தங்க மழையில் நனையப் போகும் மேஷ ராசி.. தொட்டதெல்லாம் துலங்கும் யோகம்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் ஏற்படும். ஆனி மாதம் முடிந்து தற்போது ஆடி மாதம் பிறக்கப் போகிறது.

ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதமாகும். ஆடித் திருவிழா, குலதெய்வ வழிபாடு, நல்ல காரியங்கள், உணவு தானமாகக் கொடுப்பது, அனைத்து கோயில்களின் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சூரியனின் நகர்வை வைத்தே ஒவ்வொரு மாதமும் கணிக்கப்படுகிறது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் மாதமே ஆடி மாதம். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானதாகும்.
இந்த ஆடி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், மேன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு பயணங்களால் அனுகூலங்கள் காணப்படும். அதன் மூலம் ஆதாயங்களும் ஏற்படும் சமுதாயத்தில் உங்களுடைய செல்வாக்கு, மதிப்பு, மரியாதை உயரும். உத்தியோகம், தொழில், வியாபாரம், சுபகாரியம் தொடர்பான பயணங்களால் ஆதாயம் காண்பீர்கள். உங்கள் மனதுக்குப் பிடித்த ஒவ்வொரு விஷயங்களையும் செய்து முடிப்பீர்கள்.
முன்னேற்றம்
கூட்டுத் தொழில் செய்து வருபவர்கள் இனி தனித்தொழில் செய்து மகிழ்வீர்கள். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து கட்டாயமாக நல்ல செய்திகள் வந்து சேரும். பூமி தொடர்பான விஷயங்களில் வாங்குவது, விற்பது போன்ற சிக்கல்கள் தீரும். பதற்றங்களைத் தவிர்ப்பது நல்லது. முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இதுவரை இழுபறியான நிலைமைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். அந்த நிலைமைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும்.
பதவி உயர்வு
பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்களைச் செய்து மகிழ்வீர்கள். கடல் கடந்த பயணங்களுக்கு தேதியை சரியாகப் பார்த்து திட்டமிடுவது நல்லது. திடீர் பண வரவு அதிகரிக்கும். நல்ல முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பெரிய அளவிலான முன்னேற்றத்தைக் காண்பீர்கள்
தடைகள் நீங்கும்
வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள், சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து முதலீடுகள் அபரிமிதமாக வரும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவுக்காரர்கள் சொல்வதை காதில் போட்டுக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உறவு முறையில் மேன்மை அடைவீர்கள். பழைய விஷயங்களைப் பற்றி பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்வது நல்லது.
வாகன யோகம்
வாகன அமைப்பில் அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. மன பாரங்கள், குழப்பங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்களுடைய வார்த்தைக்கு குடும்பத்திலும், வெளியிடத்திலும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
ஆரோக்கியம்
தொற்றுநோய்கள் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நீர்நிலைகளில் குளிக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மையை ஏற்படுத்தும். விடுபட்ட நீத்தார் கடனை செய்து முடிப்பது நல்லது.
வழிபாடு
குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவது நன்மையை ஏற்படுத்தும். துர்க்கை வழிபாடு சகலவிதமான நன்மைகளும் ஏற்படுத்தும். துர்கை கவசம் கேட்பது நல்லது. மொத்தத்தில் இந்த ஆடி மாதத்தில் உங்களுக்கு நன்மைகள், பயணங்கள், பண வரவுகள் நிச்சயமாக கிடைக்கும். வளர்ச்சியும், முன்னேற்றமும் மிகுந்த காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications