சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டித்தீர்த்த அதிகனமழை - ஜோதிட ரீதியான காரணங்கள்
சீனாவில் 1000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் மழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பெய்ஜிங்: சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் பலர் மாயமாகியுள்ளனர். அவர்களின் கதி என்னவானது என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை. இந்த மழை வெள்ளத்திற்கு சூரியன்,செவ்வாய் சேர்க்கை சனி பார்வையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜோதிடர்கள் காரணம் தெரிவித்துள்ளனர்
Recommended Video
சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் சனிக்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை பிற்பகுதி வரை, 617.1 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஓராண்டுகளில் பெய்ய வேண்டிய மழை மூன்று நாட்களில் பதிவாகியுள்ளது. 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன இதில் 25 பேர் இறந்துள்ளனர் என்றும் மேலும் லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சுரங்கப்பாதைகள், வீதிகள், ஹோட்டல்கள் மற்றும் ஏராளமான கட்டிடங்கள் ஆகியவை நீரில் மூழ்கியுள்ளதால் நகரத்தின் பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பிக்குகளுக்கான சரணாலயமான ஷாலின் கோயிலும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரியன் செவ்வாய் சனி
சீனாவிலும் ஜெர்மன் நாட்டிலும் கடுமையான மழையும் பெரு வெள்ளமும் ஏற்பட்டு அந்த நாடுகள் ஸ்தம்பித்து போயுள்ளன. இதற்கு ஜோதிட ரீதியான காரணங்களை தெரிவித்துள்ளார் பிரபல ஜோதிடர் நெல்லை வசந்தன். கிரக அசைவுகளும் உலக நடப்புகளும் ஏற்கனவே சொன்னது போல தற்சமயம் நடைபெறும் நிகழ்வுகள்
சூரியன் செவ்வாய் சனி பார்வை நெருக்கம் சேர்க்கை இவைகள் ஏற்படும் போது உலகத்தில் இயற்கை சீற்றம், விபத்துகள், வானிலை மாற்றங்கள், நிலநடுக்கம், வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு, இடிமின்னல் இவற்றால் எதிர்பாராத மரணம் ஏற்படுகிறது.

சனியின் பார்வை
காரணம் சூரியன் ஒரு அக்னி கிரகம் ஜுவாலை செவ்வாய் ஒரு நெருப்பு கிரகம் தணல். செவ்வாய் மலைசார்ந்த இடங்கள். சனி குளிர்ச்சி பனிமலை பள்ளத்தாக்கு போன்றவைகளைக் குறிக்கும் இந்த கிரகங்கள் தொடர்பு கிடைக்கும் போது மேற்சொன்ன இணைவுகள் அதன் காரகத்துவத்திற்கான இடங்கள் பாதிக்கப்படும்.

துலாம் ராசிக்கு சனி பார்வை
ஜியோஅஸ்ட்ராலஜிக்கல் படி இந்த கிரகங்கள் பாதிப்பு எந்த ராசியில் விழுகிறதோ அந்த ராசியில் உள்ள இடங்கள், ஊர்கள், நாடுகள் ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படும். சீனா துலாம் ராசி. மகர ராசியில் உள்ள சனிபகவானின் பத்தாவது பார்வை துலாம் ராசியின் மீது சனி பார்வை விழுவதால் சீனாவில் வரலாறு காணாத அளவு மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மும்பையில் மழை வெள்ளம்
தென்மேற்குப் பருவமழை மும்பையில் தீவிரமடைந்துள்ளதால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. மும்பை கும்ப ராசியில் வருவதால் சனி செவ்வாய் நேருக்கு நேர் பார்வை ஏற்பட்டதாலும் செவ்வாய் கும்பத்தை பார்வை செய்வதாலும் மழை வெள்ளம் ஏற்பட்டது.

வெள்ளத்திற்குக் காரணம்
ஜெர்மன் மேஷ ராசியில் வருவதால் ராசியாதிபதி செவ்வாய் கடக ராசியில் நீச்சம் பெற்றுள்ளதாலும் சனி பார்வை பெறுவதாலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடக ஆழியில் செவ்வாய் இருப்பதாலும் மகர ஆழியில் சனி இருப்பதாலும் ஜெர்மன் வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகி பலத்த சேதம் ஏற்பட்டதாக ஜோதிடர் நெல்லை வசந்தன் கணித்துள்ளார்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications