Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்னி நட்சத்திரம்... மழை வளம் பெருக... ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு திருமஞ்சன திருவிழா

அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறையவும் மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு 33 நாட்கள் தொடர் திருமஞ்சன திருவிழா நடைபெற உள்ளது.

Subscribe to Oneindia Tamil

வேலூர்: அக்னி நட்சத்திரம் வரும் மே 4ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் வெயில் கால நோய்களில் இருந்து தப்பிக்கவும் வெப்பத்தின் தாக்கம் குறையவும் மழை வேண்டியும், ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு 33 நாட்கள் தொடர் திருமஞ்சன திருவிழா நடைபெற உள்ளது.

அக்னி நட்சத்திரம் மே 4 ஆம் தேதி தொடங்க உள்ளது. மே 29 வரை இனி வெயில் வாட்டி எடுக்கும். தலையில் படும் நேரடி வெயிலினால் மூளை நரம்புகள் பார்வை நரம்புகள் போன்றவை பாதிக்கப்பட்டு பித்தம் அதிகரித்த நிலையில் ஒற்றை தலைவலி மற்றும் பார்வை கோளாறுகள்,முடி கொட்டுதல் ஏற்படுகின்றது.

Agni nachatram: Special Tirumanjanam festival to Lord Sri Dhanvanthri

கோடைகாலத்தில் பலருக்கும் அடிக்கடி சிறுநீரக கோளாறுகள், நீர் சுருக்கு ஏற்படுகின்றது. கொப்புளம், அம்மை, அக்கி போன்ற தோல் நோய்களை ஏற்படுத்தி விடுகிறது. வெயில் காலத்தில் கோடை கால நோய்களான வேனல் கட்டி, அம்மை, கண் பாதிப்புகள் ஏற்படும். கோடைகால நோய்களில் இருந்து மக்கள் தப்பிக்க கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும் வருகிற 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை முதல் 26.05.2022 வியாழக்கிழமை வரை 33 நாட்கள் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் தொடர் திருமஞ்சன திருவிழாவுடன் லக்ஷார்ச்சனை, புஷ்பாஞ்சலி வைபவங்கள் நடைபெறுகிறது.

தினமும் காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மிக்கு லக்ஷார்ச்சனையும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 26.05.2022 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை புஷ்பாஞ்சலியும், அன்னப்பாவாடை உற்சவமும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் அனைவரும் பெயர், நக்ஷத்திரம், கோத்திரம் தெரிவித்து இறை பிரசாதம் பெறலாம். தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. இராணிப்பேட்டை மாவட்டம். தொலைபேசி : 04172 - 294022, செல் - 94433 30203.

ஜோதிட ரீதியாக கோடை காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு என்ன காரணம் என்று பார்க்கலாம். கோடையில் ஏற்படும் நோய்களுக்கு முக்கூட்டு கிரகங்களான சூரியன்+புதன்+சுக்கிரன் ஆகிய மூன்று கிரங்களோடு செவ்வாயும் சேர்ந்து அதிக விளைவுகளை ஏற்படுத்தினாலும் அனேக வியாதிகளுக்கு சுக்கிரனே காரணமாக அமைந்துள்ளது. தற்போது மேஷ ராசியில் சூரியன், புதன் கூட்டணி அமைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் சுக்கிரனும் மேஷத்தில் குடியேறுவார். இந்த கூட்டணி மக்களுக்கு பலவித நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன், சூரியன், சுக்கிரன், புதன் எப்படி அமைந்துள்ளது என்பதைப் பொருத்தே சரும பிரச்சினையும் சரும நோய்களும் ஏற்படுகிறது. சந்திரன் மனதிற்கு காரகர். மன அழுத்தம் ஏற்பட்டால் சருமம் வறட்சியடைகிறது. இதனால் தோல்நோய்கள் எளிதாக ஏற்படுகிறது. தூக்கக் குறைபாடும் ஏற்படுகிறது. எனவே அதிக அளவில் தண்ணீர் பருகவேண்டும். இயற்கையான பழ ஜூஸ்களை குடிக்கலாம்.

அக்னி நட்சத்திர காலத்தில் தான தருமம் செய்வதோடு முருகனையும், அன்னை மீனாட்சியையும் வழிபடலாம். பரணி நட்சத்திரத்திற்கு உரிய தேவதையான துர்க்கையையும், கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவன்,ரோகிணி நட்சத்திரத்திற்கு உரிய பிரம்மாவையும் வழிபடலாம்.
முருகன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

உஷ்ணநோய் பாதிக்காமல் இருக்க, அரிசி மாவினால் சூரிய நவகிரக கோலமிட்டு, 'அஸ்வத் த்வஜாய வித்மஹே! பாஸ ஹஸ்தாய தீமஹி! தன்னோ சூர்ய ப்ரசோதயாத்!' என சூரிய காயத்ரீ சொல்லி வழிபடுவது சிறப்பு. பாஸ்கராய வித்மஹே! மஹத் யுதிகராய தீமஹி! தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத் என்று கூறி சூரியனை வழிபட பாதிப்புகள் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+