Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை - தினசரி பூஜைகள் நடைபெறும்

ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் விஷேச நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 8ஆம் தேதி ஆடி அமாவாசை 11ஆம் தேதி ஆடிப்பூரம் நாட்களில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இந்த நாட்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் எனவும் சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் வருகின்ற 9ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிக அளவில் பொது மக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி ,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது என கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 8 ஆடி அமாவாசை ஆகஸ்ட் 11 ஆடிப்பூரம் நாட்களில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசையான நாளை கோயில்களில் பக்தர்கள் வழிபட அனுமதியில்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்கள் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் நாட்களில் ஆகம விதிப்படி கோவில்களில் பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கோவிலுக்கு வெளியே வழிபாடு

கோவிலுக்கு வெளியே வழிபாடு

நேற்று முதலே கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் முன்பு நின்று ஏராளமான பெண்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பிரசித்தி பெற்ற மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், பத்திரகாளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி காளியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன், சிவகங்கை மதுரை முக்கு ரோட்டில் உள்ள காளியம்மன் கோவில், காரைக்குடி சிவன் கோவிலில் அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் சிலர் கோவிலுக்கு வெளியே அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

 ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை நாளில் அதிகாலையிலேயே எழுந்து கடல் மற்றும் ஆறு போன்ற புண்ணிய நீர்நிலைகளில் தங்களின் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில்களில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் அதிக கூட்டம் கூட வாய்ப்பு உள்ளதால் பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

 கடலில் நீராட தடை

கடலில் நீராட தடை

ஆடி அமாவாசை நாளில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனை போன்றவை பக்தர்கள் இன்றி நடைபெறும். மேலும், நாளை இரவு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடற்கரைக்கு பக்தர்கள் புனித நீராட செல்லாத வகையில் அனைத்து பாதைகளிலும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையிலும் ஆண்டுதோறும் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அங்கும் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை, பாபநாசம், சொரிமுத்து ஐயனார் கோவிலுக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 நாகை மாவட்டத்தில் கோவில்கள் மூடல்

நாகை மாவட்டத்தில் கோவில்கள் மூடல்

ஆடி அமாவாசையை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் சில வழிபாட்டுத்தலங்களுக்கும் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கும் பொது மக்கள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நிலவிவரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக, மாவட்டத்திலுள்ள அனைத்து மத வழிப்பாட்டு தலங்களிலும் வாரத்தின் கடைசி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வருகிற 31ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தரிசனம் செய்யவும், அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அந்தந்த மத ஆகம விதிகளின்படி நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறுவதற்கு தடை ஏதுமில்லை என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 கோவில் வாசலில் பிரார்த்தனை

கோவில் வாசலில் பிரார்த்தனை

நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், சவுந்தரராஜ பெருமாள் கோவில், சிக்கல் சிங்காரவேலர் கோவில், வேதாரண்யம் வேதாரண்யயேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் தர்கா, நாகூர் நாகநாதர் கோவில், நாகூர் பாத்திமா அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நேற்று மூடப்பட்டன. நாகூர் தர்கா மூடப்பட்டதால் வெளியூர், மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஆண்டவர் தர்கா அலங்கர வாசல், கால்மாட்டு வாசல், கீழக்கு வாசல் பகுதிகளில் வெளியில் நின்று பிரார்த்தனை செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+