Rasi Palan This Week: தனுசு ராசிக்கு அடுத்தடுத்து ஜாக்பாட்.. 3 ஆம் நபர்களிடம் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான ஆவணி 23 முதல் ஆவணி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

dhanusu-weekly-rasi-palan-what-kind-of-benefits-dhanusu-sagittarius-people-will-get-from-septembe

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பொதுவாக இந்த மாதம் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.

சூரிய கிரகணம், குரு வக்கிர பெயர்ச்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வேற்று மொழி பேசுபவர்களால் அதிகளவில் ஆதாயம் ஏற்படும். அடுத்தடுத்து எல்லா விதமான சுப காரியங்ளும் நடக்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். நல்ல லாபங்கள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளில் மேன்மை பெறுவீர்கள்.

மகிழ்ச்சி

குடும்பத்தில் உறவினர்கள் வந்து செல்லும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எல்லா விதத்திலும் ஏற்றமும், நன்மையும் பெறுவீர்கள். தனிப்பட்ட முறையில் நீண்ட நாட்களாக காணப்பட்டிருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். உறவு முறையில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் தீரும். குரு 7 ஆம் இடத்தில் இருப்பதால் கணவனாக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவரிடமும் மனம் விட்டுப் பேசுவது நல்லது.

ஆரோக்கியம்

மூன்றாம் நபர்களை நம்பி தேவையில்லாதவற்றை பேசி குடும்பத்தில் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அலர்ஜி, சளி தொந்தரவு, இருமல் போன்ற பாதிப்புக்குள்ளானால் சரியான மருத்துவ ஆலோசனை, மருந்துகளை எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும். நோய் பாதிப்புகள் ஏற்பட்டால் நீங்களாகவே மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

கவனம்

வேலை ஆட்கள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். தனுசு ராசிக்கு 7 இல் குரு இருப்பதால் வியாபாரம், வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, பயணங்கள், தெய்வ மார்க்கங்கள் என எல்லாவற்றிலும் மகிழ்ச்சி காணப்பட்டாலும் குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் காணப்படும் என்பதால் கவனம் தேவை.

வழிபாடு

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நிதி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. பெருமாள் வழிபாடு தினந்தோறும் செய்து வருவது நன்மை தரும். மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கக்கூடிய வாரமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+