ஜூன் ராசி பலன்: கன்னி ராசிக்கு "காசு பணம் துட்டு மணி மணி".. வாழ்க்கையே மாறப்போகுது
ஜூன் மாத ராசி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த 3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜூன் மாதத்தை பொறுத்தவரை 29 ஆம் தேதி மேஷத்தில் உள்ள சுக்கிர பகவான் ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். ஆனி 15 ஆம் தேதி சூரியன் ரிஷபத்தில் இருந்து, கன்னி ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். அங்கு ஏற்கனவே குரு மற்றும் புதன் பகவான்கள் உள்ளனர். புதன் பகவான் 22 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது பகவான் சிம்ம ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், சனி பகவான் மீன ராசியிலும் உள்ளனர்.

ஜூன் 7 ஆம் தேதி ஏகாதசி, 8, 23 தேதிகளில் பிரதோசம் வருகிறது. 25 ஆம் தேதி அமாவசை உள்ளது. மேலும் பஞ்சாங்கப்படி இந்த மாதத்தில் ஆந்திராவிலே புயல் மழை, நம் எல்லையில் பதற்றம் நிலவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த மாதம் கன்னி ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அழகானவர்களாகவும், கவர்ச்சியானவராகவும் இருப்பார்கள். உங்களை நோக்கி மற்றவர்களை ஈர்க்கும் யோகம் உண்டு. உங்களுக்கு இந்த மாதத்தில் 4 ஆம் இடத்துக்கும், 7 ஆம் இடத்துக்கும் அதிபதியான குரு பகவான் 10 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். பெண்கள் பலர் தாய்மைப் பேறு அடையும் யோகம் உண்டாகும். இரண்டாவது குழந்தை பிறப்பதற்கான யோகம் உண்டு.
குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் புதிய உறவுகள் வந்து சேரும். இல்வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். 8 இல் சுக்கிரன் போவதால் உங்களுக்கு ஒரு கருத்து, உங்கள் துணைக்கு ஒரு கருத்து மாறுபாடு உண்டாகும் காலகட்டமாக இருக்கும். உங்கள் துணை உங்களை கண்காணித்துக் கொண்டே இருக்கும் காலமாக இருக்கும்.
உத்தியோகம்
ராசிக்கு அதிபதியான குரு பகவான் பத்தாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் வேலை இல்லாமல் திண்டாடுபவர்களுக்கு நல்ல வேலை உண்டாகும். நொந்து போயிருப்பவர்களுக்கு நல்ல வேலையும், நல்ல சம்பளமும் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். சூரிய பகவான் 15 ஆம் தேதிக்குப் பிறகு பத்தாம் இடத்துக்குப் போவதால் அரசு வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும்.
இடமாற்றம்
அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைப்பதற்கான யோகம் உண்டு. நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளுக்கு வருவது, நிர்வாகப் பொறுப்புக்கு வருவது என அமோகமான காலகட்டமாக இருக்கும்.
தொழில்
பத்தாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பத்தாம் இடத்து அதிபதியுடன் சேருவதால் சந்தோஷமான காலகட்டமாக இருக்கும். நல்ல வருமானம் உண்டாகும். புதிய தொடர்புகள் கிடைக்கும். நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தொழிலை முன்னேற்றும் காலகட்டமாக இருக்கும். திருச்செந்தூர் முருகனை வழிபட வழிபட தொழிலில் வளர்ச்சியையும், ஏற்றத்தையும் பெறுவீர்கள்.
ஆரோக்கியம்
கன்னி ராசிக்காரர்கள் பலருக்கு நடுத்தர வயதுக்குப் பிறகு ஆரோக்கிய குறைபாடுகள் வரும். கடந்த சில ஆண்டுகளாக நிறைய ஆரோக்கிய குறைபாடுகள், அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்திருப்பீர்கள். இந்த மாதத்தில் கொழுப்பு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் ஆரோக்கித்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
மாணவர்கள்
டிகிரி முடித்த மாணவர்கள் அட்மினிஸ்டிரேஷன் தொடர்பான துறையைத் தேர்ந்தெடுத்து உயர் படிப்பை படிப்பது நற்பலன்களைத் தரும். குருவின் அனுக்கிரகம் இருப்பதால் கணினி துறை, பொருளாதாரத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். மாதம் ஆரம்பிக்கும்போது செவ்வாய் லாபத்தில் அமர்ந்திருப்பதாலும், சனி பகவான் பார்ப்பதாலும் இன்ஜினியரிங் வாய்ப்பு கிடைப்பவர்களுக்கு பெரிய வாய்ப்புகள் வந்து சேரும்.
கலைஞர்கள், அரசியல் தலைவர்கள்
கலைஞர்கள் இந்த ஜூன் மாதத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களுக்கு வரும் வாய்ப்புகளை மற்றவர்கள் தட்டிப் பறிக்கும் வாய்ப்புள்ளாதல் கடினமாக முயற்சி செய்து ஜெயிக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை சிறப்பான வாய்ப்புகள் வந்து சேரும். 9 ஆம் இடத்தில் சூரியன் அமர்ந்திருப்பதே மிகுந்த நன்மைதான். கட்சி மாறக்கூடிய அமைப்பு உள்ளது. 15 ஆம் தேதிக்குப் பிறகு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பரிகாரம்
கன்னி ராசிக்காரர்கள் வடிவுடைமை அம்மையை வழிபடுவது நற்பலன்களை அள்ளித் தரும். மிகச்சிறந்த வெற்றியைத் தரக்கூடிய பரிகாரமாக இந்த வழிபாடு கட்டாயமாக இருக்கும். அருகில் இருக்கக்கூடிய கோயிலுக்கு வெல்லம், பச்சரிசியை தானமாக அளிப்பது நல்லது. திருநம்பிகள், திருநங்களைகளுக்கு உதவுவது, படிக்கக்கூடிய மாணவர்களுக்கு உதவுவது மிகச்சிறந்த முன்னேற்றத்தை தரும்.
-
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Mithunam Rasi Palan: கொடிகட்டி பறக்கப்போகும் மிதுன ராசி.. தொட்டது துலங்கும் யோகம் -
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்? -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு ஜூன் 7க்குள் வரப்போகும் குட்நியூஸ்.. அதிர்ஷ்டம் காத்திருக்குது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications