கும்பத்துக்கு டபுள் டக்கர் யோகம்.. தொழிலில் லாபம்.. உத்யோகத்தில் புதிய பொறுப்பு.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

ஆனி மாத பலன்: விசுவாவசு வருடம், ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான ஆனி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

உத்திராயணத்தின் 6 வது மாதம் கடைசி மாதம் ஆனி. பொதுவாகவே மாதாந்திர கிரகம் என்று சொல்லக்கூடிய சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களின் மாற்றத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை வைத்து மாதத்தை நிர்ணயம் செய்வோம்.

aani-maadha-palan-2025-kumbam-aquarius-rasi-people-get-good-benefits-fortunes-during-this-period

இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் புதன், குரு, சூரியன் ஆகிய 3 கிரகங்களும், சிம்மத்தில் செவ்வாய், கேது ஆகிய கிரகங்களும், கும்ப ராசியில் சனி, ராகு ஆகிய கிரகங்களும் உள்ளன. மொத்தத்தில் இந்த ராகு கேதுவில் எல்லா கிரகங்களும் அடங்கியுள்ளன. நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெளிநாட்டு சக்திகள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

இந்த காலகட்டத்தில் நாம் போடக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஜூன் 22 ஆம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்குப் போகிறார். 29 ஆம் தேதி சுக்கிரன் சொந்த வீட்டுக்கு ஆட்சிக்குப் போகிறார். இந்த ஆனி மாதத்தில் இவை இரண்டும் தான் பெரிய கிரக மாற்றமாக உள்ளன. மற்றபடி அனைத்து வருட கிரகங்களும் அந்தந்த இடத்தில் உள்ளன.

இந்த ஆனி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் அதிர்ஷ்டங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கும்பம்

மன உறுதி கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியின் அதிபதி சனி, இரண்டாம் வீட்டில் இருக்கிறார். உங்கள் ஜென்ம ராசியில் ராகு பகவான் உள்ளார். குரு பகவான் உங்களுக்கு ஐந்தாவது இடத்தில் இருந்து ராசியை பார்ப்பது நல்ல பலன்களை கொடுக்கும். மன சங்கடங்கள் ஓரளவுக்கு குறைந்து சற்றே நிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்டம்

ராகு உங்கள் ராசியிலேயே இருப்பதால் எண்ணங்கள் உயர்வாக இருக்கும். மிகப்பெரிய இலக்கை வைத்து ஓடிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் செலுத்தும் கடின உழைப்புக்கான அங்கீகாரம், பலன் நிச்சயம் கிடைக்கும். மேலும் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சுக்கிரன், ஐந்தாம் இடத்தில் சூரியன் இருப்பதும் அதிர்ஷ்டங்களை கொடுக்கும். புதிய கடன் உருவாகும்.

பாக்கியம்

உங்கள் ஐந்தாம் இடத்தின் அதிபதியான புதன் பகவானும் அங்கேயே இருக்கிறார். இது அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தும். சுப காரிய தடைகள் விலகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வாய்ப்புகள் கைக்கூடி வரும். மாத பலன்களில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் கிரகங்களின் அமைப்பு முக்கியம்.

சொத்து வாங்கும் யோகம்

ஏழாம் அதிபதி 11 வது இடத்தில் இருப்பதால் எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். காதல் உறவில் வெற்றி கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். புதிய நிலம், வீடு, வண்டி வாகனம், நகைகள் வாங்குவதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. தொழிலில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் பலனளிக்கும்.

வெற்றி

மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், கட்டுமானம், இரும்பு சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்போர், துப்புரவு பணியாளர்கள், புரட்சியாளர்கள், போராளிகள் ஆகியோருக்கு இந்த மாதம் நன்றாக இருக்கும். சமூகத்தில் அவர்களின் பெயர், புகழ் அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும்.

அலைச்சல்

பணிச்சுமை அலைச்சல் சற்று அதிகரிக்கும். குழந்தைகளால் சற்று விரயம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்பாலின உறவில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நண்பர்களுடன் வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது.

கவனம்

முதலீடு சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனி 1,2,3 ஆகிய தேதிகள் சந்திராஷ்டம நாட்கள். எனவே அந்த காலகட்டத்தில் சந்திராஷ்டம தாக்கம் அதிகளவு இருப்பதால் மனக்குழப்பம், அழுத்தம் ஏற்பட உள்ளது. அருகில் உள்ள விநாயகர் கோயில் சென்று வழிபடுவது மற்றும் சர்வேஸ்வரர் வழிபாடு ஏற்றம் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+