This Week Rasi Palan: கும்ப ராசிக்கு ஊர்ந்து வரும் ஆபத்து.. அடுத்த 7 நாட்களில் தாக்கப் போகும் கண்டம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kumbam-weekly-rasi-palan-what-kind-of-benefits-kumbam-aquarius-people-will-get-from-september-21

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வாரத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. செப்டம்பர் 22, புரட்டாசி 6 முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரைக்கு வழிபாடு செய்யப்படும். அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு மேலதிகாரிகள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். வலுக்கலான இடங்கள், தலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிக கவனமாக இருப்பது நல்லது. காது, மூக்கு, தொண்டை, கண், பல் போன்ற பிரச்சனைகளில் அதீத கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத சட்ட சிக்கல்களுக்கு உட்படாமல் இருப்பது நல்லது.

கவனம்

பயணங்கள் சமயத்தில் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும் நல்ல காலகட்டமாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். விஷ ஜந்துக்கள், பூச்சிக் கடிகள், வாயில்லா ஜீவராசிகளிடம் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.

பண வரவு உண்டாகும்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையை விட்டு நிற்பது, பேப்பர் போடுவது, மேலதிகாரிகளுடன் தர்க்கம் செய்வது, சக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் வருத்தப்படக் கூடிய சூழல் ஏற்படும். பண வரவிற்கு உத்தரவாதம் உண்டு. துணைக்கும், உங்களுக்கும் இருந்த மனத் தாங்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

புதிய வரவு

எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. திட்டமிட்டு காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிரச்சனைகள் எல்லாம் குறையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உத்தியோகம், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

வழிபாடு

குரு 5 ஆம் இடத்தில் இருப்பதால் பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை தோறும் தேவி வழிபாடு, அம்பாள் வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+