ஆடி மாதத்தில் சிக்ஸர் அடிக்கப் போகும் மேஷம் ராசியினர்.. தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் பிறக்கப் போகிறது. இந்த ஆடி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு நிகழப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் சனி வக்கிர கதியில் இயங்குகிறார். ஜூலை 12 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை சனி வக்ர கதியில் இயங்கப் போகிறார். கும்பம் வீட்டில் ராகு குருவின் பார்வையில் இருக்கிறார். சுக்கிரன் தனது சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார். 24 ஆம் தேதிக்குப் பிறகு குருவோடு இணைந்த சுக்கிரனாக மிதுனத்தை நோக்கி பரிவர்த்தணை செய்கிறார்.

சூரிய பகவான் ஆடி மாதம் 1 ஆம் தேதி கடகத்துக்கு பிரவேசிக்கிறார். அந்த இடத்தில் புதனும் இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் பகவான் கேதுவிடம் இருந்து தப்பித்து கன்னி வீடான புதன் வீட்டுக்கு சஞ்சாரம் செய்யப் போகிறார். மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் எப்படி இருக்கும், என்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம் ஆடி மாத பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் அற்புதமான மாதமாக இருக்கும். இதுவரை இல்லாத அளவுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். 2 ஆம் வீட்டு அதிபதி, 11, 10 ஆம் இடத்தில் சுபக் கிரகங்கள், 6 ஆம் இடத்தை தொல்லை செய்யாமல் பாவக் கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் அற்புதமான மாற்றம் ஏற்படும். அந்த மாதிரியான காலகட்டமே மேஷ ராசிக்காரர்களுக்கு ஆரம்பிக்கிறது.
பாக்கியங்கள் கிடைக்கும்
ஆடி மாதத்தில் உங்களுக்கு அனைத்து விதமான மேன்மைகளும் கிடைக்கும். ராசிநாதன் 5 ஆம் இடத்தில் கேதுவுடன் அமர்ந்திருக்கிறார். 2 ஆம் வீட்டு அதிபதி இதுவரை ராசியில் அமர்ந்திருந்ததால் நிறைய விரையங்கள் ஏற்பட்டிருக்கும். இப்போது சுக்கிர பகவான் தனது சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார். ஜூலை 24 ஆம் தேதிக்குப் பிறகு குருவோடு இணையப் போகிறார். அது உங்களுடைய மூன்றாம் இடத்தில் நிகழும். ராஜயோகமான காலகட்டமாக இருக்கும்
ஏற்கெனவே குரு பகவானால் தகவல் தொடர்பு, நல்ல புரோஜக்டுகள் கிடைத்துக் கொண்டிருந்திருக்கும். நிறைய நல்ல விஷயங்களை குரு கொடுக்க ஆரம்பித்துவிட்டார். இதுவரை மூத்த சகோதரர்களுன் இருந்து வந்த பிணக்குகள் அனைத்தும் நீங்கி அவர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். 2 ஆம் வீட்டு அதிபதி 3 ஆம் வீட்டில் அமருவதால் முயற்சிகள் மூலமாக பண வரவு அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடையும் யோகம் உண்டாகும்.
வண்டி, வாகன யோகம்
4 ஆம் இடத்தில் 5 ஆம் அதிபதி அமருவதால் வண்டி, வாகனம், இடம் சேர்க்கை உண்டாகும். உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும் யோகம் உண்டாகும். உங்களுக்கு தேவையானவற்றை எல்லாம் கற்றுக் கொள்வீர்கள். நிறைய மேஷ ராசிக்காரர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பதற்றம், படபடப்பு அனைத்தும் நீங்கும். நிறைய வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். எந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ளலாம் என்ற அளவுக்கு அதிர்ஷ்டங்கள் வரும்.
ராஜயோகம்
ஜூலை 24 ஆம் தேதிக்குப் பிறகு அற்புதமான மாற்றங்களும், முன்னேற்றங்களும் கிடைக்கும். புதிய வண்டி, வாகனம் வாங்குவீர்கள். சேமிப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். குருவோடு சுக்கிரன் இணைவதால் மிகப்பெரிய ராஜயோகம் கிடைக்கும். பெண் தோழிகள் மூலமாக மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.
விரையம்
படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஒரு மாதம் அருமையாக இருக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அறிவு மேலோங்கும். உங்களுடைய திறமையை அடையாளப்படுத்தும் காலகட்டமாக இருக்கும். 20 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாக காலமாக இருக்கும். ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் விரையங்களும் ஏற்படும். 12, 2 ஆம் வீட்டின் அதிபதி இணைந்திருப்பது நல்ல யோகத்தைக் கொடுக்கும்.
செலவுகள் செய்வீர்கள்
உங்களுடைய குடும்பத்துக்காக, உங்களுக்காக, பயணத்துக்காக செலவு செய்வீர்கள். வருமானத்துக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க கூடிய காலகட்டமாக இருக்கும். புத்திசாலித்தனமாக உடல் உழைப்பால் செயல்படுவீர்கள். இந்த மாதத்தில் எந்த விஷயத்தை செய்தாலும் யோசித்து செயல்பட்டு அதில் வெற்றி பெறுவீர்கள்.
ஆரோக்கியம்
ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டம் அற்புதமாக இருப்பதால் முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும். சாப்பிடும் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. மிகப்பெரிய தொழிலதிபராக மாறுவதற்கான வாய்ப்புள்ளது. மகா விஷ்ணுவோடு கூடிய மகாலட்சுமி வழிபாடு, பெருமாள் கோயில் வழிபாடு, ஞாயிற்றுக்கிழமை அன்று சிவன் ஆலயத்தில் தேன் கொடுத்து வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications