரென்று, அளவற்ற மகிழ்ச்சியுடன் டெல்ஃபினே சதுரமான முதுகுப் பக்கத்தைக் கொண்ட பெரிய திடமான நாற்காலியில் அமர்ந்தாள். ஏவா ஒரு ஸ்பூன்காபிக் கொட்டைகளை எடுத்து வறுத்து அரைக்கத் தொடங்கினாள். அற்புதமான மணம் கிளம்பிற்று. டெல்ஃபினே மூச்சை ஆழமாக இழுத்தாள்.

ஏவா, வெளிர் நீலப் புள்ளிகள் தெறித்த எனாமலினாலான காபிக் குடுவையில், ஆழமற்ற மர இழுப்பறையில் நிறைந்திருந்த புதிதாக அரைத்த காபித்தூளை தன் விரைவும், உறுதியும் மிக்க கைகளால் எடுத்துப் போட்டாள். கையடிக் குழாயிலிருந்து தண்ணீரைப் பெறுவதற்குப் பதிலாக பாத்திரம் கழுவும்தொட்டியிலிருந்த திறப்படைப்புக் குழாயைத் திருகித் தண்ணீரை எடுத்து "மாயாஜாலத் தலைமை சமையற்காரன்" "மேஜிக் செஃப்" எனும் வார்த்தைகள்பொறிக்கப்பட்ட பளபளக்கும் எஃகினாலான வெண்ணிற எரிவாயு அடுப்பைப் பற்ற வைத்துக் காபி போட்டாள்.

"கடவுளே" என்று டெல்ஃபினே பெருமூச்செறிந்தாள். அவளால் பேச இயலவில்லை. ஆனாலும் அதனால் பாதிப்பு ஏதுமில்லை. ஏனெனில் ஏவாஏற்கனவே தனது தலைமுடியில் செருகியிருந்த பென்சில்களில் ஒன்றை உருவி, ஒரு கட்டுத் தாளை எடுத்துக் கொண்டு கொத்துக் கறிப் பணியார செய்முறையைஎழுதத் தொடங்கியிருந்தாள்.

ஏவா, ஆங்கில மொழியை மிகவும் நன்றாகப் பேசினாள். எனினும், அவளுடைய ஆங்கிலப் புலமை பழங்காலத்திய ஜெர்மானிய அலங்காரப் பாணியில்இருந்தது.

அவளுக்கு எழுத்துப்பிழையில்லாமல் எழுதத் தெரியவில்லை. இந்தச் சின்னஞ்சிறிய குறைக்காக டெல்ஃபினே உண்மையில் கடவுளுக்கு நன்றி சொன்னாள்.ஏனென்றால், அந்த சிறிய குறை கூட இல்லையெனில், அற்புதத் திறமைசாலியானவளும், தன்னம்பிக்கை மிக்கவளும், அறிவும் ஆரோக்கியமும்உடைய திடகாத்திரமான இரண்டு பையன்களுக்குத் தாயானவளுமான ஏவா, டெல்ஃபினேவால் நெருங்க முடியாத குணக்களஞ்சியமாகி விட்டிருப்பாள்.

தாயில்லாத, உடன் பிறந்த ஒரு சகோதரி கூட இல்லாத நிலையில் தன்னுடைய அப்பாவின் வீட்டில் அவமானத்துக்குரிய அசுத்தங்களை அப்புறப்படுத்திதூய்மையாக்கியவளும், குளிரினாலும், பசியினாலும் இறுகிப் போனவளும், நகரத்து மேன்மக்களால் உதாசீனப்படுத்தப்பட்டவளுமான அவள்,எழுத்துப் பிழைகளோடிருந்த அந்தச் சமையல் குறிப்பிலிருந்து தன்னம்பிக்கை பெற்றாள்.

அடுத்த தடவை வால்ட்ஃவோகலின் கடைக்குப் போனபோது உற்சாகக் குரல் எழுப்பிய அழைப்பு மணியின் கணீர்ச் சத்தத்தை அவள் கவனித்தாள். அவள்அந்தக் கடைக்குள் நுழையவிருக்கிற பல தருணங்களில் அவளால் ஒலிக்கப்படவிருக்கிற அந்த அழைப்பு மணியின் முதல் குரல் இது என அவள்எண்ணினாள். ஆனால், அது அவ்வாறு நடக்கவில்லை. மறுமுறை டெல்ஃபினே அந்தக் கடைக்கு வந்தபொழுது, பின்புறக் கதவின் வழியே கடைக்குள்நுழையும் அளவுக்கு ஏவாவுடன் அவள் ஏற்கனவே மிகவும் பரிச்சயமாகி விட்டிருந்தாள்.

டெல்ஃபினே, வழக்கம் போல் தான் வாங்க வந்திருக்கும் பொருட்களைப் பட்டியலிட்டாள். ஏவாவும் வழக்கம் போலவே அவளை உள்ளேவரும்படியும் காபி சாப்பிடும்படியும் கேட்டுக் கொண்டாள். ரோயின் அறையை மீண்டும் மனிதர்கள் வாழத்தக்க இடமாகச் செய்வதற்கேற்ற முறையில்தூய்மைப்படுத்தக் கூடிய அளவு செயல் திறன் கொண்ட சுத்திகரிப்பான் எதுவும் ஏவாவின் கையிருப்பில் இல்லை. ஏவா அத்தகைய ஒன்றை தானே தன் கைப்படத்தயாரிக்க வேண்டும் என விரும்பினாள்.

"முதலாவதாக நல்ல காடியும் கழுவு நீரும் தேவை. பிறகு, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆற்றல் மிகுந்த அம்மோனியாவை உனக்காக நான்வாங்க வேண்டும். அதிலிருந்து வெளிப்படும் வேதியியல் புகை பற்றி நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு வேளை அதுவும் சரிப்படாவிட்டால் அதிகஆற்றல் மிக்க மாசு போக்கியான கடுங்கார நீரைத்தான் பயன்படுத்த வேண்டும்."

டெல்ஃபினே தலையை ஆட்டினாள். அவளுடைய அப்பா அதையும் எடுத்துக் குடித்து விடக் கூடும் என்ற தன் அச்சத்தை ஏவாவிடம் சொல்ல இயலாமல்அவமானம் அவளைப் பிடுங்கித் தின்றது. ஏவா காபியை உறிஞ்சினாள். இன்று ஏவாவுடைய தலைமுடி எட்டு எண் வடிவத்தில் கொண்டையாகப்போடப்பட்டிருந்தது. அவ்வடிவம், நித்தியத்துவத்தின் புராதன வடிவம் என்பது டெல்ஃபினேவுக்குத் தெரியும். புளிப்பேறிப் பொங்கிக் கிடந்த மாவைத் தட்டிஅழுத்துவதற்காக ஏவா எழுந்து திரும்பி, பச்சை வண்ண சதுரக் கட்டங்களிட்ட லினோலிய விரிப்பின் மீது நடந்து போனாள்.

அதைக் கவனித்துக் கொண்டிருந்த டெல்ஃபினேவின் மூளையில் விருட்டென்று ஒரு விநோத எண்ணம் உதித்தது, மிகத் தீவிரமாக அனுபவித்து உணரப்படும்தருணங்கள் - அதாவது ஏவா திரும்பி நடந்தபோது அவளது தலைமுடியை சூரிய ஒளி சந்தித்து மீள, அந்த நொடியில் நித்தியத்துவத்தின் குறியீடு ஒளி வீசிப்பிரகாசித்ததே - இதுபோன்ற குறிப்பிட்ட கணங்கள் காலங் கடந்து நிற்பவை என்பதே அந்த எண்ணம். கடவுளால் சிதிலப்படுத்தப்பட முடியாததும், எங்கோகாலாதீதத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டதுமான கணங்களின் அடுக்குகளுக்குள் அவர்கள் நிஜமாகவே போய் விட்டார்கள்.

நல்லது. அதுதானே கடவுள். டெல்ஃபினேவின் மனம் விடாப்பிடியாகச் சிந்தித்தது. காலத்தைப் படைத்து, அதன் மூலம் எல்லாவற்றின் முடிவையும்உண்டாக்கியது கடவுள் அல்லவா? நமது வாழ்வே கால வரம்புக்கு உட்பட்டதாக இருக்கும்போது நம்மால் அனுபவிக்கவே முடியாத நித்தியத்துவத்தைப்பற்றி கற்பனை மட்டும் செய்யும் சாபம் நமக்கு ஏன் வாய்த்தது என்பதைத் தெரிவிக்குமாறு தன் புதிய சிநேகிதியிடம் டெல்ஃபினே கேட்க விரும்பினாள்.ஆனால் கூச்சம் அவளைத் தடுத்தது. அத்தகைய மன ஒருமையோடியைந்த கருத்துச் சிதறலுக்குள் அவள் இருந்த சமயத்தில்தான் ஏவாவின் கணவனும், மிகச்சிறந்த கசாப்புக்காரனுமான ஃவிடிலிஸ் வால்ட்ஃவோகலை அவள் சந்தித்தாள்.

அவள் அவனை நேரடியாகச் சந்திப்பதற்கு முன்பே கனத்துத் தாழ்ந்த மேகங்களுக்கு இடையே பாயும் காற்றில் தோன்றும் மின் சக்தியைப் போல அவனைஉணர்ந்தாள். பிறகு அவள் மனதில் பாரமாக உணர்ந்தாள். அவளுடைய உடலை ஈர்ப்பு உணர்வு ஒன்று ஊடுறுவிச் சென்றது. அவன் வாசலை அடைத்துக்கொண்டு நின்றிருந்த வேளையில் அவள் தன்னுள் ஏற்பட்ட அந்த ஈர்ப்பு உணர்வை உதறித் தள்ளுவதற்காக எழுந்து நிற்க முயன்று கொண்டிருந்தாள்.

அவளுடைய உள்ளுணர்வுக்குக் காரணம் அவனுடைய உருவம் இல்லை. அவன் அப்படியொன்றும் அதீதமான உயரமோ, பருமனோ உடையவன் அல்ல.ஆனால் அவனுக்குள் ஏதோ அவனைக் காட்டிலும் பெருத்த ஆகிருதியுடைய மனிதனைப் பிடித்துத் திணித்து வைத்ததைப் போல அவனிடமிருந்து வலிமைவெளிப்பட்டது. ஒரு புறத்தில் அவனுடைய கனமான ஒரு கரம் கொக்கியைப் போலத் தொங்கியது. மறுகரம் அவன் தோளின் மீதிருந்த பெரிய மாமிசத்துண்டத்தைத் தாங்கிப் பிடித்து கொண்டிருந்தது.

அந்த மாட்டின் இடுப்பும் தொடையும் சேர்ந்த பகுதி நூறு பவுண்டுகளோ அல்லது அதைக் காட்டிலும் இரட்டிப்பு மடங்காகவோ இருக்கக் கூடும். காளைமாட்டின் கழுத்து நரம்புகளைப் போல அதிக இரத்தப் பாய்ச்சலால் அவனுடைய கழுத்து நரம்புகள் புடைத்துத் துடித்தன. எனினும் அவன் அதை இலகுவாகவேதூக்கிக்கொண்டிருந்தான். அவன் டெல்ஃபினேவை நோக்கினான். அவனுடைய கண்கள் வெண்ணீலமாக இருந்தன. அவர்களுடைய பார்வைகள் பின்னிப்பிணைந்தன. டெல்ஃபினேவின் கன்னங்கள் செந்நிறமாக மாறின. அவள் முதலில் பார்வையைத் தாழ்த்தினாள். சூரியனுக்கே குறுக்கே மேகங்கள்நகர்ந்தன.

ஜன்னல் விளிம்பில் இருந்த ஜெரேனியம் மலர்கள் தங்கள் சிவந்த வாயைத் திறந்து கொட்டாவி விட்டன. அவனுடைய பார்வை ஏற்படுத்திய அதிர்ச்சிஅவளை ஏவாவின் சிகரெட்டுகளில் ஒன்றை எடுத்துப் பற்ற வைக்கச் செய்தது. அவன் அவள் மீதிருந்து பார்வையை விலக்கித் தன் மனைவியோடுஉரையாடினான். பிறகு, தன்னை டெல்ஃபினேவுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்ளாமலேயே அங்கிருந்து போய் விட்டான்.

அந்தத் திடீர் வேகம், முரட்டுத்தனமாக இருந்தபோதிலும் டெல்ஃபினேவுக்கு மிகவும் வசதியாகவே இருந்தது. ஏற்கனவே அவள் அவனைப் பற்றிதெரிந்து கொள்ள விரும்பவில்லை. அவனை எப்படியும் தவிர்க்க முடியும் என்று அவள் நம்பினாள். ஏவாவோடு தொடர்ந்து நட்புக் கொண்டிருக்கிறவரையிலும் அவளுக்கு விரைவிலேயே வழங்கப்பட்ட வாடிக்கையாளர்களைக் கவனிக்கிற பணியை அவள் மேற்கொண்டிருக்கிற வரையிலும் அவனைத்தவிர்ப்பது அவளுக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை.

அது அப்படித்தான். அதன் பிறகு டெல்ஃபினே கணப்பையும், பாத்திரங்கள் கழுவும் தொட்டியையும், கருவிகள் வைக்கப்பட்டிருந்த அலமாரிகளையும்,கொக்கிகளிலும் அடுக்குகளிலும் நிதானமாகக் காய்ந்து கொண்டிருந்த கழுவிச் சுத்தம் செய்யப்பட்ட முன் உடுப்புகளையும் கடந்து செல்லும் பின் கதவுவழியைப் பயன்படுத்தினாள். அவள், தாள்களும் உபகரணப் பொருட்களும் குவியலாக இறைந்து கிடந்த ஆளோடி வழியே நடந்து போய் ஏவா தனக்குக்கொடுத்திருந்த சிறிய வெள்ளைப் பூக்கள் அச்சிட்ட நீல முன்னுடுப்பைக் கடைக் கதவின் வழியாக கொக்கியிலிருந்து எடுத்தாள். அதை அடுத்து, கல்லாவின்மறுபுறத்திலிருந்து வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் அழைப்பு மணியோசையைக் கேட்டவாறு இருந்தாள்.

ஒரு வாரத்துக்குள் டெல்ஃபினே வழக்கமான வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்களைச் சந்தித்திருந்தாள். பிறகு, அவள் டான்டே மரிகிறிஸ்டீனோவைச் சந்தித்தாள். டான்டே வாடிக்கையாளர் அல்ல. ஃவிடிலிஸின் சகோதரி. ஒரு நாள் பிற்பகல், ஒற்றை மணிச் சத்தத்துடன் ஏதோ அழைப்புமணியே அவளுடைய நளினத்தினால் வாயடைத்தப் போய் விட்டதைப் போல விருட்டென்று டான்டே உள்ளே புகுந்தாள்.

நேராக கொத்திறைச்சிக்குழல் அப்பப் பாளங்கள் வைத்திருந்த கண்ணாடிப் பேழையருகே போய் அதைப் பற்றி வலிந்து திருகிப் பிடித்து இழுத்தாள்.இருந்ததிலேயே சிறந்த இத்தாலிய வகைப் பெரிய வட்ட வடிவத் தின்பண்டத்தைத் தேடி இழுத்து எடுத்துத் தன் கைப்பையில் வைத்துக் கொண்டாள். டெல்ஃபினேபின்னால் நின்று இதனைக் கவனித்தாள்.

உண்மையில் அவள் டான்டேயின் காலணிகளைக் கண்டு பொறாமை கொண்டாள். அவை, மெல்லிய, உயர் தரமான இத்தாலிய வகைத் தோலினால்உருவாக்கப்பட்டு கண்ணையும் கருத்தையும் கவரும்படி பித்தான்கள் பதிக்கப்பட்டவை. அவை, டான்டேவின் நீண்ட குறுகிய பாதங்களுக்கு அழகாகவும்,துல்லியமாகவும் பொருந்தி கண்ணைக் கவரும்படி இருந்தன. அவளுக்குத் தன் சகோதரனின் முகச் சாயல் இருந்ததாலும், அவனுடைய வலிமையானகழுத்தையும் இறுக்கமான மோவாவையயும் அவள் மறுபதிப்பாகக் கொண்டிருந்ததாலும், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் முகம் அவளுக்குஅமையாதிருக்கலாம். மேலும், அவன் முகத்தில் கட்டளையிடும் கம்பீரத்துடன் காட்சியளித்த வெண்ணீலக் கண்கள், அவள் முகத்துக்குப் பிசாசுக் களை கூட்டிடெல்ஃபினேவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தின. ஆனால் அவளுடைய பாதங்கள் மெலிந்தும், அழகாகவும் இருந்தன. அவளுக்கு அதில் தற்பெருமை.அவளுடைய காலணிகள் அனைத்துமே மிக உயர் ரகமான விலையுயர்ந்த தோலினால் ஆக்கப்பட்டவை.

டான்டே தலையைத் திருப்பி தான் அணிந்திருந்த விலங்கின் மென் முடியிலான மேலங்கி சுழல எந்தப் பதிலையும் ஏற்றுக் கொள்ளும் மனமில்லாததோரணையில் "யார் நீ?" என்று கேட்டாள். டான்டே போய் ஏவாவின் சமையலறையை ஆக்ரமித்து நீண்ட நேரம் ஆன பிறகும் அவள் கேட்ட கேள்விடெல்ஃபினேவின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. "யார் நீ ?" என்ற கேள்வி பொதுவாகப் பெரிய பதிலையோ அல்லது சிறிய பதிலையோ உடையது.

டான்டே அவ்வாறாகக் கேள்வியைக் கேட்டு விட்டுப் போன பிறகு மாமிசத்தை துண்டமிடும் இடத்தைத் தேய்த்துக் கழுவியபடி தரையைத் துடைத்து சுத்தம்செய்யத் தயாரான டெல்ஃபினேவின் மனதில் அவள் விட்டுச் சென்ற கேள்வியின் பொருள் விரிந்தது.

டெல்ஃபினே வட்ஸ்கா, நீ யார்? குடிகாரன் பெற்ற குழந்தையா? செயலாளர் பயிற்சிக் கல்வியை இடையிலேயே விட்டு விட்டவளா? எஃகைப் போன்றஉறுதியான வயிறும், தாய்க்காக ஏங்கும் இதயத்தையும் கொண்ட உயிரா? யார் நீ? அல்லது எது நீ? போலந்துக்காரனின் அழுக்கில் உருவானஅழுக்கான போலந்து பிரஜையா? காலி பாட்டில்கள் நிரம்பிய ஓர் அறையும், குடிபோதையில் தரையில் கிடந்து உழலும் தகப்பனையும்கொண்டவள்தானே நீ?

ஃவிடிலிஸின் இந்த வீட்டுக்கோ, இந்தக் கடைக்கோ, குறிப்பாகத் தான் செய்யும் எல்லா செயல்களுக்கும் தானே தலைவனாகத் திகழும் என்சகோதரன் ஃவிடிலிஸின் அருகே நெருங்கவோ உனக்கு என்ன தகுதி இருக்கிறது? அந்தத் தகுதி உனக்கு இருப்பதாக எது உன்னை நினைக்க வைக்கிறது?

ஒரு பாட்டில் பாலை வெடுக்கென எடுத்துக் கொண்டு கையில் தன் நாத்தனார் தயாரித்து வைத்திருந்த புதிய பெரிய ரொட்டியையும் எடுத்துக் கொண்டு டான்டேவெளிப்பட்டதும் அவற்றையெல்லாம் டெல்ஃபினே ஒரு துண்டுச் சீட்டில் எழுதினாள். "டான்டே ஒரு பாட்டில் பாலையும், முதல் தரமான இத்தாலியவகைக் கொத்திறைச்சி குழலப்ப பாளத்தையும் ரொட்டியையும் எடுத்துக் கொண்டாள். அத்துடன் அவள் நிறுத்திக் கொண்டாள்." டெல்ஃபினே இப்படிஎழுதியிருந்தது தெரிந்ததும் டான்டேவுக்குக் கடுமையான ஆத்திரம் பொங்கியது.

டான்டே,பொருட்கள் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவளுடைய கணக்குப்படி அவளுக்குப் பொருட்கள் கொடுக்கப்பட்டாக வேண்டும். அவள் ஒருமுறை தன் சகோதரனுக்குச் சில கருவிகள் வாங்குவதற்காக ஐநூறு டாலர்கள் கடனாகக் கொடுத்திருந்தாள். அவன் அதைத் திருப்பித் தந்து விட்டபோதிலும் அந்தத் தொகைக்கு வட்டியாகவும், தன் கடமையுணர்வை மிக்க வள்ளன்மையை அவனுக்கு நினைவூட்ட வேண்டிய அவள் இத்தகைய வழிகளைக்கையாண்டாள்.

ஏவாவின் இரு மகன்களான ஃராசுக்கும், லூயிக்கும் டான்டேயைப் பிடிக்காது. டெல்ஃபினேவால் அதை உணர முடிந்தது. டெல்ஃபினேவுக்குக்குழந்தைகளைப் பற்றி அதிக விஷயங்கள் தெரியும் என்பதில்லை. அவள் அவர்களோடு அதிகநேரம் இருந்ததில்லை. ஆனால் அவர்கள் ஏவாவின்பிள்ளைகள் என்ற காரணத்தினால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து கொள்வதில் அவள் ஆர்வம் காட்டினாள்.

பதினான்கு வயதான ஃராஸ் திடகாத்திரமாகவும், ஒரு விளையாட்டு வீரனுக்குரிய உடற்கட்டுடனும், எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும்பெருமை மிக்க அமெரிக்கத் தன்மைகளில் ஒன்றான ஒரே வேளையில் ஊடுருவிப் பார்க்க் கூடியதாகவும் அதே சமயத்தில் அறிந்து கொள்ளஇயலாததுமாகிய இயல்புடைய தன் முனைப்புக் கொண்ட சிறுவன். அவனுடைய உள் மனதில் சிந்தனைகளும் கருத்துக்களும் இல்லையா அல்லது அவன்அவற்றை வெளிப்படுத்தவில்லையா என்பதை அவளால் சொல்ல முடியவிலலை.

அவன் அவளைப் பார்த்து எப்போதும் புன்முறுவல் பூத்தபடி மிக இலேசான ஜெர்மானிய வாடையுடன் "ஹலோ" என்பான். அவன் கால்பந்து விளையாடுவான்.உண்மையில் அந்தப் பகுதியில் அவன் ஒரு கதாநாயகனாகத் திகழ்ந்தான். இரண்டாவது பையன் ஒதுங்கியிருப்பவன். தன்னால் முடிந்தபோது தன்னை மறந்துமுரட்டுத்தனமாக விளையாடுவான் என்றாலும், ஒரு தத்துவ ஞானச் சிந்தனையாளனின் இயல்பும், துறவிக்குரிய தன்மைகளும் கொண்டவனாக இருந்தான்.

அவனுடைய மன நிலைக்கு ஏற்றவாறு அவன் பெற்ற மதிப்பெண்கள் ஒர் ஆண்டில் மெத்தச் சரியாகவும், மறு ஆண்டில் மிகக் குறைவாகவும் இருந்தன.அவன் தன் தாயின் நீண்ட கரங்களையும், அவளுடைய செம்பொன்னிறத் தலை முடியையும், மெல்லிய கன்னக் கதுப்புகளையும்,சில சமயங்களில் "என்னமுட்டாள்தனமான தோற்றம்" என்று சொல்வது போன்ற துயரார்ந்த தேடலையும், கேளிக்கையுணர்வையும் வெளிப்படுத்தும் கண்களையும் ஸ்வீகரித்துக்கொண்டிருந்தான். தன் சகோதரனைக் காட்டிலும் அமைதியும் அடக்கம் உடையவனாக இருந்த லூயி மரியாதை மிக்கவனாகவும் இருந்தான்.

தன் அப்பாவுக்காக வெளியே சென்று வரும் வேலைகளை அவன் ஆர்வமுடன் செய்வான் என்றாலும், அவனுக்குத் தாயிடம்தான் ஒட்டுதல் அதிகம். சுருள்தாங்கிகளால் பிணைக்கப்பட்டிருந்த தன் சுருள் முடியைப் போலவே இருந்த அவனுடைய தலைமுடியை அவள் அடிக்கடி கோதி விடுவாள். அவள், அவனைஅணைத்து முத்தமிடும் போதெல்லாம் அவன், எல்லாச் சிறுவர்களும் செய்வது போலவே விலகிப் போய்விடுவான். எனினும் அவளுடைய உணர்வுகளைப்புண்படுத்தாத நாசூக்குடன் அதைச் செய்வான்.

ஆயிரத்து தாாெள்ளாயிரத்து முப்பத்து ஆறாம் ஆண்டு அதீதங்களின் ஆண்டு. அந்த ஆண்டு குளிர்காலத்தில் மின்னசோட்டா மிகமிகக் கடுமையான குளிரைத் தாங்கிக்கொண்டது. இப்போது கொடூரமான வெப்பத்தினால் வாடி வதங்கி மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. தொடர்ந்து வீசிய வெப்ப அலையினால் துப்புரவுப் பணிமேலும் கடினமாகியது. தன் வழியில் குறுக்கிடும் சூழ்நிலைச் சிக்கல்கள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு வெற்றி காண்பவள் என்ற பெருமைகொள்ளும் ஏவாவினால் வழக்கம் போலக் கடையைத் திறம்பட நடத்த முடியவில்லை. இளங்காலை வேளையிலிருந்து ஏவாவுடனேயே இருந்தடெல்ஃபினேவுக்குத் தன் சிநேகிதி படும் துன்பத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

அன்றாட வேலைப் பளுவினால் ஏவாவின் முகம் வெளுத்தது. சில சமயங்களில் அவள், தான் ஒரேஒரு நிமிடமாவது படுத்து ஓய்வெடுக்க வேண்டும் என்றுசொல்வாள். டெல்ஃபினே போய்ப் பார்க்கும்போது ஆழந்த உறக்கத்தில் பிணம் போல் கிடப்பாள். அவளை எழுப்புவதற்கு டெல்ஃபினேவுக்கு மனம்வராது. ஒன்று அல்லது இரண்டு மணி நேர உறக்கத்தக்குப் பின் ஏவா, புது வலிமையோடு கிளர்ச்சியுற்றவளாக மீண்டும் பரபரவென்று வேலைகளில்இறங்குவாள்.

அவர்கள் இறைச்சிக் கொட்டில் தரையை தினம் ப்ளீச்சிங் பொடி போட்டுக் கழுவி விடுவார்கள். மாமிசப் பெட்டிகளுக்கு அதிகமாகக் குளிரூட்டினாலும்அவை வெதுவெதுப்பாகவே இருந்ததால், அவற்றுக்குள்ளிருந்த மாமிசத்தில் அழுகல் ஏதும் இருக்கின்றதா என்று ஒவ்வொரு பெட்டியையும் அன்றாடம்துருவித் துருவிப் பார்க்க வேண்டியிருந்தது. கடைக்கு வந்து சேர்வதற்குள் பால் கெட்டுப் போய் விடுவதால் அவர்கள் மிகக் குறைவான அளவு பாலையேவிற்பனைக்கென்று வாங்கினார்கள். வெண்ணையையும், பன்றிக் கொழுப்பையும் அதிக அளவில் வைத்துக் கொள்வதில்லை.

வெப்பம் நாளுக்கு நாள் தொடர்ந்து மோசமானது. சிறுவர்கள் இருவரும் அரை நிஜார் மட்டுமே அணிந்தபடி மேல் மாடியில் உறங்கினார்கள்.

ஏவா ஒரு மெத்தையையும் போர்வைகளையும் எடுத்துக் கொண்டு போய் அவர்கள் அருகிலேயே படுத்துக் கொண்டாள். திருட்டுப் பயம் காரணமாகஃவிடிலிஸ் மட்டும் துப்பாக்கியுடன் கீழ்த்தளத்திலேயே படுத்துக் கொண்டான்.

சூரியன் உதித்த ஒரு மணி நேரத்திற்கெல்லாம், டெல்ஃபினே வேலைக்குப் புறப்பட்டபோதே, தட்ப வெப்பச் சூழல் சற்று இறுக்கமாகவும்,கடினமாகவும் இருந்தது. "காற்று வீசத் தொடங்கினால் பயங்கரமாக வீசும்". ஃவிடிலிஸ் பொத்தாம் பொதுவாகச் சொன்னான்.

அவன் தன் கத்தி, ரம்பங்களின் கூர் முனைகளை தவறாத ஒழுங்குடன் சாணை பிடித்தவாறு தன் முதுகைக் காட்டியபடி உட்கார்ந்து கொண்டிருந்தான். அந்தநிலையிலேயே பாடவும் ஆரம்பித்தான். அவன் குரல் மிகவும் இனிமையாக இருப்பதை டெல்ஃபினே ஒரு இன்ப அதிர்ச்சி மூலம் உணர்ந்தாள். வழுக்கிவிடும் ரத்தச்சகதி தோய்ந்த அறையிலிருந்து தூய்மையிலும் தூய்மையாக எழுந்த அவன் குரல், கோடையின் தாக்குதலில் பதைபதைத்துப் போயிருந்த அவளைமலைக்க வைத்தது.

உப்பிட்ட பன்றிக் கறித் துண்டத்தை எடுத்து அவள் படாரென உலோக மேடையின் மீது அடித்தாள். அவன் அமைதியானான். அவன் பாடலைக் கேட்கவேண்டிய தேவையில்லாமல் போனது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. வானம் கறுத்து, இலைகள் பழுப்பாகின. வேறு எதுவும் நடக்கவில்லை. மழைசுமந்த கனத்த மேகக் கூட்டம் சாம்பல் பூத்த இரும்பு வண்ணத்தில் வானமெங்கும் வியாபித்திருந்தது. ஆனால் எந்தவித அசைவும் இல்லை. தென்றல்இல்லை, காற்றும் இல்லை. டெல்ஃபினே முகத்தைக் கழுவிக் கொண்டு கதவருகே இருந்த முன்னுடுப்பை எடுத்து அணிந்து கொண்டாள். பிற்பகலில்தரையில் விரித்திருந்த லினோலிய விரிப்பின் மீது புதிய மெழுகு பூசசுவதற்காகப் பழைய பூச்சை சுரண்டி உரித்து எடுத்தாள்.

நுழைவாசல் அருகே ஜன்னலின் பக்கத்திலிருந்த அட்டைப் பலகையில் "திறந்துள்ளது" என்ற வார்த்தையை "மூடப்பட்டுள்ளது" என்ற வார்த்தையால்அவள் மாற்றிப் போட்டபோது தரை ஏற்கனவே உலர்ந்து போயிருந்தது. பிறகு, அவள் அதற்கான ஒரு வாளியில் மெழுகைக் கரைத்து நீண்டதூரிகையினால் முன்னதும் பின்னதுமாக நேர்த்தியான அசைவுகளுடன் அக் கலவையைப் பூசினாள். கல்லா வரையிலும் அவ்வாறு பூசி, பையன்கள் ஈரம்காயாத தரைப் பகுதியில் கால் வைத்துக் கெடுத்து விடக் கூடாது என்பதற்காக வாசலின் குறுக்கே ஒரு பெட்டியை இழுத்து வைத்தாள். வேலையைமுடித்தாள். தன் வீட்டின் புழுக்கத்துக்குள் போய்ச் சேர்ந்தாள்.

மறு நாள், இளங்காலைப் பொழுதில் கடை திறப்பதற்கு முன்னால் போய் அவள் மீண்டும் மறு பூச்சுப் பூசி விடுவாள். அவள் ஏவாவுடன் சேர்ந்து காலைக்காபி குடித்து முடிப்பதற்குள் தரையைக் காய விடுவாள். பிறகு, வாடிக்கையாளர்களின் வருகைக்கிடையே கிடைக்கும் அவகாசத்தில் அவள் மசை எண்ணையும்பூச்சுத் துணியும் கொண்டு தரையை நன்கு பளபளக்கும் வண்ணம் அழகாக மெருகேற்றி விடுவாள். இப்படித்தான் அவள் திட்டமிட்டு வைத்திருந்தாள். அவள்திட்டமிட்டதெல்லாம் நடக்கத்தான் செய்தது. ஆனால் பலவார இடைவெளியில் முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையில் நடந்தேறியது.

மறு நாள் காலை டெல்ஃபினே சமையலறையில் உட்கார்ந்திருந்தபோது சுவர்களை வீழ்த்தி விடுவது போலிருந்தது வெப்பம். கெட்டியான கடுங்காபி அவளைவியர்க்க வைத்தது. மேசையின் மேல் ஏவா வைத்திருந்த பெரிய குடுவையிலிருந்து அவள் சிறிது தண்ணீர் எடுத்துக் குடித்தாள்.

குளிர்ச்சியான காற்றிற்கு இடையே வாராந்திர தேவைக்கான ரொட்டிகளைத் தயாரித்தவாறு ஏவா இரவின் பெரும் பகுதியையும் விழித்துக் கொண்டேகழித்த விட்டாள். "இங்கே பாரு, எனக்கு உடம்பு அவ்வளவாகச் சரியில்லை."

டெல்ஃபினே, ஏவாவின் வார்த்தைகளைச் சரிவரக் கூட கவனத்தில் கொள்ளாத வகையில் அவள் அதைச் சர்வ சாதாரணமான முறையில் சொன்னாள்.பிறகு ஏவா, ஏதோ தான் சொன்னது தனக்கே நினைவில்லை என்பது போல, "எனக்கு உடம்பு அவ்வளவாகச் சரி இல்லை" என்று மீண்டும்முணுமுணுத்தாள். அவள் தன் முழங்கையை மேசையின் மேல் ஊன்றினாள். அவளுடைய கைகள் பீங்கான் கோப்பையைச் சுற்றி அணைத்தாற் போல சுருண்டுவளைந்தன.

"உடம்பு அவ்வளவாகச் சரியில்லையென்றால் என்ன அர்த்தம்?"

"வயிறு வலிக்கிறது, என்னை அப்படியே சுருட்டிப் போடுகிறது. " அவளுடைய மேலுதட்டில் வியர்வை முத்துக்கள் அரும்பின. அது வந்து வந்துபோகிறது. ஏவா மூச்சை இழுத்து அடக்கிப் பின் வெளி விட்டாள். "அங்கே .. " தட்டுக்களைத் துடைக்கும் ஒரு துண்டினால் தன் முகத்தின் வியர்வையைஒற்றி ஒற்றி எடுத்தாள். "ஒரு பிடிப்பு மாதிரி, இன்னும் மாதவிலக்கு நிற்கவில்லை. அதுவும் வந்து போகிறது"

"ஒரு வேளை உங்களுக்கு மாதவிலக்கு விரைவிலேயே நின்று விடுமோ என்னவோ?"

"நானும் அப்படித்தான் நினைக்கிறேன். என் அம்மா ... " என்ற ஏவா தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டி விட்டு மெலிந்த கீச்சுக் குரலில், ஒருபுலம்பல் பேர்வழியின் மீது உனக்கு வெறுப்பு வருவதில்லையா? " என்றாள். அவளை முறுக்கிப் பிழியும் அந்த வலி, மலம் கழித்ததும் சரியாகி விடும்என்பதுபோல இசகு பிசகாக குதித்துஎழுந்து கல்லாவில் இடித்துக் கொண்டு அடுப்பைக் கடந்து சமைலயறையைத் தாண்டி பரபரப்போடு விரைந்தாள். சிலகணங்களில் கவலையற்ற செயல்திறன் மிக்க ஏவாவாகத் திரும்பி வந்தாள்.

"நான் முன்புறம் போய் மெருகேற்றும் வேலையைத் தொடங்குகிறேன். இந்த வெயிலில் இந்நேரத்திற்குள் தரை நிச்சயமாக உலர்ந்திருக்கும்" என்றாள்டெல்ஃபினே.

"நல்லது" என்றாள் ஏவா. ஆனால் தன் கையிலிருந்த காபிக் கோப்பையை சாம்பல் நிற மென்கல் தொட்டியில் வைப்பதற்காக அவளைக் கடந்துபோன டெல்ஃபினேவின் இரு கரங்களில் ஒன்றினைக் கசாப்புகாரனின் மனைவி தன் கைகளால் பற்றிக் கொண்டாள். அவ்வளவு வெம்மை மிக்ககோடையிலும் தன் சிநேகிதியைச் சில்லிட வைக்கும்படி "என்னை டாக்டரிடம் அழைத்து போ" என இலகுவாகவும் சற்றே அலட்சியமாகவும் அவள்சொன்னாள்.

பிறகு இது என்னவோ ஒரு பெரிய தமாஷ் என்பது போல அவள் புன்னகைத்தாள். கீழே தரையில் படுத்து கண்களை மூடி அசைவின்றிக் கிடந்தாள்.

வாடிக்கையாளர் ஒருவரிடம் சரக்கை சேர்ப்பதற்காக ஃவிடிலிஸ் முன்னமேயே வெளியே கிளம்பிப் போய் விட்டிருந்ததால் அவன் அங்கே காணப்படவில்லை.டெல்ஃபினே டாக்டரிடம் போய் விட்டு வீடு திரும்பியபோதும் அவன் வந்து சேர்ந்திருக்கவில்லை. இதற்குள் ஏவாவை காரின் பின் இருக்கையில் அமரச்செய்து, அவளுக்கு மார்ஃபின் மருந்தைக் கொடுத்து, அடுத்து யார் உதவியை நாடலாம், என்ன செய்யலாம் என்பன பற்றிய அறிவுரைகள் அடங்கியகட்டுத்தாள்களுடன் டெல்ஃபினே வந்தாள். முதிய டாக்டரான ஹூச், மருத்துவமனையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்குத் தெரிந்த அறுவைசிகிச்சை நிபுணரிடம் பேசி, ஏவா, வால்ட்ஃவோகல் என்ற நோயாளிக்கு அளிக்க வேண்டிய மருத்துவ சிகிச்சைக்குத் தயாராகும்படி சொல்லி வைத்திருந்தார்.

டெல்ஃபினே லூயியைப் பார்த்து ஃ விடிலிஸிடம் தரும்படி சொல்லிக் குறிப்புச் சீட்டு ஒன்றை எழுதிக் கொடுத்தாள். எளிதில் வளையும் தன்மை கொண்ட உடலைஉடைய லூயி அச்சத்தாலும் நடுக்கத்தாலும் தந் மெல்லிய விரல்களிலிருந்து முதலில் கீழே தவற விட்டு விட்டுப் பிறகு மீண்டும் அதனை எடுத்துக்கொண்டான். நேராகக் காரை நோக்கி ஓடிப் போய், பின் இருக்கைக்கு ஏறி அங்கு மருந்தின் சக்தியால் அமைதிப்பட்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டஏவாவை அவன் தாங்கிப் பிடித்திருப்பதை டெல்ஃபினே பார்த்தாள்.

ஏவா மிக மிக சாந்தமாக இருந்ததைக் கண்டு பையன் ஆறுதல் கொண்டான். எனினும் அச்சிறுவனுக்கு முன்னால் திடீரென்று உறக்கத்திலிருந்துவிழித்துக்கொண்டு விட்டால் மீண்டும் ஏவா வலியை உணர ஆரம்பித்து விடுவதோடு, லூயிக்கும் அது தாளாத மன வலியைத் தந்து விடுமே என்று பதைபதைத்துப் போன டெல்ஃபினே இதுவரை சேகரித்திருந்த தகவல்களை வைத்துப் பார்க்கும்போது , ஏவா பல மாதங்களாகவே நோயினால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும். அவளுடைய நோய் மிக முற்றிய நிலையை அடைந்துவிட்டிருந்தது. அதிர்ச்சி, எச்சரிக்கை உணர்வு ஆகியவற்றால்உந்தப்பட்டதாலும், ஏவாவின் மீது தான் கொண்ட தூய அன்பினாலும் தம்மால் எதுவும் செய்ய இயலாது என்பதைப் புரிந்து கொண்ட நிலையிலும்மருத்துவருக்கே உரிய மனக் கசப்போடு அச்சுறுத்தும் பாணியில் ஹூச் ஏவாவை மிகக் கடுமையாக திட்டித் தீர்த்தார்.

லூயியை வீட்டுக்குள் அழைத்துச் சென்ற டெல்ஃபினே அவனுடைய தலைமுடியைக் கோதி விட முயன்றாள். பழக்கப்படாத அந்தக் கனிவைக் கண்டு பயந்துபோன அவன் அச்சத்தால் தன் உடலை சிலிர்த்துக் கொண்டு அங்கிருந்து துள்ளிக் குதித்து விலகிச் சென்றான். உண்மையிலேயே ஏவாவின் உடல் நிலையில்ஏதோ ஒரு சிக்கல் உள்ளது என்பதற்கான ஒரு அறிகுறியாகவே அவனுக்கு அது இருந்தது.

டெல்ஃபினே தன்னுடைய குறிப்புச் சீட்டில், "ஃவிடிலிஸ், ஏவாவை தெற்கே உள்ள மேயோ மருத்துவமனைக்கு அழைத்துப் போயிருக்கிறேன். அங்கேஅவசர மருத்துவ உதவி கிடைக்கும் என்று டாக்டர். ஹூச் சொல்கிறார். அவள் இன்று காலை மயங்கி விழுந்து விட்டாள். புற்று நோய். நீங்கள் ஹூச்சிடம்பேசலாம்" என்று எழுதியிருந்தாள்.

மோயோ மருத்துவமனைக்குப் போய்க் கொண்டிருந்தபோதுதான் டெல்ஃபினே உண்மையில் முதல் முதலாக அந்தக் கசாப்புக்காரனின் பாடலைக்கவனித்துக் கேட்டாள். இம்முறைதான் அது அவள் மனதில் நிலை பெற்றது. டாக்டர். ஹூச்சின் டிசோட்டாவில் அமர்ந்து தன் காலைக் காற்று மிதிவிசையில் அமைதியாக வைத்து அவள் அழுத்த, வேகமானி மணிக்கு எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி போய்க் கொண்டிருப்பதைக் காட்ட, அவள்தன்னுடைய கிராமஃபோனில் ஆறுதல் தரும் இசைத் தட்டைப் போட்டுக் கேட்பது போல அந்தப் பாடல் தன் மனதுக்குள்ளே மீண்டும்ரீங்காரமிடுவதைக் கேட்டு ரசித்தாள்.

வெளியுலகக் காட்சிகள் மங்கி மசமசத்தன. வயல்கள் கம்பிகள் கொண்ட சக்கரங்களைப் போல் மாறின. வீடுகளும், மாடுகளும், குதிரைகளும்,தானியக் களஞ்சியங்களும் மின்னி மறைந்தன. பிறகு "நில் செல்" எனும் நீண்ட சாலை வந்தது. அன்று காலை கொலைக்கள கொட்டிலின் கடுமைச் சூழலில்அவனுடைய வளமான குரலில் உச்ச நிலையைத் தொட்டு அவன் பாடிய இனிய இசையோடு கூடிய கருத்துச் செறிவான பாடலை மனதாரப் பாராட்டக் கூடமுடியாதவாறு தாங்கவொண்ணாக் கோடை வெப்பத் தாக்குதலால் தளர்ந்து போயிருந்த அவள் அதே பாடலை வழி நெடுக மீண்டும் மீண்டும் தன்மனத்திற்குள் இசைத்து ரசித்தவாறு இருந்தாள்.

"டி கெடாங்கன் ஸிண்ட் ஃப்ரை" என்று அவன் பாடியதும், ஏதோ ஒரு அழகிய தேவாலயத்தின் மாடத்துக்குக் கீழே இருந்து அவன் பாடுவது போலஅறையின் சுவர்கள் ஒவ்வொரு சுரத்தையும் உயர்த்திக் காட்டின. ஒரு கொலைக்களக் கொட்டில் மாதா கோவிலுக்குரிய ஒலியியல் சாத்திரம் சார்ந்தசெவிப்புலன் இசையுடன் இருக்கும் என்று யாரால் நினைக்க முடியும்?

அவள் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தபோது அவளுடைய மனதில் அந்தப் பாடல் உருண்டு கொண்டேயிருந்தது. தன்னுடைய குறைவான ஜெர்மானிய மொழிஅறிவைக் கொண்டு அவள் அந்த ஜெர்மானிய மொழிப் பாடலின் வார்த்தைகளைக் கோர்வையாக்கினாள்.

"டி கெடாங்கன் ஸின்ட் ஃபரை வேர் கன் ஸி ரொட்டன் ?/ ஸி ஃபிலிஹன் வோர்பை/வி நேஹ்டிலிட்சே ஷாட்டன்"என்பவையே அந்த வார்த்தைகள் என்று அடையாளம் கண்டு கொண்டாள்.எண்ணங்கள் சுதந்திரமானவை.. அவைஇரவின் நிழல்களைப் போல பறக்கின்றன.

பட்டுப் போயிருந்த பயிர்கள் வயல்களில் வரிசை வரிசையாக அசைந்தன. காற்றுவெளியேற்றுக் குழாய் சூடானகாற்றை மேலும் சூடாக்கியது. திறந்த ஜன்னல்களின் வழியே காற்று மோதி ஓசையெழுப்பியது. இறுதியாக மழைபொழியத் தொடங்கியபோது கூட டெல்ஃபினே ஜன்னல் கதவை உயர்த்தவில்லை. தேனீக்கள் கொட்டுவதைப்போன்று மழைத் துளிகள் அவள் கன்னப் பகுதியில் பட்டுத் தெறித்தது. அவளை உஷார்படுத்தும் அளவுக்குஅவளுடைய கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.

எப்பொழுதாவது அவளுக்குப் பின்னால் ஏவா முனகினாள். ஒரு வேளை மார்ஃபின் அவளுடைய வலியைகுறைத்ததோடு மட்டுமல்லாமல், அவளுடைய மனக் கட்டுப்பாட்டையும் தளர்த்தி விட்டிருக்கக் கூடும். ஏனெனில்,ஈரக் காற்று எழுப்பிய தொடர் ஒலியுனூடே டெல்ஃபினே ஏவாவிடமிருந்து வெளிப்பட்டிருக்கக் கூடியதான ஓர்ஓசையையும் கேட்டாள். அது ஓர் உறுமல். ஆம் அவள் வலியே ஒரு விலங்கு போலவும், அவள் அந்த விலங்குடன்மற்போர் செய்து அதைத் தரையில் சாய்த்து விட்டதைத் தொடர்ந்து வந்த உறுமல் ஓசையைப் போலிருந்தது அந்தஓசை.

அறுவை மருத்துவத்தைத் தொடர்ந்து ஏவாவுக்கு முதல் சிகிச்சையாக அவளுடைய கர்ப்பப் பைக்குள் ஜெர்மன்வெள்ளியிலான இரேடியம் கொண்ட உள்ளீடற்ற பல உலோகக் குழல் உருண்டைகள் செலுத்தப்பட்டன. ஏவாமருத்துவமனையில் தங்கியிருந்த அந்த வாரங்களில் அக்குழல்கள் பலமுறை வெளியே எடுக்கப்பட்டுத்திரும்பவும் நிரப்பப்பட்டு மீண்டும் செலுத்தப்பட்டன. அவள் வீட்டுக்கு அனுப்பப்பட்டபோது அவள் மீது வெந்துகருகிய பானையைப் போல் தீசல் வாடை வீசத் தொடங்கிற்று.

"மோசமான சமையலில் தீய்ந்து போன வாடை வீசுவதைப் போன்றே என் உடலிலிருந்தும் தீசல் வாடை வீசுகிறது.மருந்துக் கடையிலிருந்து கொஞ்சம் லைலாக் அத்தர் வாங்கி வா" என்றாள் அவள். டெல்ஃபினே, ஒரு பெரியசெந்நீலவண்ணக் குப்பியில் மண நீரை வாங்கினாள். அதைக் கொண்டு ஏவாவின் உடலை சுத்தம் செய்த போதிலும்அது ஏதும் பலன் அளிக்கவில்லை. பல வாரங்கள் ஏவாவின் மலத்தில் கரியும் ரத்தமும் கலந்து வந்துகொண்டிருந்தன. அந்தத் தீசல் வாடையும் நின்றபாடில்லை. புற்று நோய் பரவியது. அடுத்து, டாக்டர் .ஹூச்அவளுக்கு மாதாந்திர சிகிச்சையாக இரிடியம் முனை கொண்ட இருப்பத்து நான்கு காரட் தங்க ஊசிகளின்வழியாக இரேடியத்தை அவளுடைய புதிய புற்று நோய்க் கட்டிகளின் மீது, தன் விரல்களில் சூடு பட்டு விடாமல்இருப்பதற்காகச் சாமணத்தின் மூலம் செலுத்தி வந்தார். அவள் அந்த சிகிச்சையை அவருடைய அலுவலகத்திலேயேபெற்று வந்தாள்.

சிகிச்சையின்போது ஒரு மேசையோடு அவளைப் பிணைத்து ஊசி நுழையும் வலி தெரியாமல் இருப்பதற்காக ஈதர்செலுத்தப்பட்டு அவள் எழுந்த பின் மார்ஃபின் ஊசி போடப்படும். டெல்ஃபினே அவளுடன் உட்கார்ந்திருப்பாள்.ஏனென்றால் ஊசிகள் தொடர்ந்து ஆறு மணி நேரம் குத்தப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும்.

ஒரு முறை கொஞ்சம் மயக்கம் கலைந்து லேசாக எழுந்திருந்த ஏவா, "நான் இப்போது பாழாய்ப்போன குண்டூசிதாங்கியாகி விட்டேன்" என்றாள். பிறகு அவள் மீண்டும் தன் அமைதியற்ற கனவில் மூழ்கிப் போனாள்.டெல்ஃபினே படிக்க முயன்றாள். ஆனால் ஊசிகள் ஏவாவின் உடலுக்குள்ளே நுழைந்தபோது தன்னுடையவயிற்றிலேயே கத்தியால் குத்தப்பட்டாற் போன்ற வலியை டெல்ஃபினே உணர்ந்தாள்.

ஏவாவின் முகத்தில் மார்ஃபின் தோற்றுவித்த வியர்வை முத்துக்கள் கூட டெல்ஃபினேயின் முகத்திலும் அரும்பின.நிலைமைக்கு மிகவும் பொருத்தமானதென அவளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனையை அவள் எல்லாவேலைகளையும் முடித்துக் கொண்டு இறுதியாகத் தன் வீட்டை நெருங்கிய வேளையில் தினந்தோறும் சொன்னாள்."உன் கண்ணில் எச்சில் துப்பு" அந்த வசவு அவளுடைய உணர்வுகளின் ஆழத்தை முழுமையாகவெளிப்படுத்தவில்லை. அது ஒன்றும் பெரிய வசவல்ல. ஆனால் அவள் ஒரு பாசாங்குக்காரியல்ல. பிரார்த்தனைசெய்வது போலக் கூட அவள் ஏன் நடிக்க வேண்டும்? அது டான்டேயின் வேலையாயிற்றே.

டான்டே, லூத்தரன் எனப்படும் பிராட்டஸ்டண்டு பிரிவைச் சேர்ந்த பக்தி மிகுந்த பெண்களின் கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு, கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த ஏவாவை மதமாற்றம் செய்ய முயல்வதற்காகச் சில தினங்கள் பிற்பகல்வேளைகளில் அங்கே வருவாள். அவர்களை விரட்டி விட முடியாத அளவு ஏவா பலவீனமாகிப் போன பிறகு ,அவர்கள் படுக்கையைச் சுற்றித் துருக்கிய வல்லூறுகள் போல வட்டமிடுவதைத் தடுத்து நிறுத்துவதற்காகடெல்ஃபினே தனக்குத் தோன்றியவற்றையெல்லாம் செய்து வந்தாள். அவர்களுக்குச் சாப்பிட எதையாவது தருவதுஎன்பது அவளுடைய மிகப் பெரிய தந்திரம்.

ஏனென்றால் சமையலறையில் ஏதோ தின்பண்டம் இருக்கிறது என்பது தெரிந்த உடனேயே அவர்கள் வரிசையாகவேக வேகமாக வெளியேறி விடுவார்கள். ஏவா அவதியுறும் வலியில் தாங்கள் ஆனந்தம் கண்டும், அவளுடையதலை சிறந்த தயாரிப்பான லின்ஸர் டோர்ட் பலகாரத்தை விழுங்கிய பிறகு அந்த பலகாரத்தின்செய்முறையைத்தான் ஏவா டெல்ஃபினேவுக்கு எழுதிக் கொடுத்திருந்தாள். அவர்கள் டான்டே ஏவாவின்படுக்கையறையிலிருந்து ஒவ்வொரு அடியாக மெதுவாக நகர்த்தி அழைத்துக் கொண்டு போவாள்.

டெல்ஃபினே இரத்தக் கறை படிந்த முன்னுடுப்புகளை வெளுத்து சுத்தம் செய்தாள். அழுக்கேறிய காலுறைகளைத்துவைத்தாள். பையன்களுடைய கறை படிந்த நிஜார்களையும், ஒற்றைப் பட்டை கொண்ட நீளங்கிகளையும் சுத்தம்செய்தாள். அவர்களுடைய நல்ல கோட்டு சூட்டுகளை பூச்சுருண்டை போட்ட பெட்டிகளிலிருந்து எடுத்துக்காற்றோட்டமாக உலர்த்தி, மடித்து, பெட்டி போட்டு வைத்தாள். அதுவரை ஏவா செய்து வந்தது போலவே,ஃவிடிலிஸின் தடினமான வெள்ளைப் பருத்திச் சட்கைளுக்கு கஞ்சி போட்டு வைத்து, ஒவ்வொரு நாள் காலையும்ஒரு சட்டையை அவனுக்குத் தோய்த்துக் கொடுத்தாள் டெல்ஃபினே.

போர்வைகளிலிருந்த வியர்வை, மலம், இரத்தம் ஆகியவற்றை அகற்றினாள். பெரும்பாலும் இரத்தக் கறையேஅதிகம் இருந்தது. துவாலைகளையும், மேசை விரிப்புகளையும் சுத்தப்படுத்தினாள். இந்தத் துவைத்தல் பணிவிடைபெற்றுச் செல்லவிருக்கும் அவள் தரும் ஒரு வகையான பரிசாகும். ஏவா சென்ற பின் டெல்ஃபினேவும்கிளம்பி விடுவாள். ஃவிடிலிஸிக்கு உதவி செய்ய வேறு நபர்கள் இருந்தார்கள். பையன்கள், ஃவிடிலிஸிக்கு உதவிபுரிவதாகப் பாவனை செய்யவும், அதன் மூலம் தன்னுடைய கடமை உணர்வையும், பக்திப் பகட்டையும் காட்சிப்பொருளாக்குவதற்காகவும் டான்டே கட்டாயமாக உள்ளே நுழைந்து விடுவாள் என்பதில் டெல்ஃபினே நிச்சயமாகஇருந்தாள்.

உண்மையிலேயே சகித்துக் கொள்ள முடியாத ஒரு மொடாக் குடியனாக அவன் இருந்தான் என்ற ஒரேகாரணத்துக்காக அந்த ஊர்க்காரர்கள் யாருக்கும் ரோய் வட்ஸ்காவை அடியோடு பிடிக்காமல்போகவில்லை.இதற்குப் பல காரணங்கள் இருந்தன.

முதலாவதாக, அவனுக்கு ஏற்பட்ட இழப்பே அவன் பெருத்த சரிவுக்கு ஆளாகி, எல்லோராலும்புறக்கணிக்கப்பட்டுத் தத்தாரியாகிப் போனதற்குக் காரணம். தன்னையே அழித்துக் கொள்ளும் அளவுக்கு அவன்காதலித்திருக்கிறான் என்ற உண்மை பல பெண்களின் ஆழ் மனதில் ஒருவித அனிச்சை அம்சமாகப்பதிந்திருந்ததனால் அவன் போதை தலைக்கேறிக் கிடந்த வேளைகளிலும் அவனுக்கு எப்படியாவது சாப்பிடத் தீனிகிடைத்துவிடும்.

அவன் குடிபோதையில் திளைத்து மூழ்கிப் பின் தெளிந்ததும் சாப்பிடுவதற்காக பெண்கள் அவனுக்கு பன்றிஇறைச்சி அல்லது குளிர்ச்சியான பீன்ஸ் பருப்பினால் ஆன சான்ட்விச்சுகளைக் கொடுத்தார்கள்.

இன்னொரு காரணம் என்னவென்றால் அபூர்வமாக ரோய் வட்ஸ்கா நிதானத்துடன் இருந்த குறுகிய காலத்தில் மிகமிகக் கடுமையாக உழைக்கக் கூடிய வலிமையையும் திறமையும் பெற்றிருந்தான். வியக்கத்தக்க அளவுக்குஅதீதமாக உழைக்க அவனால் முடியும். மேலும் அவன் அருமையாகக் கதைகள் சொல்பவன். அவன் ஒருஅல்பமான குடிகாரனோ கட்டுக்கடங்காத முரடனோ, கோபக்காரனோ இல்லை. ஒரு மகள் என்ற அளவில் ஒருபெண் எதிர்கொண்டு சகித்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு மீறிய சிக்கல்கள் அவன் வாழ்க்கையில் சற்றுக்கூடுதல்தான் என்ற போதிலும், அவன் டெல்ஃபினேவை மிகவும் நேசித்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஏவாவுக்கு அவனைப் பிடிக்கும். அவள், அவனுக்காக வருந்தினாள். எப்படியாவது அவனுக்கு எப்போதும் உணவுஅளித்து வந்தவர்களில் அவளும் ஒருத்தி. இப்போது அவளே சிக்கலுக்கு ஆளாகி விட்டதால் ரோய் வேறு ஒருநோக்கத்தோடு அநேகமாக ஒவ்வொரு நாளும் பிற்பகலில் கடைக்கு வந்தான். சில வேளைகளில் குடி நெடியுடன்.ஆனால் அங்கு போய் விட்டால் அவன் எந்த வேலையும் செய்வான். அவுட்ஹவுசை ஒதுங்கெடுத்து சுத்தம் செய்து,குடல் முதலியவற்றை வெட்டி எறிந்து மாமிசத்தை தயார் செய்வான். புறப்படுவதற்கு முன்பு ஏவாவிடம் வந்துஉட்கார்ந்து தான் இளைஞனாக இருந்தபோது தனக்கு நேர்ந்தவற்றைப் பற்றியெல்லாம் கிறுக்குத்தனமானகதைகளைச் சொல்வான்.

படிப்பற்குத் தான் பயிற்சியளித்த காயடித்த செல்ல ஆண் பன்றி, வாலில் கலகலவென ஒலி செய்யும் முள்வளையங்கொண்ட சங்கிலிக் கருப்பன் எனும் பாம்பிடமிருந்து எப்படி நஞ்சை எடுப்பது, தனக்கு ஓநாய்களின்மொழியைச் சொல்லிக் கொடுத்தவனும் ஒரு காலத்தில் தான் அறிந்திருந்தவனுமான உண்மையான ஓநாய் மனிதன்,இலத்தீன் மொழியில் பூக்களின் பெயர்கள், மேலும் அவை எங்கெங்கிருந்து வந்தன என்பதைப் பற்றியெல்லாம்அவன் பேசுவான்.

அவற்றைக் கேட்டு அவனுடைய பல் துறை அறிவு பற்றி சில வேளைகளில் மகிழ்ச்சியும், சில வேளைகளிைல்வெறுப்பும் கொண்டாள் டெல்ஃபினே. அவன் அவற்றையெல்லாம் எங்கே கற்றிருந்தான்? மது விடுதிகளில்என்றான் அவன். தன் வாழ்நாள் முழுதையும் அவன் அசுத்தப்படுத்தியவற்றைத் தூய்மைப்படுத்துவதற்காகவேடெல்ஃபினே செலவிட்டிருந்த போதும், அவன் அவளிடம் இப்படியெல்லாம் பேசியதே இல்லை.

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஃவிடிலிஸின் கருப்பு மண் நிறத்திலான பீர்பானத்தைக் கொண்ட பாட்டிலைடெல்ஃபினேவும், ஏவாவும் தத்தம் பாதங்களுக்கிடையே இறுகப் பற்றியவாறு ஏவாவின் தோட்டத்தில் உடைந்தநாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள்.

வாளியில் எரிந்து கொண்டிருந்த சிட்ரோனெல்லா எண்ணெய்யாலும், செடியிலிருந்து ஏவா ஒடித்தெடுத்துத் தங்கள்தலைமுடியில் செருகிக் கொண்டிருந்த துளசிக் கொத்துக்களாலும் கொசுக்களிடமிருந்து அவர்கள்பாதுகாக்கப்பட்டனர். டெல்ஃபினே ஓர் எளிமையான ஆடையையும் முன்னுடுப்பையும் குதிகால் குறைவானபச்சை வண்ண குழாய்ச் செருப்பையும் அணிந்திருந்தாள். ஏவா ஒரு நைட் கவுனையும் மெல்லிய கம்பளசால்வையையும் அணிந்திருந்தாள். அவள் கால்களில் அணிந்திருந்த ஜப்பானிய காலணிகளினூடே பாதங்கள்வெளியே தெரிந்தன.

இலையட்டை எனப்படும் நத்தைகள் ஓடற்று நிர்வாணமாகவே இருந்தன. தலையில் இரு கொம்புகளைக்கொண்டவையும், வலிமையற்றவையுமான அவை, உரமாகப் பயன்படட்டுமே என்று ஏவா போட்டு வைத்திருந்தஅடர்ந்த வைக்கோல் மற்றும் சிறு துண்டுகளாக்கப்பட்ட கிழிந்த செய்தித்தாள்கள் ஆகியவற்றுக்கு இடையேவாழ்ந்து வந்தன. அவை, ஏற்கனவே புதிய நாற்றுகளில் பலவற்றை அடிமுதல் முடிவரை தின்று தீர்த்துவிட்டிருந்தன. அவற்றை அழித்து விடுவதாக ஏவாவும் சபதம் செய்திருந்தாள்.

மோதகங்கள் வைத்திருந்த தட்டில் சிறிது பீரை ஊற்றியபடி அவள் சைகை மூலம் தன் பீன்ஸ் செடிகளைக் காட்டி"அவற்றின் கடைசி விருந்து, இப்போது அவை அழிக்கப்படுகின்றன" என்றாள்.

கடையில் புதிதாகக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடியாலான குளிர்ப் பதனப் பெட்டியில் பீர்குளிரூட்டப்பட்டிருந்தது. அதை இலையட்டை நத்தைகளுக்காக வீணாக்குவது அவமானகரமாகப்பட்டது.பண்ணையின் வேலியடைப்பின் ஊடே சாய்வான சூரியக் கதிர்கள் பட்டுக் கொண்டிருந்த வேளையில் இரண்டுபெண்கள் மெதுவாக பீரை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

"நாம் உப்பைத் தூவி அவற்றைச் சுருங்கிப் போகச் செய்திருக்கலாம்" என்றாள் டெல்ஃபினே. பிறகு அவளுக்குள் ஓர்எண்ணம் உதித்தது. "நாம் ஏவாவின் மரணத்துக்கு மிக அருகில் இருக்கிறோம். ஆதரவற்ற உயிர்களின் மரணத்தைச்செளகர்யமானதாகவாவது ஆக்கக்கூடிய நிலையில் இருக்கிறோம்." அவள் மேற்கொண்டு எதையும்சொல்லவில்லை.

ஏவாவின் தோட்டம் அவளுடைய அற்புதமான நிர்வாகத்திறன் இருண்ட மறுபக்கத்தைப் பிரதிபலிக்கும்படிமட்டமான நிலையில் இருந்தது என்பது டெல்ஃபினேவின் எண்ணம். அங்கு எல்லாமே சீரற்று, ஒழுங்கின்றி,ஏவாவின் இயல்புக்கு முற்றிலும் மாறாக இருந்தன. அது குப்பைக் கூளங்களினால் செழித்துக் கிடந்தது.பானைகளின் அழுக்கு, தேயிலைத் திப்பி, வெள்ளரிக்காய்த தோல் போன்ற குப்பைகள் சேர்ந்து, தாறுமாறாகப்புதைக்கப்பட்டும் சில வேளைகளில் ஆங்காங்கே குவிக்கப்பட்டும் கிடந்தன.

கொப்பளிக்கச் செய்யும் மின்னசோட்டா வெயிலில் கீழே கிடந்தவையெல்லாம் மக்கி அழிந்து போயின.முறைமையற்ற தன்மையே ஏவாவின் முறைமையாக இருந்தது.

இயற்கையின் போக்கிலேயே எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும். கசாப்புக் கடையில் பலியான உயிர்களின்பயன்படாத உள் உறுப்புகளை உரமாகக் கொண்டு வளர்ந்தன, அவளுடைய ஆப்பிள் மரங்கள். இளம் காளைமாடுகளின் ரத்தம் செல்லும் ஓடையருகே வளர்ந்திருந்த ரோஜாப்புதர்கள் தீய குறியாக தோற்றம் அளிக்கும்வகையில் மிக மிகப் பெரிய அளவில் கொழுத்து மலர்ந்திருந்த ரோஜாப் பூக்களால் போர்த்தப்பட்டிருந்தன.சிறுவர்கள் வளர்த்த நாய், ஏதோ ஒரு பழைய நாய் புதைத்து வைத்திருந்த எலும்புகளைத் தோண்டியெடுத்துவெளியே போட்டு விட்டு, மீண்டும் அவற்றைப் புதைக்க மறுத்தது.

இளவேனில் காலத்தில், பனி உருகியபின், தொடை எலும்புகளும், மார்புப் பகுதியின் சாவி போன்ற எலும்புகளும்,குளம்புகளுமாகப் பரவலாக இறைந்து கிடைப்பதைப் பார்க்கப் பயங்கரமாக இருக்கும் என்று டெல்ஃபினேநினைத்தாள். ஆங்காங்கே சிதறிக் கிடந்த பிணங்கள், இறுதித் தீர்ப்பை எதிர்கொள்ள வேண்டி உயிர்த்தெழுந்துதங்களுக்குப் பொருத்தமான உறுப்புகளைத் தேடி மாற்றி அமைத்துக் கொள்வது போல இருக்கும்.

டெல்ஃபினேவுக்கு எப்பொழுதுமே விதியைப் பற்றி சிந்திக்கிற இயல்பு உண்டு. ஏவாவின் நோய்டெல்ஃபினேவின் மனதை இறப்பைப் பற்றிய எண்ணத்திலேயே எல்லா நேரமும் நிலை பெறச் செய்ததனால் அவள்இப்போது அடிக்கடி அதைப் பற்றியே யோசிக்கவும், எந்த ஒரு மனிதராலும் எப்படித்தான் வாழ முடிகிறது என்றுஎண்ணி அவளை வியக்கவும் வைத்தது. வாழ்க்கை என்பதே விலை மதிப்பற்றதும் வியப்பூட்டவல்ல துணிவார்ந்தவீரமிக்க அருந்திறச் செயற்பாடுதான். அந்த அளவில் அவள் நிகழ்வற்கரியது என்பதை இலையட்டைகளின்விருந்தைப் போன்ற விநோதமானதாகக் கண்டாள்.

ஏவா குனிந்து தன் சிறிய மண்வெட்டியால் கொஞ்சம் மண்ணை எடுத்துத் தன் கையிலிருந்த கால் பங்கு பீர்நிரம்பியிருந்த பாட்டிலில் திணித்து அதனை ஒரு பொறி போலாக்கி, ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் பாணியில்,சந்தோசமாகச் சாவுங்கள் என்றாள். முக்கால்பாகம் நிரம்பியிருந்த தன்னுடைய பாட்டிலையும் டெல்ஃபினே எடுத்துக்கொடுத்தாள்.

அதை அவள் சுரைக் கொடி வகைகள் படர்ந்திருந்த குன்று போன்ற இடத்தில் பதித்தாற் போல வைத்தாள்.அவற்றை பார்ப்பதற்குத் தான் உயிரோடு இருக்கப் போவதில்லை என்ற போதிலும், அவை அடுத்தஇலையுதிர்காலத்திற்குள்ளாக வளர்ந்து பெருகி உதிர்ந்து தோட்டம் முழுக்க நிறைந்து விடும். அவளுடையநாற்காலியின் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னப்பட்டிருந்த கித்தான் துணிப் பட்டைகளான சாய்மானத்தில் அவள்சாய்ந்து உட்கார்ந்து மேலும் ஒரு பாட்டிலைத் திறந்தாள். அது அவளுக்கு நல்ல நாள். மிக நல்ல நாள்.

நான் கிளம்புகிறேன் என்று டெல்ஃபினே வாயளவில் சொன்னாள். எனினும் மாலை மயங்கி சூரியன் மறைந்துஇருள் படரும் வரை தொடர்ந்து அங்கேயே ஏவாவுடன் உட்கார்ந்திருந்தாள். வர இருக்கும் வாரங்களில் எந்தக்கணமும் இவ்வளவு அமைதியாக இராது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள் போலும். மேலும் அச்சம் தரும்இரவுகளில் இந்த மணித்துளிகளை அவர்கள் நினைவு கூர்வார்கள் என்பதையும் அவர்கள் இருவருமேஅறிந்திருந்ததைப் போலத் தோன்றியது. அவர்களைச் சுற்றியிருந்த காற்று எப்படி நீல மயமானது..,முற்றத்தின் மறுமுனையில் இருந்த மூடியோடு கூடிய விளக்கைச் சற்றி சிறகுகளை அசைத்தவாறு பார்வையற்ற விட்டில் பூச்சிகள்பார்வைக்குத் தென்படாமல் எப்படி வெளிவந்தன!

டெல்ஃபினே கண்களை மூடினாள். அவள் மனம் விழித்துக் கொண்டது. அவளைச் சுற்றி எங்கும் எவ்வளவுவிரைவாக வடிவங்கள் தோன்றி மறைந்தன என்பதை அவள் உணர்ந்தாள். அது அவளுடைய கட்டுப்பாட்டையும்அவளுடைய பார்வையின் எல்லையையும் கடந்து அப்பால் தொடர்ந்து சென்று கொண்டேயிருந்தது. தன்னுடையகசங்கிய ஆடையையும் தேய்ந்து போன பச்சை நிற புதை செருப்புகளையும் மட்டும் விட்டு விட்டு தான் ஒருதோலினால் செய்யப்பட்ட படகைப் போல ஒரு போதும் திரும்பிவராமல் ஒரேயடியாக மிதந்து போய் விட முடியும்என்பது போல அவளுக்குத் தோன்றியது.

ஏவாவின் குரல் டெல்ஃபினேவுக்குக் கேட்டது.

மனசு அப்படியே இருக்கும் என்று நான் படித்தது உண்மையில்லாமல் போயிற்றே என்று வருத்தப்படுகிறேன்.மூளை, படிக்கக் கண்கள் என்ற ஏவாவின் குரல் டெல்ஃபினேவுக்குக் கேட்டது. அவ்வளவு மாமிச வகைகள், பன்றிக்கறி, ஆகியவற்றையெல்லாம் திட்டமிட்டுக் கணக்கு பார்த்து விற்றது வெறும் வீணடிக்கப்பட்ட முயற்சியேயானால்தான் ஒரு விலங்காகவோ, தாவரமாகமாவோ ஆவதை தன் தோழி பொருட்படுத்த மாட்டாள் என்று டெல்ஃபினேசில சமயங்களில் நினைத்திருந்தாள். அவன் தன் மரணத்தை ஏளனப்படுத்திப் பரிகசித்தாள். ஆனால் இதற்கு முன்எப்போதும் வெளிப்படுத்தியிராத ஒரு குறிப்பிட்ட அச்சத்தை அல்லது ஆர்வத்தை அவளுடைய இந்தப்பேச்சுவெளிப்படுத்தியது.

"உங்கள் மனம் அப்படியே நிலை பெற்றிருக்கும். அங்கே நீங்கள் கீழ் உலகில் மக்கள் செய்யும்பைத்தியக்காரத்தனங்களை பார்த்தபடி வில்யாழ் வாசித்துக் கொண்டிருப்பீர்கள்" என்று எவ்வளவுக்கெவ்வளவுசாதாரணமாகசொல்ல முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு சாதாரணமாகச் சொன்னாள் டெல்ஃபினே.

"என்னால் ஒருபோதும் வில்யாழை வாசிக்க இயலாது. எனக்கு அவர்கள் வேறு குழலிசைக் கருவியை தருவார்கள்என்று நினைக்கிறேன்" என்றாள் ஏவா.

"எனக்கும் ஒரு மேகத்தை இடம் பிடித்து வையுங்கள். நானும் உங்களோடு சேர்ந்திசைக்கிறேன்" என்றாள்டெல்ஃபினே. அது ஒன்றும் பெரிய வேடிக்கை இல்லையெனினும் அவர்கள் இருவரும் கண்களிலிருந்து நீர் வரும்வரை தொடர்ந்து உரக்கச் சிரித்தார்கள். பிறகு மூச்சிரைக்க அவர்கள் முழு மெளனத்தில் ஆழ்ந்தார்கள்.

"பையன்கள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் ஏற்கனவே பாதியளவு போதையில்ஆழ்ந்து விட்டார்கள்" என்றாள் டெல்ஃபினே. அது செப்டம்பர் மாதத்தின் முதல் வார இறுதி, விடுறை தினம்.ஃவிடிலிஸ் , சமையல் அறையை அடுத்து ஏவாவுக்கென்று ஏற்பாடு செய்த படுக்கையின் அருகே இருந்த ஜன்னல்வழியே வெளியே எட்டிப் பார்க்க வேண்டி, எழுந்து உட்காருவதற்குச் சிரமப்பட்டுப் போராடிக் கொண்டிருந்தஏவாவுக்கு, ஒத்தாசை செய்து உட்காரச் செய்தாள் டெல்ஃபினே. ஏவா, பலவீனமாகப் புன்னகைத்து விட்டுஜன்னலுக்கு வெளியே தெரிந்த காட்சியைப் பார்த்து தலையசைத்தவாறு மீண்டும் சரிந்தாள்.

"ஆண்கள் எவ்வளவு மடையர்கள்,நெல்லிப் புதர்களில் தெள்ளத் தெளிவை ஒளித்து வைத்து விட்டு தங்களைப்புத்திசாலிகள் என்று எண்ணிக் கொள்கிறார்கள்" என்று முணுமுணுத்தாள். அவளைக் காப்பாற்றுவது என்றபேச்சுக்கே இடமில்லை. அவர்கள் அந்த நிலைகளையெல்லாம் தாண்டி விட்டார்கள். கடந்த சில தினங்கள்பெருங்கவலை தந்தன எனினும் ஏவா ஒரு மன நிலை திரிந்த நோயாளியாக இறக்க விரும்பவில்லை. சிலவேளைகளில் அவள் வலியைக் கண்டு விநோதமாகச் சிரித்தும் தன் நிலை குறித்துத் தானே கிண்டலடித்துக்கொள்வாள். சம்பவிக்கப் போகும் முடிவு மிகவும் சமீபத்து வரும் இந்த சமயத்தில் அவளுடைய இந்தப் போக்குமேலும் அதிகரித்தது.

அவர்கள் நண்பகலிலேயே கடையை மூடி இருந்தனர். நகரத்தினர் அனைவரும் விழாக் கொண்டாட்டத்தில்இருந்தார்கள். ஃவிடிலிஸ் பழைய மேசை நாற்காலிகளை எடுத்து முற்றத்தில் போட்டு, மேசையின் மீது கோடைகாலக் கொத்திறைச்சிக் குழலப்பப் பாளத்தையும், பீர் , ஒரு தர்பூசணிப் பழத்தையும் கிண்ணங்கள் நிறைய மொறுமொறுப்பான பிஸ்கட்டுக்களையும் மற்றும் ஏவாவுக்குத் தெரியாமல் பீருடன் கலந்து அருந்துவதற்காக மிகஅதிகமாக போதை ஏறும் உயர் சான்று பெற்ற மது பாட்டிலை தக்காளிச் செடிகளுக்குக் கீழே இருந்த ஐஸ்தொட்டியில் மறைத்தும் வைத்திருந்தான்.

ஆனால் அவன் அவ்வாறு மறைத்து வைத்திருந்ததை ஏவா அறிவாள். ஆண்கள் மீண்டும் மீண்டும் இலைகள்அடர்ந்த நெல்லிக் கிளைகளின் கீழே திருட்டுத் தனமாகக் கைகளை விட்டுத் துழாவினார்கள். கள்ளத்தனமாகவீட்டுப் பக்கம் நோட்டமிட்டபடி அவர்கள் மதுப் புட்டிகளைச் சாய்த்துத் தங்கள் உதடுகளை நனைத்துக்கொண்டார்கள். வழக்கமாக வலிமையுடனும், காரணகாரிய இலக்குடனும் செயல்படும் ஃவிடிலிஸ் கூட குற்றம்புரிந்த சிறுவனைப் போல நடந்து கொண்டான்.

அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட கொடுமைகள், அட்டூழியங்களைப் பற்றிக் கடுமையாக விவாதிப்பதும்,ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்ட கட்டுக் கதைகளை கேட்டு கடகடவென தொடர் சத்தத்துடன் சிரிப்பதும்,அடர்ந்து பின்னிக் கிடந்த கிளைகளையும் இலைக் கொத்துக்களையும் போதை மயக்கத்துடன் மாறி மாறி உற்றுப்பார்ப்பதுமாக இருந்த ஆண்களின் குரல்கள் எழுவதும் விழுவதுமாக இருந்தன. ரோய், பீரைக் கடகடவெனக்குடிக்காமல் மெல்ல ரசித்துக் குடித்தபடி வெளியில் அவர்களோடு இருந்தான். எப்போதும் போல ஃவிடிலிஸ்கூட்டத்தில் நடு நாயகமாக இருந்து, ஆட்களைத் தூண்டி விட்டுத் துணிச்சல் மிகுந்த கதைகளைச்சொல்லும்படியாகவும், வலிமையைக் காட்டும் வீரதீரப் போட்டிகளுக்காக அவர்களைச் சவால் விட்டு அழைத்துக்கொண்டுமிருந்தான்.

சமையல் அறையில் டெல்ஃபினே கேக் போன்ற பண்ணியங்கள் தயாரிப்பதற்காக குளிர்ச்சியான வெண்ணெய்கட்டியைச் செதுக்கி மாவாக்கினாள். அவள் விடுமுறை இரவுச் சாப்பாட்டுக்காகப் பண்ணியங்கள் செய்யத்திட்டமிட்டிருந்தாள். போதை மயக்கத்தைக் குறைக்கவல்ல அத்தகைய உணவு அப்போது அந்த ஆண்களுக்குத்தேவைப்படும். உருளைக் கிழங்குகள் வெந்து கொண்டிருந்தன. பானையில் சூடேறிய கடுகினால் காரமிடப்பட்டபீன்சுடன் நாட்டுச் சர்க்கரையும் வெல்லப் பாகுடன் கூடிய கருப்பஞ்சாறையும் கலந்து வைத்திருந்தாள். தவிரகொத்திறைச்சிக் குழலப்ப பாளங்களும் இருந்தன. ஒரு சிட்டிகை அளவு உப்பு போட்டு பிசைந்த மாவை மெழுகுத்தாளில் பொதிந்து சுற்றி ஐஸ் பெட்டிக்குள் வைத்தாள். பிறகு, பீச் பழங்களின் மேலிருந்த பழுப் நிறப் பகுதிகளைஅகற்றி விட்டு சதைப் பிடிப்பான ரோஜா வண்ணப் பகுதியை நிலவு போன்ற மெல்லிய வட்டங்களாக நறுக்கினாள்.

நேரம் ஆகி விட்டது ஆகியே விட்டது என்று டெல்ஃபினே நினைத்தாள். அவள், ஏவாவின் வலியைப் பற்றியேசிந்தனை செய்து கொண்டிருந்தாள். கிராம்பு, இலவங்கப் பட்டை ஆகியவற்றால் நெடியூட்டப்பட்ட அபின்மதுவோ அல்லது டாக்டர் ஹூச் அவளுக்குக் கற்பித்திருந்தபடி அவள் தயாரித்து அளித்திருந்த மார்ஃபின்மருந்தோ செயல்படும் கால அளவைப் பொருத்துத்தான் டெல்ஃபினேவின் பொழுதுபோக்கு உணர்வு அமையவேண்டியதாயிற்று. ஏனெனில் அதிகமாகக் கொடுத்தால் மார்ஃபின் கூடத் தன் ஆற்றலை இழந்து விடும் என்பதால்அதைத் தரக்கூடாதென்று டாக்டர் ஹூச் அவளை எச்சரித்திருந்தார்."

ஏவா அசைகிற சத்தம் கேட்டுப் பண்ணியங்கள் தயாரிக்கும் பணியைப் பாதியிலேயே ஓரங்கட்டி விட்டாள்டெல்ஃபினே. தண்ணீரைக் கொதிக்க வைத்து ஊசி போடும் சிரிஞ்சை தூய்மைப்படுத்தினாள். முதல் நாளிரவேஒன்றுக்கு முப்பது என்ற வீதத்தில் கரைசலை தயாரித்து ஏவாவுக்குத் தருவதில் டெல்ஃபினே செவிலியரைக்காட்டிலும் திறன் மிக்கவள் என்று டாக்டர் ஹூச்சின் வாய் மொழியால் நற்சான்றிதழ் பெற்றிருந்தாள்.டெல்ஃபினேவுக்கு அதில் பெருமை. அவள் ஊசிகளை ரகசியமாக வெறுத்தாள். அருவெறுப்புடன் அச்சம்கொண்டாள். ஊசி மருந்தைக் குழலில் நிரப்பும்போது அவளுக்கு தலை சுற்றியது. ஏவாவுக்கு ஊசி குத்தும்போதுஅது தன் சதையிலேயே இறங்குவது போன்ற உணர்வைப்பெற்றாள் என்பதால் அவள் டாக்டர் ஹூச்சின்பாராட்டைக் கேட்டு வெகுவாகப் பெருமை கொண்டாள்.

டெல்ஃபினே ஏவாவைக் கவனித்தபோது, நேரம் கடந்து விட்டது என்பதற்காகக் கூட இல்லாமல், ஏவாவின்விறைத்த பார்வையில் காணப்பட்ட வலியின் தெளிவான அதிர்ச்சி, பாதி திறந்திருந்த அவள் வாய், நெரிந்திருந்தஅவள் புருவங்கள் ஆகியவையே ஏவாவுக்கு வெகு விரைவிலேயே - தண்ணீர் கொதி நிலையை அடைந்தமாத்திரத்திலேயே - வலி நிவாரணி தேவைப்படுகிறது என்பதை அறிவித்தன. புண்ணாகிப் போன ஏவாவின்கைகளை இதமாக வருடி தன் சிநேகிதியின் கவனத்தை வலியிலிருந்து திசை திருப்பமுயன்றாள் டெல்ஃபினே.

மூட்டுக்களின் இடையே டெல்ஃபினே மெதுவாக வருடியதும் ஏவா முனகினாள். அவளுடைய நெற்றிச் சுருக்கம்மறைந்தது. ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய அவள் இமைகள் மூடிக் கொண்டன. அமைதியாக மூச்சு விட ஆரம்பித்தஏவா மென்மையாக, "அந்த வடிகட்டிய மடையர்கள் என்ன ஆனார்கள்" என்றாள்.

ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்து, அவர்கள் பெருங்கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்ததை டெல்ஃபினேகவனித்தாள். ஷெரீப் ஹாக் வேறு இப்பொழுது அவர்களுடன் சேர்ந்து கொண்டிருந்தான். அந்தக் கொழுத்தமனிதனின் தொப்பையை சைகை காட்டி கேலி செய்து சிரித்தபடி ஃவிடிலிஸ் நின்று கொண்டிருந்தான். பிறகுஅவர்கள் எல்லோரும் தத்தம் தொப்பைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டார்கள். ஏவாவின் மரணப்போராட்டத்தில் சிக்குண்டதனால் தன் நண்பர்களிடமிருந்து விலகி, தற்போது அந்த நண்பர்களின் சேர்க்கைகிடைத்திருந்த நிலையில், வழக்கமில்லாத மது வகைகளைச் சாப்பிட்ட ஃவிடிலிஸின் முகம் நீண்ட பிற்பகலின் சூரியஒளியில் மங்கிப் பொசபொசவென்றிருந்தது.

"அவர்கள் தங்கள் பெருத்த தொப்பைகளை ஒருவருக்கொருவர் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்" என்றாள்டெல்ஃபினே.

"ஏதோ, அதற்கும் கீழே இருப்பதைக் காட்டாமல் இருக்கிறார்களே" ஏவா அடித் தொண்டையில் சொன்னாள்.

"சே, வெட்கக் கேடு" என்று டெல்ஃபினே சிரித்தாள். "அவர்கள் தங்கள் கொத்திகளை உள்ளேதான்வைத்திருக்கிறார்கள். ஆனால் வேறு என்னவோ நடக்கிறது. நான் உங்களை நிமிர்த்தினாற் போல உட்காரவைக்கிறேன். சேட்டைகள் செய்வதில் அவர்கள் கோமாளிகளையும் மிஞ்சி விட்டார்கள்"

அவள் அலமாரியிலிருந்து அதிகத் தலையணைகளை எடுத்து அடுக்கி, படுக்கையை ஜன்னல் வரை உயர்த்தி,முற்றத்தில் நடப்பனவற்றை ஏவா பார்க்கும் வகையில் அவளை சரித்துப் படுக்க வைத்தாள். இப்போது அவர்கள்எதற்கோ பந்தயம் கட்டிக் கொண்டிருந்ததைப் போலத் தோன்றியது. நோட்டுக் கற்றைகளை எடுத்து ஆட்டிக்காட்டினார்கள். தடுமாறிக் கீழே விழுந்து விடும் அளவு அவர்கள் குடித்திருக்கவில்லை. ஆனால் குடிபோதையில்ஜோக்குகளை அள்ளி வீசி உரத்த கூச்சலுடன் பேசி ஆரவாரம் செய்யும் அளவுக்கு குடித்திருந்தார்கள்.

கடகடவென்ற ஒலிகளுக்கும், ஓயாத பேச்சு சத்தத்துக்கும் இடையே அவர்கள் கோப்பைகளையும்,பாட்டில்களையும், சிறு தீனிகளையும் பிஸ்கட்டுக்களையும் கொத்திறைச்சிக் குழலப்ப பாளத் துண்டங்களையும்,பாலாடைக் கட்டிகளையும் மேசைக்கு அப்பாலிருந்த தட்டுக்களையும் கடகடவென்று காலி செய்தார்கள். உள்ளூர்நாடகங்களில் பெரிய பாத்திரங்களில் நடித்த முன்னாள் நடிகனான ஷெரீஃப் அம்மேசை மீது மல்லாந்துபடுத்தான். மேசையை விட நீளமாக இருந்த அவன், பூட்ஸ் அணிந்த தன் பாதங்கள் மேசையின் ஒரு புறத்திலிருந்துஅபத்தமாக வெளியே நீட்டிக் கொண்டும், தலை மேசையின் மறுபுறத்தைத் தாண்டித் தொங்கிய நிலையிலும்,வறண்டு போய் விட்ட படகுத் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகைப் பால ஒரு மாதிரி சமாளித்துக்கொண்டு படுத்திருந்தான்.

அவனுடைய வயிறு ஒருசிறு குன்றாகியது. மேசையின் மறுபுறத்தில் ஏவாவின் ஜன்னலுக்கு நேர்க் கீழே ஃவிடிலிஸ்நின்றான். அவன் தன்னுடைய வெள்ளைச் சட்டையின் மேல் பொத்தன்களை அவிழ்த்து விட்டு திடகாத்திரமான தன்முன்னங்கைகள் வெளியே தெரிய சட்டையின் கைப்பகுதிகளை சுருட்டி மேலே ஏற்றி விட்டுக் கொண்டிருந்தான்.

திடீரென்று ஃவிடிலிஸ், ஷெரீஃப் ஹாக்கின் ஒரு பளு தூக்கும் பயில்வான் பாணியில் குனிந்து அவனது இரண்டுகைகளை வேகமாக வீசினான். ஷெரீஃப் ஹாக்கின் தடித்த இடுப்பு வாரில் இதற்கெனவே பிரத்யேகமாகப்பதிக்கப்பட்டிருந்தது என்று அந்தப் பெண்கள் பார்த்து அறிந்து கொண்ட வளையத்தை அவன் திடமாக, நாசூக்காகதன் தாடைகளால் பற்றினான்.

ஒரு கணம் எங்கும் அமைதி நிலவிற்று. எதுவும் நடக்கவில்லை. பிறகு ஒரு மாபெரும் செயல் நடந்தது. ஃவிடிலிஸ்தன் சக்தியை முழுதும் திரட்டினான். தரையே அவனுக்குள் புகுந்து உயர்ந்து வளைந்தது போலிருந்தது. இடுப்புவாரின் வளையத்தைச் சுற்றி அவனுடைய தந்த நிறப் பற்கள் பளபளத்தன. அந்தரத்தில் அவன் கைகள் இறுகின.அவனுடைய கழுத்தும், தோள்களும் நம்ப முடியாத அளவுக்குப் புடைத்தன. அவன் ஷெரீஃப் ஹாக்கைமேசையிலிருந்து அப்படியே தூக்கினான். பெல்ட்டின் வளையத்தை பற்களால் தூக்கிக் கொண்டு அவன் அந்தப்பேட்டை தாதாவையே அசைத்து நகர்த்தி விட்டான். ஒரு அங்குலத்தை விடக் குறைவான தூரம்தான்.

பிறகு ஃவிடிலிஸ் ஒரு கணம் அமைதியாக இருந்தான். ஒரு குருட்டுத்தனமான அமைதி அவன் உடலெங்கும்பொங்கிப் பரவியது. அவன் ஷெரீஃபை மேலும் உயரமாக தன்னால் குனிந்து நிமிரும் உயரத்தில் பாதி உயரம்வரை இப்போது நிலைநிறுத்தித் தூக்கினான்.

இந்தப் பிரமாண்டமான முயற்சி மேற்கொள்ளப்பட்ட அந்தக் கணத்தில்தான் டெல்ஃபினே அந்தக்கசாப்புக்காரனின் உண்மையான முகத்தைக் கண்டாள். அவனுடைய விலங்கு முகம், அவனுடைய காதுகள் எரியும்வெப்பத்தை வெளியே கக்கிய விதம், அவனுடைய கழுத்து நரம்புகள் புடைத்து முறுக்கேறி இங்குமங்குமாக இடம்மாறிக் கொண்டதும், மேலும் அவனுடைய தாறுமாறாகப் பிதுங்கிய விழிகள், விழிக்கூட்டிலிருந்து வெளியே வந்துபலப் பிரயோகத்தால் பாதிக்கப்பட்டதோடு மேலே ஜன்னல் வரை உருண்டோடி இவற்றையெல்லாம் ஏவாகவனித்துக் கொண்டிருக்கிறாளா என்று பார்வையை அவள் பால் ஓட விட்டதையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இப்பொழுதுதான் ஃவிடிலிஸின் மீது பெருமளவில் அனுதாப உணர்ச்சி மேலிட்டது. அவன் ஏவாவுக்காகத்தான்இப்படியெல்லாம் செய்து கொண்டிருந்தான். ஏவாவின் நோய் பற்றிய சிந்தனையை திசை திருப்பும்நல்லெண்ணத்திலும், தன்னால் வேறு எதையும் செய்ய இயலாத நிலையிலும், ஒரு நாய்க்குரிய நன்றிவிசுவாசத்துடன் அவன் ஏவாவை நேசித்த விதம் அவனை முட்டாள்தனமாகத் தோன்றும் செயல்களை செய்யவைத்தது என்பதை டெல்ஃபினே உடனே புரிந்து கொண்டாள்.

பற்களால் இடுப்பு வார் வளையத்தைக் கவ்வி, ஒர் ஆஜானுபாகுவான ஆளைத் தூக்குவதென்பது மடத்தனமானசெயல். ஏவாவைத் தாக்கியிருந்த நோய்க்கு முன்னால் அவன் ஒரு சிறு குழந்தையைப் போல பலவீனமாகக்காணப்பட்டதால், அவனுடைய உடல் வலிமை அனைத்தும் வீணே என்பது தெளிவாகத் தெரிந்தது.

பலத்த சிரிப்பொலிக்கிடையே ஃவிடிலிஸ் ஷெரீஃபைக் கீழே போட்டதும், மருந்தை எடுப்பதற்காக டெல்ஃபினேமீண்டும் சமையல் அறையினுள் சென்றாள். ஐஸ் பெட்டியின் மூடியைத் திறந்தாள். ஒரு முறை பார்த்து விட்டுஉள்ளே கையை விட்டுத் துழாவித் தேடினாள். சொல்லில் அடங்காத துன்பங்களுக்கு ஆளாகி, கடின உழைப்பின்மூலம் தன்னலத்தைப் புறக்கணித்து ஃவிடிலிஸ் விலை கொடுத்து வாங்கியதும், டெல்ஃபினே அதுவரை மிகக்கவனமாகப் பாதுகாத்து வந்ததுமான அந்த மார்ஃபின் மருந்தைக் காணவில்லை.

மார்ஃபின் குப்பி, மருந்துப் பொடி, ஊசி போடும் கருவி, ஆகிய எதையுமே காணவில்லை. அவளால் அதைநம்பவே முடியவில்லை. மறுபடியும் தேடினாள். மீண்டும் மீண்டும் தேடினாள். அது அங்கே இல்லை. ஏவா அடுத்தஅறையில் ஏற்கனவே அமைதி இழந்து புரள ஆரம்பித்திருந்தாள்.

டெல்ஃபினே வெளியே விரைந்து சென்று மற்றவர்களை விட்டு விலகித் தனியே வருமாறு ஃவிடிலிஸை சைகைசெய்து அழைத்தாள். ஃவிடிலிஸ் தன் முகத்திலும், கழுத்திலும் வழிந்து கொண்டிருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டிருந்தான். வியர்வை இன்னும் ஊற்றாகப் பெருகிக் கொண்டிருந்தது.

"ஏவாவின் மருந்தைக் காணவில்லை."

அவள் நினைத்திருந்த அளவுக்கு அவன் ஆழ்ந்த போதையில் இல்லை. ஒரு வேளை, ஷெரீஃபை தூக்கவதற்காகஅவன் மேற்கொண்ட முயற்சி அவனை நிதானத்துக்குக் கொணடு வந்திருக்கலாம்.

"காணவில்லை. நானும் தேடிப் பார்த்தேன். கிடைக்கவிலலை. யாரோ அதைத் திருடி விட்டார்கள். "

"ஹைலிக்ஸ்/க்ரொய்ஸ்/டொன்னவேட்டர் .. " என்று சுழன்று திரும்பியவாறு அவன் தொடங்கினான். அவன்சொல்ல வந்ததன் ஆரம்பம்தான் அது. அவன் மேலும் தொடர்வதற்குள் டெல்ஃபினே அங்கிருந்து அகன்றாள்.அவள் ஏவாவிடம் சென்று, மிச்சம் இருந்த அபின் மதுவை அவளுக்குக் கொடுத்தாள். ஒவ்வொரு தேக் கரண்டியாகஉள்ளே போன மது, குபுக்கென்று நொடியில் வெளியே வந்தது.

சே, கன்றாவி, நான் ஒரு பால் கக்கும் குழந்தையை விட மோசமாகி விட்டேன் என்று ஏவா சிரிக்க முயன்றாள்.ஆனால் அச்சிரிப்போ வியக்க வைக்கும் வகையில் ரகசிய முனகலாகவே வெளிப்பட்டது. அலறுவதைத்தவிர்ப்பதற்காக அவள் சிறு மூச்சிரைப்புடன் பெருமூச்செறிந்து மேல் மூச்சு வாங்கியவாறிருந்தாள்.

"பிட்டே" விழிகள் சுழல அவள் கட்டிலிலிருந்து வளைவாக எம்பினாள். பற்களுக்கிடையே வைத்துக் கடித்துக்கொள்ள துவைத்துச் சுருளாக்கப்பட்ட துண்டுத் துணி வேண்டும் என்று சைகை செய்தாள். அதற்குள் ஒரு பெரும்புயலைப் போல அவளைப் புரட்டிப் போட்டபடி வாந்தி வந்தது. யாராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. டாக்டர்ஹூச் விடுமுறையைக் கொண்டாட எங்கே சென்றிருக்கிறார் என்பதை அறிந்து, அவரிடமிருந்து வேறு ஒருமருந்துச் சீட்டைப் பெறவும், பிறகு மருந்தாளரிடமிருந்து அதை வாங்கவும் அவளுக்குப் பல மணி நேரங்கள் ஆகிவிடும். டெல்ஃபினே தோட்டக் கதவு வழியாக ஃவிடிலிஸை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்து விட்டு அடுத்தவழியில் வேகமாக வெளியேறினாள்.

அப்படி ஓடியபோது அவள் மனதில் உதித்த ஓர் எண்ணத்தின்படியே அவள் செயல்படத் தொடங்கினாள். நேராகஹீச்சைத் தேடிக் கொண்டு போவதற்குப் பதிலாக, அவள் கடை வண்டியை எடுத்துக் கொண்டு போய் கேவலப்பட்டஒரு கத்தோலிக்கப் பெண்ணை மணந்து கொண்ட தன் சகோதரன், அவனுடைய மகன்களான தன் மருமான்கள்இருவருக்கும் ஞானஸ்நானம் தரும் வரை, விக்கிரக வழிபாட்டையும், புனிதர் வழிபாட்டையும் தவிர்க்க அருள்புரியும்படி, டான்டே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வழிபட்ட லூத்தரன் தேவாலயத்துக்கு இரண்டுகட்டடங்கள் தாண்டி இருந்த டான்டேவின் சிறிய பெட்டி போன்ற வீட்டுக்கு அருகே நிறுத்தினாள்.

"வஸ் வொல்லன் ஸி? " டான்டேவின் முகத்தில் அவளுக்கு எல்லாம் தெரியும் என்பது துலாம்பரமாகத் தெரிந்தது.தான் யூகித்தது சரிதான் என்று எண்ணினாள் டெல்ஃபினே. எலுமிச்சை சேர்த்துத் தயாரிக்கப்பட்ட மிருதுவான கேக்துண்டங்களை உதிர்த்தபடி கிசுகிசுவென தன் சிநேகித, சிநேதிகளோடு பேசியபடி மருந்தின் அளவைக் குறித்துஅவள் உச்சுக் கொட்டியதை டெல்ஃபினே நினைவு கூர்ந்தாள்.

முதலில் டெல்ஃபினே சாதாரணமானதொனியில், "வோ இஸ்ட் டி மெடிசின்? "

என்றாள். டான்டே, டெல்ஃபினேவைச் சுற்றிலும் ஜெர்மானிய மொழியைப் பிரவாகமாகப் பரவ விட்டுடெல்ஃபினே சொல்வதை விளங்கிக் கொள்வதில் தனக்கு சிக்கல் இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டுபயங்கரமாக பாவாலா செய்தாள். உணர்ச்சியற்ற பொய்ப்புன்னகை புரிந்த டான்டேயை நோக்கி ஏவாவின் மருந்துஎங்கே என்று அலறினாள் டெல்ஃபினே.

டெல்ஃபினே, வாசலில் நுழைந்து டான்டேவை வேகமாகத் தள்ளி விட்டுக் குளிர்பதனப் பெட்டியை நோக்கிவிரைந்தாள். திடுக்கிட்டுப் போன டான்டே பின் தொடர்ந்து நடந்து வர, டெல்ஃபினே கைக்குட்டையில் சுற்றப்பட்டநீண்ட மெல்லிய பொருள் ஒன்று கிடந்த மேசையைக் கடந்தாள். அனிச்சையாக அதை எடுத்துப் பிரித்தடெல்ஃபினே அதற்குள்ளிருந்த காணாமல் போன ஊசிக் குழாயை கிட்டத்தட்டக் கீழே தவற விட்டு விட்டாள்.

"எங்கே அது ? " டெல்ஃபினேவின் குரல் பயங்கரக் கடுமையாக ஒலித்தது. ஊசி முனையால் குத்தி விடுபவள் போலடான்டேயை நோக்கி ஊசியை நீட்டியபடி திரும்பிய அவள், மேடை நாடகத்தில் பயமுறுத்துவதற்காக முன்னாடிஎடுத்து வைப்பது போல உணர்ந்தாள். நாடகம் பற்றி நினைவு வந்ததும் அந்தக் கணத்திற்கேற்ப எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று அவள் விரும்பிய வார்த்தைகளைப் பேசுதவற்கான சந்தர்ப்பமும், அனுமதியும் கிடைத்துவிட்டதைப் போன்று உணர்ச்சி மேலிட்டாள்.

"வா .. கிழட்டு முரட்டு நாயே. என்னை முட்டாள் ஆக்காதே. நீ ஒரு பழைய திருட்டுப் பிசாசுதானே".

டெல்ஃபினே உண்மையில் அப்படி நினைக்கவில்லை என்றாலும் எதையாவது சொல்லி டான்டேவுக்கு எரிச்சலூட்டிஅவள் வாயைக் கிளறி மார்ஃபின் எங்கே இருக்கிறது என்பதைச் சொல்ல வைக்க வேண்டும் என்று விரும்பினாள்.அதிர்ச்சியில் வாய் பிளந்த டான்டேவால் சமாளித்துக் கொண்டு பதில் சொல்ல முடியவில்லை. வெறுப்படைந்தடெல்ஃபினே சிறிய ஐஸ் பெட்டி அருகே போய் பித்துப் பிடித்தவள் போல அப்பெட்டியை பரபரப்பாகக்குடைந்தாள். ஒரு மிருக வெறியினால் உந்தப்பட்டவளாக டான்டேயின் மொத்த உணவு, முட்டைகள் உள்படஅவ்வளவையும் டெல்ஃபினே எடுத்துக் கொட்டிக் கலைத்தாள். பிறகு திரும்பி டான்டேவோடு மோதினாள்.அவளுடைய மனம் இயலாமையின் விரக்தியிலும், வெறியிலும் நீந்திக் கொண்டிருந்தது.

"தயவு செய்து நீ எனக்கு அதைச் சொல்லியே ஆக வேண்டும், எங்கே அது? "

இப்போது டான்டே சமாளித்துக் கொண்டு விட்டாள். அவள் ஆங்கிலம் கூடப் பேசினாள். நீ எனக்கு அந்தமுட்டைகளுக்கான நஷ்ட ஈட்டைக் கொடுக்க வேண்டியிருக்கும். சரி இருக்கட்டும். நான் கேட்டதற்குப் பதில்சொல்லு என்றால் டெல்ஃபினே.

தன் கை மேலோங்கியிருந்த அந்தக கணத்தை டான்டே அனுபவித்து ரசித்தாள். அவள் போதைக்கு அடிமையாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். அப்படி ஆகக் கூடாது. என் சகோதரனின் மனைவியா? எங்களுக்கெல்லாம் மிகவும்அவமானம்.

தனக்கு மார்ஃபினை உடனடியாகத் தரக் கூடிய ஒரே நபரைத் தான் பகைத்துக் கொண்டது முட்டாள்தனம் என்றுஇப்போது டெல்ஃபினேவுக்குப் புரிந்தது. அவள் முன் யோசனையுடன் நடந்து கொள்ளத் தவறி, நிதானமிழந்துமனம் போனபடி நடந்து கொண்டு விட்டதை எண்ணி வருந்தித் தன் அதிரடியான நடவடிக்கைக்காக வருத்தம்தெரிவித்து மிகவும் பணிந்து அடங்கிப் போனாள்.

பெருமூச்செறிந்தபடி, "அய்யோ, டான்டே, உனக்கு உண்மை என்னவென்று தெரியும் அல்லவா? டான்டே நம்ஏவா அநேகமாகப் பிழைக்க மாட்டாள். அவள் பயங்கரமான வலிக்கு ஆளாகி இருக்கிறாள். அவள் ஓரளவுதேறியிருக்கும் தருணங்களில்தான் நீ அவளைப் பார்த்திருக்கிறாய். எனவே அவளுடைய வேதனையும், வலியும்எப்படித் தோன்றி வளர்கிறது என்பது உனக்கு எப்படித் தெரியும்? டான்டே, உன் சகோதரனின் மனைவியிடம்கருணை காட்டு. அவள் உடல் நிலை கருதி அவளைக் கொஞ்சம் செளகரியமாக வைத்துக்கொள்வதில் தவறில்லை.இதில் அவமானம் ஏதுமில்லை. டாக்டரே சொல்லியிருக்கிறார்" என்றாள்.

"டாக்டருக்கு நிலவரம் சரியாகத் தெரியாது. அவர் அவளுக்காகத் தேவையில்லாமல் மிக அதிகமாகப்பரிதாப்படுகிறார். அவளோ போதைக்கு அடிமையாகி விட்டாள் என்பது நிச்சயம் என்று என் இனிய தோழிதிருமதி ஆர்லென் சோர்வென் கூடச் சொல்கிறாள் ..

என்று தன் அந்தரங்க் தீய எண்ணத்தை மிகச் சுருக்கமாகவும், மறைமுகமாகவும் வெளியிட்டாள் டான்டே.

டான்டே,டான்டே, உனக்குப் புண்ணியமாகப் போகட்டும். கொடுத்து விடு டெல்ஃபினே இதயப்பூர்வமாககெஞ்சினாள். அவளுடைய கால்களில் விழுந்து விடலாமா என்று கூட நினைத்தாள். டான்டேவின் இறுகிப் போனசிறிய வாய் முறுக்கிக் கொண்டது.

அதைப் பற்றிக் கவலையில்லை. நான் அதைக் கழிவு நீர்த் தொட்டியில் வீசி விட்டேன். டான்டேவின் பீங்கான்கழிவு நீர்த் தொட்டியின் விளம்பில் சுத்தமாகக் கழுவப்பட்ட மருந்துக் குப்பியும், மருந்துப் பொடிவைக்கப்பட்டிருந்த பாட்டிலும் சூரிய ஒளியில் காய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள் டெல்ஃபினே. அதைப்பார்தததும், கட்டுப்பாடிழந்தவளாக தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியவில்லை. வலிமையுடையவளானஅவள் திடீரென்று அதீத வலிமை பெற்றாள். டான்டேவின் உள்ளாடையைப் பற்றி வலிந்து இழுத்து, அவளைஉலுக்கு முன்னுக்குத் தள்ளி அவள் முகத்துக்கு நேரே, சரி, நீயே வந்து அவளுக்குப் பணிவிடை செய்து கவனித்துக்கொள், இப்ப பாரு என்றபோது வியக்கத்தக்க வலிமை அவளுக்கு ஏற்பட்டது.

டான்டேயின் போராட்டங்கள் அனைத்தும் டெல்ஃபினேவின் பொங்கிப் பெருகிய வலிமைக்கு முன்னால்பலவீனமாகிப் போகவே அவளால் டெல்ஃபினேவை தடுத்து நிறுத்த முடியவில்லை. டெல்ஃபினேவின் பொங்கும்வலிமையோடு டான்டேயை இழுத்துக் காருக்குள் திணித்த மாத்திரத்தில் கார் சீறிக் கொண்டு பறக்க நேராகஅவளை வீட்டில் கொண்டு போய் அடைத்தாள்.

எனக்கு உள்ளே வருவதற்கெல்லாம் நேரம் இல்லை, நீயே அவளுக்கு ஒத்தாசை செய், அவளோடு இரு என்றுகூச்சலிட்டுக் கத்தியபடி என்ஜினை மீண்டும் சீற வைத்தாள்.

டெல்ஃபினே அவ்வாறு சென்ற பிறகு, கடைசியாகப் பொறுப்பேற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்ட ஒருத்தியின் மனநிறைவுடனும், கடுகடுப்புடனும் டான்டே பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்தாள்.

பல மணி நேரங்களாயிற்று. அத்தனை நேரமும் டெல்ஃபினே பிரார்த்தனை செய்த வண்ணமே இருந்தாள். தான்வெளியே சொன்னததையே தன் எண்ணத்திலும் கொண்டவள் போல மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்தாள்.நெஞ்சாரப் பிரார்த்தித்தாள். சபித்தாள். சாபமிட்டாள். நேர்ந்து கொண்டாள். சென்ற ஒவ்வோர் இடத்திலிருந்தும்இன்னோர் இடத்துக்குப் போய் விசாரிக்கும்படி சொல்லப்பட்டபோதும், தடைகள் நிரம்பிய சங்கடமானதருணங்களைச் சந்தித்த போதும் தேம்பி அழுதாள். ஹீச்சையோ, மருந்தாளரையோ தேடிக் கண்டுபிடிப்பதுஇயலாத ஒன்றாகப்பட்டது.

டெல்ஃபினே ஆத்திரத்தோடு அழுது கொண்டு வெறுங்கையுடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில்காற்சட்டை சரிந்து தொங்கலாட, தொளதொளத்த மேற்சட்டை வளைந்து கூனிப்போன முதுகின் மேலும், எலும்பும்தோலுமான அவன் தோள்களிலிருந்து விலகியும் அலங்கோலமாக காற்றில் படபடக்கத் தட்டுத் தடுமாறியபடிசாலை வழியே சென்று கொண்டிருந்த தன் தகப்பானரைக் கண்டாள்.

பக்கத்தில் நெருங்கும் சமயம் வேறு யாராவது பார்க்கிறார்களா என்று அவள் சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தாள்.அவளுக்குள் பொங்கிய கட்டுக்கடங்காத கோபத்தில் அவன் மீது வண்டியை ஏற்றி விட வேண்டும் என்றுஅவளுக்குத் தோன்றியது. வண்டியின் வேகத்தைக் குறைத்து அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.

சற்று முன் தனக்குத் தோன்றியது போலவே வண்டியை அவன் மீது ஏற்றுவது எவ்வளவு சுலபம் என்று நினைத்தாள்.அவன் மறுபடியும் குடித்திருந்தான். அவனால் கவனிக்கக் கூட முடியாது.

ஆனால் அவனை நெருங்கி, அந்த நெருக்கத்தில் அவனுடைய கண்களைச் சந்தித்தபோது, அவை தெளிவாகஇருந்ததைக் கண்டு அவள் வியந்தாள். அவள் தன் கால்களைத் தரையில் தேய்த்தவாறு கார்க் கதவைச் சுற்றிமெல்லநடந்தபோது இம்மாதிரித் தருணங்களில் பொதுவாகக் குடிபோதையில் இருக்கும் அவனுக்குள்ளும்அப்போது ஒரு நோக்கம் இருப்பதைக் கண்டாள்.

அவன் கையில் இருந்த ஒரேபாட்டில் வழக்கமான மதுப்புட்டியாக இல்லாமல் மார்பியா சல்பேட் எனப் பெயர்ச்சீட்டு ஒட்டப்பட்ட சதுரமான பழுப்பு நிற மருந்து பாட்டிலாக இருந்தது. சட்டப்படி வாங்க வேண்டிய மருந்துகளைமருந்துக் கடைக்காரான் வைக்கும் பெட்டியை ரம்பம் கொண்டு அறுத்தெடுத்து, அவன் ஒரு மதுக்கடையிலிருந்துகளவாடியிருக்கிறான்.

கிரீச்.. என்று பிரேக்கை அழுத்தி வண்டியை நிறுத்தி, வண்டியிலிருந்து வெளியே குதித்து வீட்டை நோக்கிடெல்ஃபினே ஓடியபோது, மிக மோசமான நிலையை அடைந்து வலியின் உச்சகட்டத்தில் துடித்துக் கொண்டிருந்தஏவாவின் அலறம் சத்தம் டெல்ஃபினேவுக்கு வெளியிலேயே கேட்டது.

அலமாரியிலிருந்து கீழே விழுந்து தாறுமாறாக இறைத்தும், நொறுங்கியும் கிடந்த டப்பாக்களை மிதித்தபடி அவள்சமையல் அறைக்குள் நுழைந்தாள். அங்கே டான்டே அதிர்ச்சியினாலும், அச்சத்தினாலும் வெளுத்து பிணியுற்று,மந்தமாக ஏதும் செய்ய இயலாதவளாக தரையில் சரிந்து கிடந்தாள். ஃராசும், லூயியும் தேம்பித் தேம்பி அழுதவாறுதங்கள் தாயை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் ஏவா இனிமேலும் வலி தாங்க மாட்டாதவளாகஇழுப்பறையினுள் கையை விட்டுத் துழாவித் துழாவி ஒரு கத்தியை தேடிக் கொண்டிருந்தாள்.

அவளுடைய கவனம் முழுவதும் அவசியமாகத் தான் செய்ய வேண்டிய காரியத்திலேயே குவிந்திருந்தது.இளமையும், வலிமையும் கொண்ட ஃராசினால் கூட அவளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

"ஆம், ஆம் .. "என்று சொல்லியவாறே இத்தகைய காட்சிக்குள் நுழைந்தாள் டெல்ஃபினே. அவளுடைய சொந்தவீட்டில இதை விடவும் அதிகக் கலவரமான பல சூழ்நிலைகளை அவள் சந்தித்திருந்தாள். எனவே அவளுடையதிறமை இந்தச் சூழலில் பளிச்சென்று வெளிப்பட்டது. வேகமாக ஒர் அடி எடுத்து வைத்து அவள் ஏவாவின் முன்நின்றாள்.

"என் சிநிேகிதியே" என்றபடி ஏவாவின் கையிலிருந்த கத்தியை லாவகமாகப் பிடுங்கியெறிந்தபடி மேலும்தொடர்ந்து, "இப்போது வேண்டாம். வெகு சீக்கிரத்திலேயே .. நான் மருந்து வாங்கி வந்திருக்கிறேன். உங்கள்பிள்ளைகளை இப்படி விட்டுவிட்டுப் போய் விடாதீர்கள்" என்றாள்.

பிறகு ஏவா, உள்ளுக்குள் புரண்டு முறுக்கியும், தாக்கும் வலியின் அலைகளால் மயக்கத்துடன் முனகியபடி தான்தரைக்கு தாழ்த்தப்படுவதை அனுமதித்தாள். டெல்ஃபினே ஃராசிடம் அன்பாக, "ஒரு போர்வையும், ஒருதலையணையும் கொண்டு வா" என்றாள். "அப்புறம் நீ .. லூயியை நோக்கிக் கூறினாள். நான் இதை தயாரிக்கு வரைஅவள் கையைப் பிடித்துக் கொண்டு அவளிடம் சொல்லிக் கொண்டேயிரு, "அம்மா, அவள் இப்போது மருந்துதயாரித்துக் கொண்டிருக்கிறாள். சீக்கிரத்தில் தயாராகி விடும்" என்று சொல்லிக் கொண்டிரு.

-----------------------------------------------------------------------------------
லூவிஸ் எர்ட்ரிச்.

ஜெர்மானிய தந்தைக்கும், பிரெஞ்சு தாய்க்கும் அமெரிக்காவின் மினஸோடா மாகாணத்தில் லிட்டில் ஃபால்ஸில்,1954ல் பிறந்த லூவிஸ் எர்ட்ரிச், பேராசிரியர், மைக்கேல்டோரிஸ் என்பவரை மணந்து கொண்டு 1991ல்இருவரும்சேர்ந்து The Crown of Columbus என்ற புகழ் பெற்ற நாவலை எழுதினர்.

இத் தம்பதியினருக்கு தத்து எடுத்துக் கொண்ட குழந்தைகளோடு சேர்த்து ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பிள்ளைகள்.

இவர்களது சொந்த வாழ்க்கையும், கணவனுக்கும், மனைவிக்கும் இடையே தோன்றி விட்டிருந்த உராய்வுகளையும்சொன்ன நாவல் The Antelope Wife. இந்த நாவல் அவர் தனது கணவரைவிட்டுப்பிரிந்த கையோடுஎழுதப்பட்டது. மனைவியை விட்டுப் பிரிந்த சில நாட்களிலேயே மைக்கேல் தற்கொலை செய்து கொண்டார்.பிறகுதான் இந்நாவலை எர்ட்ரிச் எழுதுகிறார்.

இவரது பிற நாவல்கள்:

Love Medicine. The Beet Queen, Tracks&The Brigo Palace

இரண்டு கவிதை தொகுப்புகள்
Jacklight&Baptism of Desire.

இவர் குழந்தைகளுக்காக எழுதிய நூல்
Grand Mothers Pigeon

நவீன அமெரிக்கப் பெண் எழுத்தாளர்களில் முக்கியமான பெயர் லூவிஸ் எர்ட்ரிச். இவர் எழுதிய நூல்களின்வரிசைப் பட்டியல் பின்வருமாறு:

Jacklight (Poetry) 1984
Love Medicine (Novel) 1984 †
The Beet Queen (Novel)1986 †
Tracks (Novel) 1998
Baptism of Desire (Poetry) 1989.
Route Two (?) 1990
The Crown of Columbus (Novel with Michael Dorris)1991.
The Bingo Palace (Novel) 1994
The Falcon: A Narrative of the Captivity and Adventures of John Tanner (?)1994
The Blue Jays Dance: A Birth Year (memoir) 1995
Tales of Burning Love (Novel)1996
Grandmothers Pigeon (childrens book) 1996
The Antelope Wife (Novel) 1998
The Last Report of the Miracles at Little No Horse (Novel) 2001
The Master Butcher’s Singing Club (Novel) 2003
Original Fire (Poetry)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X