ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா : முன்பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி - நாமக்கல் கோவில் நிர்வாகம்
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நிகழ்ச்சிகளை சமூக வலைதளங்களில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாமக்கல்: ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கலில் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. இங்கு அதிக பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஆனால தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால், இது தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் அமலில் இருக்கின்றன.
இந்த நிலையில், வருகிற ஜனவரி மாதம் 2ஆம் தேதி இந்தக் கோயிலில் நடக்கும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில், பக்தர்கள் கலந்துக் கொள்ள ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி தரப்படும் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுமன் ஜெயந்தி
செய்தியாளர்களிடம் பேசிய நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உதவி ஆணையர், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஜனவரி மாதம் 2ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அன்று காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்கள் வீதம் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறை
பக்தர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இலவசம் அல்லது கட்டண வழியில் சென்று சாமி தரிசனம் செய்யலாம். ஆனால், அதற்கு பக்தர்கள் hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் மட்டுமே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியோடு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்" என்றார்.

நேரலையில் ஒளிபரப்பு
ஆஞ்சநேயர் ஜெயந்தி நிகழ்ச்சிகளை சமூக வலைதளங்களில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதனால், நேராக வர இயலாதவர்கள் சமூகவலைதள நேரலை காணொலிகள் மூலம் கண்டுக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முக கவசம் அவசியம்
முகக்கவசம் அணியாதவர்களுக்கு கோயிலுக்குள் செல்ல கண்டிப்பாக அனுமதி இல்லை. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications