Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடி மாத பலன் 2025: ஆடி மாதம் நிகழும் மாற்றங்கள்.. துலாம் – மீனம் 6 ராசிகளுக்கான பலன்கள் முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

ஆடி மாத பலன்கள்: ஆனி மாதம் நிறைவடைந்து இன்று ஆடி மாதம் தொடங்கியுள்ளது. பொதுவாக ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு விஷேசமானது. ஊர்களில் ஆங்காங்கே கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என்று விழா கோலம் பூண்டிருக்கும். குல தெய்வ பழிபாடு, உறவினர்கள் சந்திப்பு என்று கோலகலமாக இருக்கும். 17.7.25 - 18.8.25 வரையிலான ஆடி மாதத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகள் பெற கூடிய பலன்களை காணலாம்.

ஆடி மாதம் இன்று (17.7.25) தொடங்கியுள்ளது. ஆடி மாதம் 1 மற்றும் 5 ஆம் தேதி மிகவும் முக்கியம். இந்த வருடம் ஆடி 1 ஆம் தேதி வியாழக் கிழமையும், 5 ஆம் தேதி திங்கள் கிழமையும் அமைந்துள்ளன. இதனால் உலகளவு மழையின் தாக்கம், வெள்ள பாதிப்பு அதிகம் இருக்கும். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் பெரிய இயற்கை பேரிடர் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தீ மற்றும் காற்றினாலும் அதிக பாதிப்புகள் இருக்கும்.

Aadi Month Lucky Zodiac signs

போர் மேகம்

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் இன்னும் மோசமடைவதற்கு வாய்ப்புள்ளது. வரி சுமையால் மக்கள் சிரமப்படுவார்கள். விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பு நன்றாக இருக்கும். பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ பூச்சிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆடி மாதத்தில் சூரிய பகவான் கடக ராசிக்குள் பகவான் பெயர்ச்சி ஆகிறார்.

ஆடி நிகழ்ச்சிகள்

ஆடி மாதம் அஷ்ட லட்சுமி கடாசம் கொண்டுள்ளது. ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி பூரம், ஆடிப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடைபெறவுள்ளன. கடவுளின் ஆசி பரிபூரணமாக நிறைந்ததது தான் ஆடி மாதம். ஆடி மாதத்தில் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகள் பெறக் கூடிய பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

துலாம்

துலாம் ராசிக்கு உங்கள் ராசிநாதன் சுக்கிரனை குரு பகவான் பார்க்கிறார். குரு பார்வை நன்மையை கொடுக்கும். கடந்த கால தடைகள் விலகி, எல்லாவற்றிலும் நற்பலன்கள் கிடைக்கும். வெளிநாடு, வெளிமாநில பயணங்கள் ஏற்படும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாகன யோகம் உண்டு. பூர்விக சொத்து பிரச்சனை விலகும். தொழில் நன்றாக இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும் அற்புதமான மாதம். அடுத்தடுத்து சுப காரியங்கள் நடைபெறும். சுக்கிர பார்வை இருப்பதால் உத்யோகம், தொழிலில் லாபம் அதி அற்புதமாக காணப்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. மனதில் நினைத்த காரியங்கள் நடைபெறும். உத்யோகத்தில் இருப்போர் புதிதாக தொழில் தொடங்குவார்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள், வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்கு குரு பார்வை இருப்பதால் திட்டமிட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த தொல்லைகள் சரியாகி, உற்சாகமாக வலம் வருவார்கள். மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்விக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். குழந்தைகளால் பெருமை சேரும். வெளிநாடு முயற்சியில் வெற்றி கிடைக்கும். விபரீத ராஜ யோகத்தால் திட்டமிடாத காரியங்கள் கூட வெற்றியடையும்.

மகரம்

மகர ராசிக்கு அஷ்டமத்தில் செவ்வாய் இருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். வீண் விரயம் அதிகமாக இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்திலும் பிரச்னைகள் ஏற்படும். முன் கோபம் அதிகரிக்கும். எல்லாவற்றிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஆரோக்கியத்திலும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாதத்தின் பின் பகுதியில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்கு இந்த மாதம் நினைத்தது நிறைவேறி நிம்மதி அதிகரிக்கும் மாதம். பழைய பாக்கி வசூலாகும். பொருளாதார தடைகள் நீங்கும். சமுதாயத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களால் நன்மை ஏற்படும். குடும்பத்திலும், தொழிலிலும் ஏற்றம் உண்டு. பயணங்களால் ஆதாயம் உண்டு. புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. உத்யோகத்தில் உயரதிகாரிகளின் உதவி இருக்கும். சுப காரியங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

மீனம்

மீன ராசிக்கு உங்கள் ராசிநாதன் குரு நான்காம் இடத்தில் இருக்கிறார். குரு பகவான் பார்வை பத்தாம் இடத்தில் விழுவதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இறங்கிய முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். நிலம், வீடு சொத்துகள் வாங்குவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்களால் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படும். உத்யோகம், வெளிநாடு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+