Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூன் ராசி பலன்: ஜாவா சுந்தரேசனாக மாறும் துலாம் ராசி.. வீடு, பணம், அதிர்ஷ்டம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

ஜூன் மாத ராசி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த 3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஜூன் மாதத்தை பொறுத்தவரை 29 ஆம் தேதி மேஷத்தில் உள்ள சுக்கிர பகவான் ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். ஆனி 15 ஆம் தேதி சூரியன் ரிஷபத்தில் இருந்து, கன்னி ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். அங்கு ஏற்கனவே குரு மற்றும் புதன் பகவான்கள் உள்ளனர். புதன் பகவான் 22 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது பகவான் சிம்ம ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், சனி பகவான் மீன ராசியிலும் உள்ளனர்.

june-month-rasi-palan-thulam-libra-rasi-people-will-get-lots-benefit-during-this-month

ஜூன் 7 ஆம் தேதி ஏகாதசி, 8, 23 தேதிகளில் பிரதோசம் வருகிறது. 25 ஆம் தேதி அமாவசை உள்ளது. மேலும் பஞ்சாங்கப்படி இந்த மாதத்தில் ஆந்திராவிலே புயல் மழை, நம் எல்லையில் பதற்றம் நிலவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த மாதம் துலாம் ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் மிகுந்த நல்ல மனிதர்களாக இருப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாக பலவிதமான பாதிப்புகளையும், சவால்களையும் சந்தித்து வந்திருப்பார்கள். அலுவலகம், குடும்பம், ஆரோக்கியம் என பல்வேறு விஷயங்களில் பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பார்கள். இனிமேல் தான் நிம்மதி பிறக்கும் காலகட்டமாக இருக்கும்.

பண வரவு அதிகரிக்கும்

குரு பகவான் 9 ஆம் இடத்துக்கு வந்துவிட்டதால் இனி படிப்படியாக முன்னேற்றமடையும் காலகட்டமாக இருக்கும். துலாம் ராசிக்கு அதிபதியான சுக்கிர பகவான் இந்த மாதம் 7 ஆம் இடத்தில் இருந்து பார்ப்பதால் பண வரவு அதிகரிக்கும். வருமானம் உயரும். குருவும், சுக்கிரனும் சேர்ந்து பார்ப்பதால் பண வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

மாணவர்கள்

துலாம் ராசியைச் சேர்ந்த மாணவர்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்திருப்பார்கள். புதன் 8 இல் இருந்து 9 ஆம் இடத்துக்குப் போவதால் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இதுவரை கஷ்டப்பட்டு படித்திருந்தால் அதற்கான நல்ல வளர்ச்சியைப் பெறுவார்கள். நல்ல உயர்கல்வி அமைவதற்கான வாய்ப்புள்ளது.

4 ஆம் இடத்துக்கு அதிபதியான சனி பகவான் 6 ஆம் இடத்தில் அமருவதால் புரொபஷனல் கோர்ஸ் எடுக்கும் மாணவர்களுக்கு பெரிய வளர்ச்சி உண்டாகும். 9 ஆம் இடத்தில் குரு, புதன் இருப்பதால் கணினி, அட்மினிஸ்டிரேசன் துறையை எடுப்பவர்களுக்கு அருமையான முன்னேற்றம் உண்டாகும். ஆர்டிஃபிசியல் துறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தொழில்

9 ஆம் இடத்தில் இருக்கும் குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் வியாபாரிகள், தொழில் செய்பவர்களுக்கு இதுநாள் வரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் தீரும். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். 7 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய செவ்வாய் பகவான் இந்த மாதத்தில் லாபத்திற்கு வருவதால் வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவு ஏற்படும். அதிகளவிலான வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

திருமணம், குழந்தை பாக்கியம்

துலாம் ராசிக்காரர்களுக்கு அமோகமான திருமண வரன்கள் கிடைக்கும். சுக்கிரன் 7 ஆம் இடத்துக்கு வருவதால் திருமண விஷயங்கள் எல்லாவற்றையும் நடத்தி முடிப்பீர்கள். மனதிற்குப் பிடித்த மணமகன் வாழ்க்கையில் அமைவார்கள். நிறைய பேர் தங்களுடைய காதலை சொல்லும் நிலை உண்டாகும். காதல் திருமணம் கைகூடும். பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். கெட்டிமேளச் சத்தம் கேட்கும் காலகட்டமாக இருக்கும்.

வழக்கு

சட்ட ரீதியான பிரச்சனைகள் தொடர்பான வழக்குகள் சாதகமாக முடியும். பெண்களுக்கு நல்ல நீதி கிடைக்கும் அற்புதமான நேரமாக இருக்கும். இனிவரும் காலகட்டங்களில் மிகப்பெரிய முன்னேற்றம், சந்தோஷம் உண்டாகும். தாய், தந்தைக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் அமைப்பு உண்டாகும்.

சொத்துகள் சேரும்

புதிதாக சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. வீடு, நிலம் வாங்கும் அமைப்பு உள்ளது. பழைய சொத்துகளை நல்ல விலைக்கு விற்று மகிழ்வீர்கள். வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உள்ளது. துலாம் ராசி பெண்கள் பலரும் கார் ஓட்டும் அமைப்பு உள்ளது. இளைஞர்கள் பைக், கார் வாங்கும் யோகம் உண்டு. முன்னேற்றம், வளர்ச்சி நிறைந்த மாதமாக இந்த ஜூன் மாதம் அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+