Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kumbam Rasi Palan: கும்ப ராசிக்கு அள்ள அள்ள அதிர்ஷ்டம்.. புது வீடு, கார் வாழ்க்கையே மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

சுக்கிர பெயர்ச்சி: சுக்கிரன் பகவான் 21.8.2025 தேதி மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். சுக்கிரன் 14.9.2025 தேதி வரை அங்கு தான் பயணிக்க போகிறார். சுமார் 25 நாட்கள் அவர் கடக ராசியில் இருந்து பலன் கொடுப்பார். பொதுவாக சுக போக வாழ்க்கைக்கு சுக்கிரன் அதிபதியாவார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் சுக்கிரன் கும்ப ராசிக்கு கொடுக்க போகும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றை பார்க்கலாம்.

கும்பம்

கும்ப ராசி, லக்கினக்காரர்களுக்கு ராசிக்கு 6 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சுக்கிரன் என்பது உங்களுக்கு 4க்கு உரியவர். சுகத்தை, பாக்கியத்தை தரக்கூடியவர். 9 கிரகங்களில் யோகத்தை தரக்கூடிய கிரகம் சுக்கிர பகவான். 6 இல் சுக்கிரன் மறைந்திருப்பதால் அச்சமடையத் தேவையில்லை. வீடு, வண்டி, வாகனம் வாங்குவதற்கு கடன் கிடைக்கும். 4க்கு உரியவனாக இருப்பதால் வங்கியில் கடனுக்கு முயற்சி செய்தால் கடன் கிடைக்கும்.

kumbam-rasi-palan-what-kind-of-benefits-will-get-kumbam-aquarius-rasi-people-during-this-sukkiran

வீடு கட்டும் யோகம்

வீடு கட்ட வேண்டும், வாங்க வேண்டும் என்பதற்கான எண்ணம் தோன்றும். அந்த முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றியைத் தரும். சுகத்தை வலுப்படுத்துவதற்கான அம்சங்கள் உண்டு. விவசாயம் செய்யும் எண்ண ஓட்டம் தோன்றும். மருத்துவத் துறையில் நுழைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு தொட்டது துலங்கக் கூடிய, அதில் அடுத்த பரிணாமத்துக்கு செல்லக்கூடிய யோகம் உள்ளது. ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் அக்கறை செலுத்த தொடங்குவீர்கள்.

பிரச்சனைகள் நீங்கும்

எதிரிகள் யாரென்று கண்டறியும் வாய்ப்பு ஏற்படும். மனம் சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். எதிரிகளைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு செயல்பட ஆரம்பிப்பீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். வேலை இல்லாத கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பாக்கியாதிபதி 6 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் நல்ல வேலை, தொழில் அமையும். வேலையில் இருந்து வந்த அழுத்தங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.

சுபகாரியங்கள்

குருவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் நன்மைகள் ஏற்படும். தனம் சார்ந்த விஷயத்தில் சிறப்புகள் நடக்கும். சுப காரியங்கள் அனைத்தும் இனி நடக்க ஆரம்பிக்கும். குழந்தையைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவீர்கள். சுக்கிரன் சனி பகவான் நட்சத்திரத்தில் பயணிப்பதால் தன்னைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உங்களுக்கென அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வேலை, வியாபாரம் சார்ந்த விஷயங்களில் புதிய அனுகூலம், ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வெளிநாடு யோகம்

வெளிநாட்டு பிராயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் அமையும். தன வரவைப் பெருக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும். ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் புதனின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்கும்போது குழந்தைகளின் படிப்பு, வேலை, வியாபாரம் போன்றவை சிறப்பு பெறும். மறைந்துள்ள விஷயங்களை தேடிக் கண்டுபிடித்து அதில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும்.

தொழில்

புத்தி, அறிவை வைத்து செய்யும் தொழில்கள் அனைத்தும் சிறப்பு பெறும். புதனோடு சுக்கிரன் சேர்ந்து 12 ஆம் இடத்தைப் பார்க்கும்போது வெளிநாட்டு வேலை, வெளிநாட்டுக்கு செல்லும் எண்ணம் போன்றவை தோன்றும். யோகத்தை தரக்கூடிய சுக்கிரப் பெயர்ச்சியாக அமையும். நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். 5 ஆம் இடத்தில் குரு இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண யோகம் உள்ளது. அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

வழிபாடு

ஆவணி மாதம் 31 ஆம் தேதி சுக்கிர பகவான் ஜெயந்தி தினத்தன்று நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு வெண்பட்டு வஸ்திரத்தை சாற்றி 6 நெய்விளக்கு தீபமேற்றி வழிபடுவது நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+