குருப்பெயர்ச்சி: மீனம் ராசிக்கு ஜாக்பாட்.. இந்த ஒரு விஷயத்தை மட்டும் கவனிங்க
Guru Peyarchi Palangal: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் திருக்கணிதத்தின் படி சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்று பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டும், குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். குருப்பெயர்ச்சி வாக்கியத்தின்படி மே 11 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

குருவின் பிரசித்திபெற்ற கோயிலான ஆலங்குடி குரு ஸ்தலம் மற்றும் மற்ற சிவாலயங்களில் உள்ள குரு சந்நிதிகளில் வாக்கியப்படி மே 11 ஆம் தேதி விசேஷ பூடைகள் நடைபெறும். குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் இருக்கக் கூடியவர். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வர கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகும். மே 14 ஆம் தேதி திருக்கணிதத்தின் படி இரவு 10.30 மணிக்கு குருப்பெயர்ச்சி நடக்கிறது. ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான்.
மிதுனம் என்பது குருவின் வீடு. மிதுனத்துக்கு குருவானாவர் பலவிதத்தில் உபத்திரவத்தை கொடுக்கக் கூடியவர். குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிக வலிமையாக இருக்கும். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மீனம் - மீனம் ராசிக்கு ஜென்ம ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகியுள்ளார். குரு பகவான் மூன்றாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்துக்கு வருகிறார். ராகு பகவான் 12 ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது பகவான் ஆறாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவானால் உடலில் நீண்ட காலமாக இருந்த ஒரு பிரச்னைக்கு இப்போது தீர்வு கிடைக்கும்.
உத்யோகம்
உத்யோகம், தொழிலில் ஏற்றம் உண்டு. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அரசு பணியில் இருப்போருக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழிலில் சிறப்பான லாபம் கிடைக்கும். அரசியல் வாதிகளின் புகழ் உயரும். பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு பயணங்களால் ஆதாயம் உண்டு.
புதிய பொறுப்பு
பண வரவு சிறப்பாக இருக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். சிவில் சர்வீஸ், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுகளில் முயற்சி செய்வோருக்கு வெற்றி கிடைக்கும். கல்வி, உத்யோகம், தொழில் தடைகள் நிவர்த்தியாகும். சுப காரியங்கள் நிறைவேறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். சுப விரயம் நிச்சயம் உண்டு.
லாபம்
ஆச்சர்யபடுமளவுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆன்மிக பயணம் மன நிறைவை தரும். வேற்று மொழி மனிதர்களால் லாபம் கிடைக்கும். எல்லாவற்றிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
எச்சரிக்கை
கிரெடிட் கார்டு, ஆன்லைன் பரிவர்த்தனை, சைபர் உள்ளிட்ட விஷயங்களில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். ஜென்ம சனி இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரத்தம், தொற்று நோய், தோல் அலர்ஜி, சர்க்கரை, மன அழுத்தம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்திக் கொள்வது நல்லது.
பரிகாரம், வழிபாடு
கும்பகோணம் ஆடுதுறை மங்களாம்பிகை மற்றும் சூரியனார் கோயில் சென்று வழிபடுவது நல்லது. சூரிய காயத்ரி கேட்பது நல்ல பலன்களை கொடுக்கும். சனிக்கிழமை மதியம் உணவு, எலுமிச்சை ஊறுகாய் தானம் செய்வதால் நல்லது நடக்கும்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications