குருப்பெயர்ச்சி: விருச்சிகத்துக்கு இனி நோ டென்ஷன்.. சொந்த வீடு, வெற்றி, அதிர்ஷ்டம், பணம் கொட்டும்
Guru Peyarchi Palangal: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் திருக்கணிதத்தின் படி சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்று பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டும், குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். குருப்பெயர்ச்சி வாக்கியத்தின்படி மே 11 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

குருவின் பிரசித்திபெற்ற கோயிலான ஆலங்குடி குரு ஸ்தலம் மற்றும் மற்ற சிவாலயங்களில் உள்ள குரு சந்நிதிகளில் வாக்கியப்படி மே 11 ஆம் தேதி விசேஷ பூடைகள் நடைபெறும். குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் இருக்கக் கூடியவர். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வர கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகும். மே 14 ஆம் தேதி திருக்கணிதத்தின் படி இரவு 10.30 மணிக்கு குருப்பெயர்ச்சி நடக்கிறது. ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான்.
மிதுனம் என்பது குருவின் வீடு. மிதுனத்துக்கு குருவானாவர் பலவிதத்தில் உபத்திரவத்தை கொடுக்கக் கூடியவர். குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிக வலிமையாக இருக்கும். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பட்டீஸ்வரம் சென்று துர்க்கையை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். துர்கைக்கு 1 கிலோ நல்லெண்ணெயோ, 38 உதிரி எலுமிச்சம்பழத்தையோ, விபூதி, குங்குமம் கொடுத்து பூஜை செய்ய வேண்டும். 5 எலுமிச்சையை மட்டும் வீட்டிற்கு வாங்கி வந்து தினந்தோறும் தீபமேற்றி வழிபட்டு வருவது அனுகூலமான பலன்களைத் தரும்.
ஆரோக்கியத்தில் கவனம்
7 இல் இருந்து அஷ்டமத்துக்கு சனி பகவான் போவதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மூச்சு, இதயப் பகுதி, சுவாசக் கோளாறு, ரத்த அழுத்தம், சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கண்டிப்பாக கொடுத்த வாக்கை வீட்டிலும், சமுதாயத்திலும் காப்பாற்றுவீர்கள். குருவின் பார்வை 2 ஆம் இடத்தில் உள்ளதால் திருமண யோகம் உண்டாகும்.
சொத்து வாங்கும் யோகம்
சுப விரைய பிராப்தம் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டானாலும் சந்தோஷ செலவாக இருக்கும். வீடு, நிலம், வண்டி, வாகனம் வாங்குவது, புதிய முதலீடு செய்வது, வியாபாரத்தைப் பெருக்குவது, தாய் வழி உறவு, தந்தை வழி உறவு ஏற்றம் பெறுவது போன்ற அனைத்து யோகங்களும் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் கோபதாபம் கூடாது.
பண வரவு
திருக்கணிதத்தின்படி 5 ஆம் இடத்தில் சனி அடுத்த இரண்டரை காலம் இருப்பதால் அபிராமி அந்தாதியில் 40, 59, 75 படிப்பது நல்லது. தூக்கமின்மையால் பெரிய தொந்தரவு ஏற்படக்கூடிய சூழல் ஏற்படும். தியானம், யோகா செய்வது நல்ல பலன்களைத் தரும். உடற்பயிற்சி செய்வது நல்லது. பணம் விஷயத்தில் கவலையே வேண்டாம். பெரிய சாதனை அடைவீர்கள். உறவு, சொந்த பந்தம், நட்பு வட்டாரங்களே அவர்களே எதிரியாக மாறுவார்கள். உங்களைப் பற்றி புறம் பேசுவார்கள்.
பரிகாரம், வழிபாடு
மிகுந்த மன வருத்தம் ஏற்படும். சந்திரன் நீச்சமடைந்த ராசி என்பதால் சட்டென்று கோபப்படுவீர்கள். மற்றவர்களை நினைத்து கவலையே படாதீர்கள் துர்கையை நினைத்து வழிபாடு செய்யுங்கள். நீங்கள் காணும் இடத்தில் எல்லாம் பட்டீஸ்வரர், துர்கையை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். எல்லாவற்றிலும் சாதிக்கும் நம்பிக்கை ஏற்படும். குருவாயூர் கிருஷ்ணர், திருச்செந்தூர் முருகர் வழிபாடு அற்புதத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கும். மன அழுத்தத்தை தீர்க்கும்.
-
Guru Peyarchi: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ஆபத்து.. இந்த விஷயங்களில் மிகுந்த கவனம் அவசியம் -
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. லாபத்தில் குரு.. கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட் -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
Guru Peyarchi: மீனம் ராசிக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில்! குருப்பெயர்ச்சி தரும் அசத்தல் பலன்கள் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications