அமெரிக்க நிறுவனங்களுக்கு குட்பை.. வாட்ஸ்அப் - கூகுள் மேப், MS word-க்கு மாற்று இதுதான்!
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டை குறிவைத்து 50 சதவீத வரி விதித்துள்ளார். அதேபோல் அமெரிக்காவிற்கு இந்தியர்களை செல்வதை தடுக்கும் வகையில் எச் 1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக அதிகரித்துள்ளார். இதற்கிடையே தான் உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். பலரும் தற்போது நம் நாட்டின் தயாரிப்புகளை பயன்படுத்த தொடங்கி உள்ள நிலையில் வாட்ஸ்அப், கூகுள் மேப், ஜிமெயில், பவர்பாயிண்ட் உள்ளிட்டவை அமெரிக்காவின் தயாரிப்பாகும். இதற்கு பதில் நம் நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை இங்கு காணலாம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். மருந்து பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதற்கு 100 சதவீத வரியை விதித்தார். இதனால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பெரிய அளவில் சரிவை சந்தித்து வருகிறது. நம் நாட்டில் உள்ளநிறுவனங்கள் வருவாய் இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால் உள்ளூர் தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதையடுத்து பலரும் தற்போது உள்ளூர் நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக மத்திய ரயில்வே, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டாக்குமென்ட்ஸ், ஸ்பிரிட்ஷீட் மற்றும் பிரசென்டேஷன் உள்ளிட்டவர்களுக்கு ஜோஹோ நிறுவனத்தின் பிளாட்பார்மை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அதேபோல் இன்னும் பலரும் உள்ளூர் நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.
அமெரிக்காவுக்கு நம் நாட்டில் இருந்து அதிகமான இன்ஜினியர்கள் எச் 1பி விசாவில் சென்று பணியாற்றி வருகின்றனர். இதனை தடுக்க டிரம்ப் எச் 1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்திய நிலையில் அஸ்வினி வைஷ்ணவ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பொதுவாக இந்த பணிகளுக்கு மைக்ரேசாப்ட் 360 மற்றும் கூகுள் வொர்க்ஸ்பேஸ் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவர் ஜோஹோ ஆபிஸ் சூட்டுக்கு மாறினார்.
இதன் அடுத்தக்கட்டமாக பலருக்கும் கேள்விகள் எழுந்துள்ளன. நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல் பரிமாற்றத்தை வழங்கும் இந்திய நிறுவனங்கள் எது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் நாம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், கூகுள், மைக்ரேசாப்ட், ஜிமெயில் உள்ளிட்ட அனைத்துமே அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்பாகும். இதனால் அதேபோன்று சேவைகளை வழங்கும் இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளின் லிஸ்ட் இதோ.
வாட்ஸ்அப் டூ அரட்டை
வாட்ஸ்அப் செயலி போன்ற சேவையை அரட்டை செயலி (Arattai) வழங்கி வருகிறது. இது தமிழ்நாட்டை மையப்படுத்தி செயல்பட்டு வரும் ஜோஹோ நிறுவனத்தின் தயாரிப்பாகும். இதனை வாட்ஸ்அப்புக்கு மாற்ற அனைவரும் பயன்படுத்தப்பலாம். டேட்டா செக்யூரிட்டி உள்பட பல வசதிகள் அரட்டையில் உள்ளன.
கூகுள் மேப் டூ மாப்பிள்ஸ்
அதேபோல் ரூட்டை அறிந்து கொள்ள நாம் அனைவரும் கூகுள் மேப் செயலிகளை பயன்படுத்தி வருகிறது. இதற்கு மாற்றமாக மாப்பிள்ஸ் (Mappls) செயலியை பயன்படுத்தலாம். இந்த செயலி Mapmyindia நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த செயலி கூகுள் மேப் போன்று ரூட் காண்பதோடு, டிராபிக் தொடர்பான துல்லியமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. நகரங்கள், கிராமங்கள் என்று அனைத்து இடங்களிலும் இதனை பயன்படுத்த முடியும்.
மைக்ரோசாப்ட் - கூகுளுக்கு பதில் ஜோஹோ
பொதுவாக டாக்குமென்ட், ஸ்பிரிட்ஷீட், பிரசென்டேஷன் உள்ளிட்டவற்றுக்கு மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களின் பிளாட்பார்ம்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365 (Microsoft Office 365) மற்றும் கூகுள் வொர்க்ஸ்பேஸ் (Google Workspace) போன்றவற்றுக்கு பதிலாக ஜோஹோ வொர்க்பிளேஸ் (Zoho Workplace) மற்றும் ஜோஹோ ஆபிஸ் சூட் பயன்படுத்த முடியும். மைக்ரோசாப்ட், கூகுளுக்கு மாற்றாக அனைத்து வகையான சேவைகளையும் ஜோஹோ வழங்கி வருகிறது.
எக்ஸலுக்கு மாற்று இதுதான்
அதேபோல் மைக்ரேசாப்ட் எக்ஸல் போன்ற சேவையை ஜோஹோ ஷீட் (Zoho Sheet) வழங்கி வருகிறது. மேலும் மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட்டுக்கு பதிலாக ஜோஹோவின் சோ (Zoho Show) சேவையை பயன்படுத்தலாம். அதேபோல் ஜிமெயிலுக்கு பதிலாக ஜோஹோ மெயில் பயன்படுத்தலாம். அடாபி சைன் (Adobe Sign)க்கு பதிலாக Zoho Sign பயன்படுத்தலாம்.
அமேசான் டூ பிளிப்கார்ட்
அதேபோல் அமேசான் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்தது. அதற்கு பதிலாக நம் நாட்டை சேர்ந்த பிளிப்கார்ட்டை பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம். இப்படி செய்வதன்மூலமாக நம் நாட்டில் உள்ள நிறுவனங்கள் வளரும். மாறாக அமெரிக்க நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்த முடியும். இதன்மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அடாவடி நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications