Rasi Palan This Week: 3 கிரகங்களின் அருளால் வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. சொத்துக்கள் வரும் யோகம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kumbam-rasi-palan-what-kind-of-benefits-that-kumbam-aquarius-will-get-from-december-8-to-14

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.

அந்த வகையில், டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கும்பம்

தொழில் ஸ்தானம் எனும் 10 ஆம் இடத்தில் செவ்வாய் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது தொழில்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மேலதிகாரிகளால் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். எதிர்பாரத அதிர்ஷ்டத்தால் வெற்றி ஏற்படும். பூர்வீக சொத்து, நிலம், பதவிகள் கிடைக்கும் யோகம் ஏற்படும். ஆரோக்கியத்தில் மேன்மை ஏற்படும்.

அனுகூலம்

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். லாபமும், சந்தோஷமும் ஏற்படும். கோளார் பதிகத்தை படிப்பது, கேட்பது நன்மை பயக்கும். துணை விஷயத்தில் கோபப்படாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் புதிய வரவுகள் வரும் யோகம் உண்டு. மன அழுத்தம் இருப்பதால் அடிவயிறு, கழிவுப் பாதை, முதுகுத் தண்டுவடம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

யோகம் கொட்டும்

யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும் யோகம் ஏற்படும். வியாபாரத் துறையில் நல்ல முன்னேற்றமும், லாபமும் ஏற்படும். தனிப்பட்ட வகையில் தொழில் தொடங்குவதற்கான பாக்கியம் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வில் இருந்த தடைகள் நீங்கும். கடல் கடந்த பயணங்களுக்கு மேலதிகாரிகளின் சான்றிதழ்கள் கிடைக்கும்.

தொழிலில் ஏற்றம்

தொழில் ரீதியாக பெரிய நம்பிக்கை, சந்தோஷமான அமைப்பு ஏற்படும். அரசு உத்தியோகத்திற்காக காத்திருப்பவர்கள், பெரிய பதவிகளுக்காக காத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு அற்புதமான காலகட்டம். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். மேலதிகாரிகள் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் உங்களுடைய மதிப்பு கூடும்.

அசுரத்தனமாக வெற்றி பெறும் யோகம் உண்டு. குழந்தை பாக்கியம் உண்டாகும். நிறைய சந்தோஷமும், பெரிய ஏற்றமும் ஏற்படும். தானம் கொடுப்பது மேன்மையைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் அற்புதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+