• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாவல் ஒரு கேள்வி

By Staff
|

கலாச்சார மாத இதழ் - ஜூன் 2005

தர்மசிறி பண்டாரநாயக* : ஆர்டில்லெரிகளுக்கிடையே ஒரு வெண் புறா

எஸ்.வி.ராஜதுரை

I
தர்மசிறி பண்டாரநாயக கி.மு.431 ம் ஆண்டின் தொடக்கத்தில் ஏதென்ஸ் நகரம் மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளைக் கண்டது : பண்டையகிரேக்க ஜனநாயக நகர- அரசாக விளங்கிய ஏதென்சுக்கும் இராணுவ சர்வாதிகாரக் குழுவின் ஆட்சியின் கீழிருந்தஸ்பார்ட்டாவுக்குமிடையில் ஏறத்தாழ முப்பதாண்டுகள் நடைபெற்ற ஒரு கொடிய போர் வெடித்தது அந்த ஆண்டில்தான். அன்றுஸ்பார்ட்டாவின் நட்பு அரசுகளில் ஒன்றாக இருந்த கோரிந்த்துக்கும் ஏதென்சுக்குமிடையில் ஏற்பட்ட சிறு அரசியல் பூசலே அந்தப்போருக்குக் காரணமாக இருந்தது; பெலெப்போனிசியப் போர் என அழைக்கப்படும் அந்தப் போர் குறித்த மாபெரும் வரலாற்றுஆவணம் என இப்போதும் வரலாற்றறிஞர்களால் கருதப்படும் நூலினை அத்தீனியப் படைத் தளபதிகளிலொருவராகப்பணிபுரிந்த துஸிடைடஸ் எழுதத் தொடங்கியதும் அந்த ஆண்டில்தான்; கோரிந்த்தில் சிறு அளவில் நடைபெற்ற , சிலஆண்டுகளுக்குப் பின் ஏதென்ஸ் நகரத்திற்குள் பெருவெள்ளமாய்ப் புகுந்த வன்முறையைப் பின்னணியாகக் கொண்ட ஒருதுன்பியல் நாடகம் ஏதென்ஸின் வசந்தகால நாடகத் திருவிழா நாடகப் போட்டியின் போது முதன் முதலாக அரங்கேற்றப்பட்டுமூன்றாவது பரிசைப் பெற்றதும் அந்த ஆண்டில்தான். இன்றைக்கும் பல்வேறு வகைகளில் பொருத்தப்பாடுடைய மெடியாஎன்னும் அந்த மகத்தான நாடகத்தை எழுதியவர் யூரிபிடிஸ்.

போர்களில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் என அக்காலத்தில் எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தவை அனைத்தும் மீறப்பட்டது இந்தப் பெலெப்போனிசியப் போரில்தான். இந்த மீறலைத் தொடங்கியதுஸ்பார்ட்டா அணியினர்தான் என்றாலும் பழிக்குப் பழி என்னும் அடிப்படையில் இரு தரப்பினருமே மாறி மாறி கொடூரமானஅழிவு வேலைகளில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள் அவர்களது வகுப்பறைகளிலேயே படுகொலை செய்யப்பட்டனர்.குடிமக்கள் ஒட்டுமொத்தமாக ஒழித்துகட்டப்பட்டனர் அல்லது அடிமைகளாக்கப்பட்டனர்; கோவில்களில் வழிபாடு செய்துகொண்டிருந்தவர்கள் அங்கேயோ அல்லது அங்கிருந்து வெளியே இழுத்து வரப்பட்டோ எரித்துக் கொல்லப்பட்டனர்.ஆயிரக்கணக்கான பிணங்கள் புதைக்கப்படாமல் போர்க்களத்திலேயே நாட்கணக்கில் அழுகிக் கொண்டிருந்தன.

போர் தொடங்கிய போது ஏதென்ஸ் மக்களின் தலைவராக இருந்த பெரிகிள்ஸ் சற்று நிதானமாகச் செயல்பட்டு போரில்கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளைப் பின்பற்றினார். ஆனால் அவரது மரணத்திற்குப் பின் தலைமைப் பொறுப்புக்குவந்த கிளியோன் அவற்றை மதிக்கவில்லை. ஏதென்ஸின் கூட்டணியில் இருந்த லெஸ்போஸ் என்னும் தீவிலுள்ள நகரமொன்றுஅக் கூட்டணியிலிருந்து விலகுவதாகக் கூறியதுமே அந்த நகரத்தின் ஆண்கள், பெண்கள் அனைவரையும் கொன்றுவிடவேண்டுமென்றும் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக விற்றுவிட வேண்டுமென்றும் ஆணை பிறப்பித்தான்கிளியோன். ஆனால் அன்றைய அத்தீனிய சட்டமன்றம் தனது மனச்சாட்சியின் உறுத்தலின் காரணமாக அடுத்த நாளே அந்தஆணையை இரத்து செய்யும் தீர்மானத்தை இயற்றியது. கிளியோன் போர்க்களத்தில் மரணமடைந்த பிறகு ஆட்சிப் பொறுப்பைஏற்றுக் கொண்ட நிஸியாஸ் உறுதியான நிலைபாடு எதனையும் மேற்கொள்ளாமல் போர் நிறுத்தத்திற்கான வாய்ப்புகள்அனைத்தையும் பயன்படுத்தத் தவற, அவனுக்குப் பின் தலைமைக்கு வந்த அல்ஸிபியேடஸ் என்பானோ இன்னும்மூர்க்கத்தனமான வழிமுறைகளை மேற்கொண்டான். ஸ்பார்ட்டாவின் காலனியாக இருந்த மெலோஸ் என்னும் சிறு தீவிலிருந்தஆண்கள் அனைவரும் கொன்று குவிக்கப்பட்டனர்; அனைத்துப் பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாக விற்கப்பட்டனர்.இறுதியில் ஏதென்சின் பொது எதிரிகளான ஸ்பார்ட்டாவும் பெர்ஸியாவும் கூட்டுச் சேர்ந்து அந்த நகர-அரசையும் அதுஉருவாக்கியிருந்த ஜனநாயக நிறுவனங்களையும் பூண்டோடு ஒழித்துக்கட்டின. அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பேயூரிபிடிஸ் காலமாகிவிட்டார்.

வரலாற்று வரைவியலில் இலக்கியக் கற்பனைகளுக்கு இடமில்லை என்றும் வரலாற்று விவரங்கள் துல்லியமாகப் பதிவுசெய்யப்படவேண்டும் என்றும் துஸிடைடஸ் கருதிய போதிலும் வரலாற்று உண்மைகளை ஆழமாகப் புரிந்துகொள்வதற்காகஅவர் கையாண்ட ஒரு உத்தி இலக்கியத்தன்மை கொண்டதாகிவிட்டது. போரில் ஈடுபட்ட பல்வேறு தரப்பினரின்கருத்துநிலைகளை (Ideologies) விளக்குவதற்காக கற்பனையான உரையாடல்களை ஆங்காங்கே சேர்த்திருக்கிறார்.எடுத்துக்காட்டாக அத்தீனியர்களுக்கும் மெலோனியர்களுக்கும் (மெலோஸ் தீவினருக்கும்) இடையில் நடந்ததாக அவர்எழுதியுள்ள உரையாடல்:

மெலொ: நீங்கள் ஆண்டைகளாக இருப்பது உங்களுக்கு நல்லதாக இருப்பது போலவே , நாங்கள் அடிமைகளாக இருப்பதுஎங்களுக்கு நல்லது என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது?

அத்தீ: நீங்கள் பணிந்து போவதன் மூலம் பேரழிவிலிருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்வீர்கள்; உங்களைஅழித்தொழிக்காததன் மூலம், உங்களால் நாங்கள் ஆதாயமடைவோம்.

மெலோ: அப்படியா. இந்தப் போரில் நாங்கள் நடுநிலை வகிப்பதை நீங்கள் ஒப்புக் கொள்வதில்லையா? எதிரிகளாக அல்லநண்பர்களாக நாங்கள் இருப்பதை, எந்த ஒரு அணியிடமும் கூட்டுச் சேராமலிருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்வதில்லையா?

அத்தீ: இல்லை. எங்களுக்கு ஊறு விளைவிப்பது நீங்கள் காட்டும் பகைமை அல்ல. மாறாக, நாங்கள் உங்களுடன் நட்புடன்இருந்தால் எங்கள் குடிமக்கள் அது எங்களது பலகீனம் என்று கருதுவார்கள். மாறாக, நீங்கள் எங்கள் மீது காட்டும் வெறுப்புஎங்களது வல்லமைக்கான சான்றாக இருக்கும்.

சிறந்த உரையாடல்கள் மட்டுமே ஒரு துன்பியல் நாடகத்தினை உருவாக்கப் போதுமானவையாக அமையா என அரிஸ்டாட்டில்கூறிய போதிலும், பண்டைக் கிரேக்கத்தின் மாபெரும் நாடகாசிரியர்களான சோபோக்ளிஸ், ஈஸ்கைலஸ், யூரிபிடிஸ் ஆகியோர்போலக் கதைப் பின்னல்களை (plots) துஸிடைடஸ் உருவாக்கவில்லை என்னும் போதிலும், துன்பியல் என்பதற்குஅரிஸ்டாட்டில் கொடுத்த வரைவிலக்கணத்திற்கு ஒத்திசைந்ததாக வ்ரலாறு பற்றிய அவரது (துஸிடைடஸின்) பார்வைஇருப்பதாகக் கருதப்படுகிறது. அரிஸ்டாட்டிலின் வரைவிலக்கணம்:

ஒரு வாழ்க்கைச் செயல் அதற்குரிய இயல்பான விளைவைத் தராமல் அதற்கு எதிர்மறையான விளைவைத் தந்து அடியோடுமாற்றுருவாகிவிட, இன்பமாக வேண்டியது துன்பமாகி விடுகிறது என்பதைச் சொல்கிறது துன்பியல். அதாவது, கதைத் தலைவன்,தனது நோக்கத்திற்கு நேர் எதிரான விளைவுகளில் முடியும் செயல் மார்க்கத்தை மேற்கொள்வதன் மூலம் தனது அழிவைத்தானே தேடிக் கொள்கிறான்.

ட்ரோய் நகரப் பெண்கள் – ஹெலெனும் ஹெக்கபெவும்

(Trojan Women: Helan&Hecuba) x뷨hꟁzwۯ􎟃u Au ٔ Aux vРһu࠸hP Azwۯ |P A]ݠu ›Pshڮ P CubPРJU Qࠓں. Gܝ z •Pu AP HPvzvדUi (cold war) miu P ›, AP󠨭kEQݠJ•P [SCu | ›, Au޸h A]-96;ٖ C SӕPkzx P-8;뷨h띠uB.zvӍ ] uPP

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more