For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெய்வீக திருமணங்கள் நடக்கும் பங்குனி மாதம்..பங்குனி உத்திரம்..ஸ்ரீராம நவமி..என்னென்ன விரதங்கள்

பங்குனி மாதத்தில் தெய்வீக திருமணங்கள் அதிகம் நிகழும். முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: பங்குனி மாதம் பிறந்து விட்டது. வசந்தகால மாதம். மீன மாதம். அற்புதமான இந்த மாதத்தில் தெய்வீக திருமணங்கள் நிகழ்ந்துள்ளன. சிறப்பு வாய்ந்த உகாதி, பங்குனி உத்திரம், ராம நவமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அற்புதம் மிகுந்த பங்குனி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள் எந்த நாட்களில் நடைபெற உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

காரடையான் நோன்பு இந்த மாதத்தில்தான் கடைபிடிக்கப்படுகிறது. கார்காலத்தில் விளைந்த நெல்லை அறுவடை செய்து உரலில் குத்தி அரிசியாக்கி பொங்கல் வைத்து பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் பெண்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள். சாவித்திரி எமனிடமிருந்து தன்னுடைய கணவரான சத்தியவானின் உயிரை மீட்பதற்காக விரதம் மேற்கொண்டார்.

Important Viratham and festival days Tamil Month of Panguni

இந்த மாதத்தில் பெண்கள் கௌரி விரதம் மேற்கொண்டால் கணவரின் அவமிருத்த யோகத்தை முறியடிக்கலாம். இந்த விரதம் மாசி மாத கடைசி நாள் தொடங்கி பங்குனி மாத முதல் நாளில் நிறைவு பெறுகிறது. கணவனின் ஆயுள் விருத்திக்கும் ஆரோக்கியத்திற்கும் இந்த விரதம் உறுதுணையாக இருக்கிறது.

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தை ஒட்டி வருகின்ற பௌர்ணமி தினத்தன்று உத்திரப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. சிவன்- பார்வதி, முருகன் - தெய்வானை, ரங்கமன்னார் - ஆண்டாள் திருமணங்கள் இந்த நாளில் தான் தெய்வீக திருமணங்கள் நடைபெற்றன. இந்த மாதத்தில் கல்யாண விரதமும் மேற்கொள்ளப்படுகிறது.

அர்ஜூனன், மகாலட்சுமி. சாஸ்தா போன்றவர்கள் அவதரித்ததும் இந்த மாதத்தில்தான். பெரும்பாலான மக்கள் குலதெய்வ வழிபாட்டினை இந்த மாதத்தில் மேற்கொள்ளுகின்றனர்.

மாதசம்பளம் ரூ.36,000 முதல் ரூ.63,000.. அழைக்கும் சவுத் இந்தியன் வங்கி.. சூப்பர் வாய்ப்பு!மாதசம்பளம் ரூ.36,000 முதல் ரூ.63,000.. அழைக்கும் சவுத் இந்தியன் வங்கி.. சூப்பர் வாய்ப்பு!

பங்குனி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். இதில் விரதம் இருந்தால் தொழில் இடையூறுகள், எதிர்ப்புகள், போட்டி, பொறாமைகள் விலகிப் போகும். எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும். ஸ்ரீ ராமபிரான் இந்த விரதத்தை அனுஷ்டித்து ஆற்றல் பெற்ற பின்னர் தான் ராவணனை வென்று சீதையை மீட்டதாக இதிகாச வரலாறு கூறுகிறது.

பங்குனி மாதத்தில் வரக்கூடிய பண்டிகை நாட்கள் என்னென்ன எந்த நாட்களில் கொண்டாடப்பட உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

பங்குனி 1 மார்ச் 15 காரடையான் நோன்பு. ஷடாசீதி புண்ணிய காலம். இன்று தேய்பிறை அஷ்டமி புதாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. திரியகம்பாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது.

பங்குனி 4 மார்ச் 18 சனிக்கிழமை விஜயா ஏகாதசி

பங்குனி 05 மார்ச் 19 ஞாயிற்றுக்கிழமை மிருத்யுஞ்ச பிரதோஷம்

பங்குனி 07 மார்ச் 21 செவ்வாய்கிழமை சர்வ அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர ஏற்ற நாள்.

பங்குனி 08 மார்ச் 22 புதன்கிழமை உகாதி பண்டிகை, தெலுங்கு வருடப்பிறப்பு, கன்னட வருடப்பிறப்பு.

பங்குனி 12 மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ லட்சுமி பஞ்சமி

பங்குனி 14 மார்ச் 28 செவ்வாய்கிழமை கமல சப்தமி, சந்தான சப்தமி விரதம்

பங்குனி 16 மார்ச் 30 வியாழக்கிழமை ஸ்ரீராம நவமி

பங்குனி 17 மார்ச் 31 வெள்ளிக்கிழமை தர்மராஜா தசமி

பங்குனி 18 ஏப்ரல் 01 சனிக்கிழமை ஏகாதசி ஸ்மார்த்த காமத ஏகாதசி

பங்குனி 20 ஏப்ரல் 03 திங்கட்கிழமை சோம பிரதோஷம், மகாவீர் ஜெயந்தி

பங்குனி 22 ஏப்ரல் 05 புதன்கிழமை பங்குனி உத்திரம்

பங்குனி 26 ஏப்ரல் 09 ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தி

பங்குனி 28 ஏப்ரல் 11 செவ்வாய்கிழமை வராஹ ஜெயந்தி

பங்குனி 30 ஏப்ரல் 13 வியாழக்கிழமை சனாதனஷ்டமி

English summary
Panguni month is spring month. Pisces month. Divine marriages have taken place in this auspicious month. Special festivals like Ugadi, Panguni Uthiram and Rama Navami are celebrated. Find out what special events are taking place on which days in the auspicious month of Panguni
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X