பட்டையை கிளப்பப் போகும் துலாம் ராசி.. 90 நாட்களில் நடக்கும் அதிசயம்.. இதை மிஸ் பண்ணிடாதீங்க
குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கடகத்தில் இருக்கும் குரு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சிம்மத்திற்கு வருகிறார். மீண்டும் வக்கிரமாகி பின்னோக்கி கடகத்திற்குச் செல்வார். இந்த நிகழ்வே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 90 நாட்கள் அதிசாரம் நடக்கும். 9 கிரகங்களுக்கும் அதிசாரம் நடைபெறும். இந்த கிரக மாற்றத்தின்போது 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

அக்டோபர் 31 ஆம் தேதி பகல் 12.05 மணிக்கு குரு அதிசாரமடைகிறார். ஜனவரி 25 ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. அதன்படி, இந்த 3 மாதங்களில் குரு அதிசாரப் பெயர்ச்சியால் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு எதிரிகள் எல்லாம் விலகி ஓடக்கூடிய காலகட்டமாக இருக்கும். யார் எதிரிகள் என்பதை இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி காலகட்டத்தில் புரிந்து கொள்வீர்கள். 6 ஆம் அதிபதியான குருவே 11 ஆம் இடத்தில் அமர்ந்து அதிசாரமாக வருவதால் பணம் வாங்கி ஏமாற்றியவர்கள் உங்களிடம் பணத்தை மீண்டும் கொண்டு வந்து கொடுப்பார்கள். எதிரிகள் செய்யும் கெட்டது உங்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும்.
முயற்சிகளில் வெற்றி
கடன் அடைவதற்கான அமைப்பு உள்ளது. நெருங்கிய உறவினர்களின் பிரச்சனைகள் தீரும். நல்லவர்கள் போல உங்களுடன் இருந்தவர்கள் தன்னால் விலகுவார்கள். நல்லவர்கள் உங்களுடன் மீண்டும் சேரும் அமைப்பு உள்ளது. நேர்காணல்களில் வெற்றி பெறுவீர்கள். மிகவும் கடினமான நேர்காணலை கூட நிச்சயமாக வெற்றி பெற்று நல்ல வேலை கிடைக்கும் அமைர்ரு உள்ளது. எதை முயற்சி செய்தாலும் அதை பெரியளவில் செய்வது நல்லது.
குடும்பம்
குறிக்கோள்களை பெரிதாக வைத்துக் கொள்ள வேண்டும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தொழில் சார்ந்த கடன்களை அடைத்து முடிப்பீர்கள். பாட்னர்ஷிப்பில் இருக்கும் பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். வெளிநாட்டு கிளைன்டுகள் மூலமாக லாபம், யோகம் நிச்சயமாக கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருந்து பெரிய பிரச்சனைகள், விவாகரத்து போன்ற விஷயங்கள் இருப்பினும் கூட மீண்டும் சேரக்கூடிய அமைப்பு உள்ளது. கணவன், மனைவி பேசி சமாதானமாக இந்த 3 மாதங்கள் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
திருமண யோகம்
திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் நடக்கும் யோகம் உண்டாகும். மறுமண யோகமும் உண்டு. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலைகளை ஒப்பிட்டுப் பார்த்து பொருள்களை வாங்குவது நல்லது. பொருளாதார தேவை, முக்கியத்துவத்தைப் பற்றி குடும்பத்திடம் தெளிவாக பேசிக் கொள்வது நன்மை பயக்கும்.
வழிபாடு
வரும் 3 மாதங்களில் வரும் அமாவாசை தினத்தன்று லட்சுமி குபேர பூஜையை முறையாக செய்வது நல்ல பொருளாதார முன்னேற்றத்தையும், தன லாபத்தையும் கொடுக்கும். வீட்டில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது விஷேசமாக இருக்கும். 6 ஆம் அதிபதி குருவாக இருப்பதால் கொண்டைக்கடலை தானமாகக் கொடுப்பது நன்மை பயக்கும். மஞ்சள் நிற ஆடைகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. காரமடை ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரும்.


Click it and Unblock the Notifications
