Diwali 2025: தீபாவளியன்று இதை செய்ய மறந்துடாதீங்க.. 12 ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை தரும் வழிபாடு
Diwali 2025: தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தீபாவளியன்று செய்ய வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
அனைத்து மக்களாலும் ஐப்பசி 3 ஆம் நாள் அக்டோபர் 20 ஆம் தேதி (திங்கள்கிழமை) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சதுர்தசி திதியன்று தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி திருநாள் என்றாலே நகர சதுர்தசி என்ற நாளில் ஸ்நானம் செய்வது சிறப்பாகும். அதனை அதிகாலையில் செய்வது மிகவும் நல்லது. காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெய்யை சூடு செய்து தலையில் வைத்துக் குளிப்பது கஷ்டத்தை தீர்க்கும் என்பது ஐதீகம். குறிப்பாக கங்கா ஜலத்தை ஒரு சொட்டாவது தண்ணீரில் விட்டு குளிப்பது நல்லது.

எண்ணெய் குளியல்
உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்த்து குளிப்பதென்றாலும் குளிக்கலாம். தீபாவளி தினத்தன்று பிரம்ம முகூர்த்தமான 3 முதல் 4 மணிக்குள் வீட்டில் தீபமேற்றுவது விசேஷ பலன்களைத் தரும். அந்த சமயத்தில் ஒரு வெடி அல்லது சரம் போன்ற பட்டாசுகளை வெடிப்பது நல்லது. அதேபோல, புத்தாடைகளை பிரம்ம முகூர்த்தத்திலேயே அணிவது நன்மை பயக்கும்.
முதல் பலகாரம்
முதல் பலகாரமாக கோயில் பிரசாதம் அல்லது வீட்டில் செய்த பலகாரத்தை சாப்பிடுவது நல்லது. கண்டிப்பாக ஒரு வெடியையாவது வைக்க வேண்டும். தெய்வத்தின் கோயில்களுக்குச் சென்று வழிபடலாம். அஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசியில் தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. மாலை 4.18 மணி வரை சதுர்தசி திசை. அதன் பிறகு அமாவாசை தொடங்கும்.
வழிபாடு
அஸ்தம் நட்சத்திரத்துக்கு ஏற்றவாறு ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் தெய்வ வழிபாடு செய்வது நல்லது. முதலில் விநாயகரை வழிபடுவது சிறந்தது. நவக்கிரகத்தில் இருக்கும் சந்திரனுக்கு அகல் தீபமேற்றுவது எல்லா ராசிக்காரர்களுக்கும் சிறப்பைத் தரும்.
மேஷம் முதல் மீனம் ராசிக்காரர்களுக்கான தீபாவளி சிறப்பு பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு விநாயகர் வழிபாடு நன்மையை ஏற்படுத்தும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் விநாயகருடன் அம்பாளை வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு விநாயகர், சந்திரன், பெருமாளை வழிபாடு செய்வது அற்புதமான ஏற்றத்தை தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு விநாயகர், சந்திரன், சிவன் வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும். சிவனுக்கு நல்லெண்ணெயும், வில்வ இலையையும் கொடுத்து வழிபடுவது நல்லது
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு விநாயகர், சந்திரன் வழிபாடு மிகப்பெரிய அனுகூலத்தை ஏற்படுத்தும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு விநாயகர், சந்திரன் வழிபாடுடன், மகாலட்சுமியை வெண் தாமாரை கொண்டு வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு விநாயகர், சந்திரன், முருகனை வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் விநாயகர், சந்திரன், துர்க்கை வழிபாடு செய்வது முன்னேற்றத்தை தரும். 7 எலுமிச்சம்பழத்தை சுவாமிக்கு கொடுத்து விட்டு ஒரு பழத்தை வீட்டுக்கு வாங்கி வந்து எலுமிச்சை சாறாக சர்க்கரை சேர்த்து பருகுவது நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு விநாயகர், சந்திரனுடன், மகான்களை வழிபாடு செய்வது அருமையான யோகத்தை தரும்.
மகரம்
மகர ராசியினருக்கு விநாயகருடன் சந்திரனை வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு விநாயகர் வழிபாடு செய்வதும், அருகில் உள்ள சிவன் கோயில்களுக்கு நல்லெண்ணெய் தானமாக கொடுப்பது அனுகூலத்தை ஏற்படுத்தும்.
மீனம்
மீன ராசியினருக்கு பெருமாள், தாயார், அனுமன் இருக்கக்கூடிய கோயில்களில் வழிபாடு செய்வது மேன்மையைத் தரும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications