மிதுனத்துக்கு சனி, குருவால் புது வீடு, புது கார் வாங்கும் யோகம்.. பண மழையில் நீச்சல் அடிக்க போறீங்க
ஜூலை மாத பலன்: ஜூன் மாதம் நிறைவடைந்து ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. இந்த ஜூலை மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகப் பெயர்ச்சிகளானது ஒவ்வொரு ராசியிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் ரிஷப ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் குரு, சூரியனும் இணைந்திருக்கின்றனர். கடகத்தில் புதன், சிம்மத்தில் கேதுவும், செவ்வாயும் உள்ளனர்.

கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும், மாதத் தொடக்கத்தில் சிம்ம ராசியில் சந்திர பகவான் உள்ளனர். இந்த மாதத்தின் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்கு வருகிறார். கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் மிதுன ராசிக்குச் செல்கிறார். 26 ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுன ராசிக்கும், 29 ஆம் தேதி சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் கன்னி ராசிக்குள் வருகிறார்.
அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், தெய்வ வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியில் சூரியனும், குருவும் இணைந்திருக்கின்றனர். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகமாக இருக்கும். சூரியன் அங்கு இருப்பதால் பெரிய மனிதர்களின் தொடர்புகளை ஏற்படுத்தும். உங்களை வெளிக்கொணருவதற்கான மாதமாக இருக்கும். உங்கள் ராசியில் சூரியன் இருப்பதால் தன்னம்பிக்கை, தைரியம் அதிகமாக இருக்கும். ராசிநாதன் 2 ஆம் இடத்தில் அமர்ந்துகொண்டு வக்கிர நிலையை ஜூலை 18 ஆம் தேதி அடைகிறார். ஆவணம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பாதிப்புகள் நீங்கும்
8 ஆம் அதிபதியான சனி பகவான் 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சனி தற்போது வக்கிரம் அடைவதால் தொழிலில் யாரெல்லாம் பாதிப்பைச் சந்தித்து வந்திருப்பீர்கள் அந்த பாதிப்புகள் அனைத்தும் பனி போல விலகும். தொழிலில் இருந்து அழுத்தம், பளு, இடர்பாடுகள் அனைத்தும் நீங்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தேங்கிக் கிடந்த விஷயங்கள் அனைத்தும் விற்பனையாகும். வக்கிர காலத்தில் தொழில் செய்வதற்கான எண்ணத்தைக் கொடுக்கும்.
பதவி உயர்வு
மந்தமாக இருந்த அத்தனை விஷயங்களும் இனி வேகமெடுக்கும். நல்ல வேலை கிடைக்கவில்லை என்று வருத்ப்பட்டவர்களுக்கு ஜூலை 13 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல வேலை கிடைக்கும். இடமாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு கட்டாய இடமாற்றம் கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். கொடுத்த வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள், சக ஊழியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான அற்புதமான வாய்ப்புள்ளது.
சொத்துகள் வாங்கும் யோகம்
உடல் மற்றும் மனதில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், தாய் சார்ந்த பிரச்சனைகள் தீரும் காலகட்டமாக இருக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். பிரிந்திருந்தவர்கள் தாயை சந்திப்பீர்கள். வீடு, வண்டி, வாகனம் வாங்க முடியாமல் இருந்தவர்களுக்கு இனி வாங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். சனி வக்கிரமாக பார்ப்பதால் திடீர் வாகனம், வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மாணவர்கள்
5 க்கு உரியவர் சுக்கிர பகவான் ஆட்சி பலத்தோடு வலிமையாக இருக்கிறார். 7க்கு உரிய குரு பகவான் 5 ஆம் இடத்தைப் பார்ப்பதால் காதல் மலரும், காதலிப்பவர்களுக்கு திருமண யோகம், தந்தையின் ஆதரவும் கிடைக்கும். மாணவர்கள் விருப்பப்பட்ட துறையைத் தேர்ந்தெடுத்து படிப்பீர்கள். 12 ஆம் அதிபதி வலியமையாக இருப்பதால் வெளிநாடு, வெளிமாநிலம் சென்று படிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
திருமண யோகம்
7 ஆம் அதிபதியான குரு 7 ஆம் இடத்தைப் பார்ப்பதால் அந்த இடம் வலுப்பெறும். திருமணமே வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வரும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரிந்த தம்பதிகள் சேரும் யோகம் உண்டாகும். கணவன், மனைவி செட்டிலாவீர்கள். தன வரவு சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.
பண வரவு
மக்கள் தொடர்புகள் அதிகமாக இருக்கும். வருமானத்தைப் பெருக்கி கொள்வீர்கள். லாபதிபதியாக இருக்கும் செவ்வாய் முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் லாபம் கொட்டும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். பாக்கியாதிபதியாக இருக்கும் சனி பகவான் 2ம் இடத்தில் அமர்ந்து அனைத்து பாக்கியங்களையும் தருவார். குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெறும் காலகட்டமாக இருக்கும். வெளிநாடு, வெளிமாநிலம், மாவட்டம் செல்லும் யோகம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications