August matha rasi palan: துலாம் ராசிக்கு ஆகஸ்டில் வரப்போகும் நல்ல செய்தி.. இனி தொட்டது துலங்கும்
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த அற்புதமான ஆகஸ்ட் மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதம் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும்.

தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நீதி, நேர்மை என்று இருக்கும் ராசியினர். நிறைய சோதனைகளை சந்தித்து வருவீர்கள். அலுவலகத்தில் அதிக வேலை, பணிச் சுமைக்கு ஆளாகியிருப்பீர்கள். சிலருக்கு வேலையே பிரச்சனையாக இருக்கலாம். இந்த மாதம் உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் பல நன்மைகளை கொடுக்கப் போகிறார். சுக்கிரன் 9 ஆம் இடத்தில் அமர்கிறார். அங்கு குரு பகவானும் இருக்கிறார்.
திருமண பாக்கியம்
சுக்கிரன், குரு இணைவால் திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். திருமணம் தொடர்பான நல்ல செய்திகள் தேடி வரும். இனிமையான பயணம், மகிழ்ச்சியான பயணங்கள் அமையும். பெயர், புகழ், அங்கீகாரம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வேலை ஒப்பந்தம், வியாபார ஒப்பந்தம், வெளிநாடு யோகம், மல்டிநேஷனல் நிறுவனத்தில் வேலை போன்றவை கிடைக்கும்.
அனுகூலம்
செவ்வாய் பகவான் 12 இல் மறைவதால் குடும்ப வாழ்க்கையில் கவனமாக இருப்பது நல்லது. கணவர் வெளிநாடு செல்வார், இல்லையெனில் குடும்பத்தில் ஏதாவதொரு பிரிவை சந்திப்பீர்கள். பண வரவு அபரிமிதமாக இருந்தாலும் ஏதாவதொரு பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் பெரிய யோகத்தைக் கொடுக்கும்.
புதிய கார், வீடு வாங்கும் யோகம்
சுக்கிரனுடன் குரு இணைந்து 3 ஆம் இடத்தைப் பார்ப்பதால் சந்தோஷமான செய்திகள் குடும்பத்தில் நடக்கும். சனி 6 ஆம் இடத்தில் வக்கிரத்தில் அமர்ந்திருப்பதால் புதிய கார் வாங்குவீர்கள். சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். 5க்குரிய கிரகம் 6 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கவனம்
தீய நண்பர்களின் பழக்க வழக்கம் ஏற்படும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. காதலில் ஏமாறுவதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவர்களுக்கு யோகம் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். உங்களுக்குப் பெயர், புகழ் கிடைக்கும். நீண்ட நாட்களாக ஆரோக்கியத்தில் குறைபாடு உள்ளவர்களுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும். மருத்துவத்தில் உயர்கல்வி படிக்கும் யோகம் மாணவர்களுக்கு ஏற்படும். கணினி துறையில் வெளிநாடு சென்று வேலை செய்யும் யோகம் உண்டாகும். வணிகம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பிபிஓ வேலைகள் கிடைக்கும்.
வழிபாடு
தர்மாதிபதி புதன் பகவான் கர்ம ஸ்தானத்தில் அமர்வதால் தர்ம சிந்தனை மேலோங்கும். நல்ல வியாபாரம், தொழில் யோகம் உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கும். எதிர்பார்க்கும் விஷயங்களெல்லாம் அனுகூலமாக நடக்கும் காலகட்டம். பெண்களுக்கு பெயர், புகழ் கூடும் மாதமாக இருக்கும். புண்ணைநல்லூர் மாரியம்மனை வழிபடுவது மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொடுக்கும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications