Chandra Grahan 2025: ரிஷப ராசிக்கு ராகு, சந்திரனால் சூப்பர் ஜாக்பாட்.. பண மழை கொட்டப் போகுது

Subscribe to Oneindia Tamil

Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதியான நாளை நடைபெறவுள்ளது. இந்த சந்திரகிரகணத்தால் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இரவு 9.57 முதல் நள்ளிரவு 1.56 வரையிலான காலகட்டத்தில் இந்த சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் சந்திரகிரகணம் ஆரம்பிக்கும் மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. அதற்குப் பின்னர் சாப்பிடக் கூடாது. அடுத்த நாள் குளித்துக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்திவிட்டு சமைத்து சாப்பிடுவது நல்லது.

lunar-eclipse-2025-what-kind-of-benefit-rishabam-rasi-taurus-people-will-get-duing-this-period

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் வீட்டில் ஓய்வெடுப்பது நல்லது. ஜெபதப அனுஷ்டானங்கள் செய்யக்கூடியவர்கள் 9.56 மணிக்கும், 1.58 மணிக்கும் குளித்துவிட்டு ஜெபம் செய்வது நல்லது. இந்த கிரகண காலத்தில் ஒருமுறை மந்திரத்தை ஜபித்தாலும் அது 10 முறைக்கு சொன்னதற்கு சமமாகும். அந்த அளவு புண்ணியம் கிடைக்கும்.

5 ராசியினர் கவனம்

முருகன், சிவனை வழிபாடு செய்வது, காயத்திரி மந்திரம் ஜெபிப்பது நன்மையைத் தரும். சந்திரன், ராகு சேர்ந்திருப்பதால் சந்திர மெளலீஸ்வரரை மனதார வழிபடுவது உங்களை பாதிப்புகளில் இருந்து காக்கும். இந்த சந்திரகிரகண காலத்தில் 5 ராசியினருக்கு அதாவது கும்பம், துலாம், மிதுனம், மகரம், மீனம் பிரச்சனைக்குரிய காலகட்டமாக இருக்கும். இதனால், மன சஞ்சலம் ஏற்படும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அழுத்துவது போன்று இருக்கும். 40 நாட்களுக்கு இதுபோன்ற நிலைமையே தொடரும்.

யோகமான ராசி

இந்த சந்திரகிரகண காலகட்டத்தில் தனுசு, ரிஷபம், கன்னி ஆகிய மூன்று ராசியினருக்கு அற்புதமான நேரமாக இருக்கும். நீங்கள் நினைப்பது அனைத்துமே நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். கடனுக்கு முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கடன் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாத விஷயங்களை எல்லாம் நடத்தி முடிப்பீர்கள். வேலை கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசி, லக்கினக்காரர்களுக்கு இந்த சந்திரகிரகண காலகட்டத்துக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஜாக்பாட்டான நேரம் இது. அடுத்த 45 நாட்களுக்குள் உத்தியோகம், வேலை, தொழில், அந்தஸ்து, உத்தியோகம், வியாபாரத்தில் என அனைத்திலும் அனுகூலம் ஏற்படும். பாவிகள் 10 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பது நல்லது. அங்கு ராகு அமர்ந்திருக்கிறார். அங்கு சந்திரனும் சேர்வதால் இடமாற்றம் உண்டாகும்.

டிரான்ஸ்பர் கிடைக்கும்

நீண்ட நாட்களாக இடமாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு கட்டாயமாக இடமாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்பு, பதவிகளில் அமரும் வாய்ப்பும் அதன் மூலமாக அருமையான சம்பள உயர்வைப் பெறுவீர்கள். சந்திரன் உங்களுக்கு ஒரு நல்ல அற்புதமான யோகத்தை கொடுப்பார். வேலை, தொழில், அந்தஸ்து, உத்தியோகம், வியாபாரத்தில் டாப் கிளாஸ் யோகம் உண்டாகும். நிறைய பேருக்கு தேவையான பணம் வந்து சேரும்.

மாமியார் உடல்நிலை

அலுவலகத்தில் லோன் கேட்பவர்களுக்கு கட்டாயமாக கிடைக்கும். யாருடைய வீட்டில் எல்லாம் மாமியார் இருக்கிறார்களோ கண்டிப்பாக அவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், எதிர்பாராத நன்மைகள் நடப்பதற்கான காலகட்டமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

பொறுப்புகளில் கவனம்

அலுவலகத்தில் டூர் போன்றவை செல்லும்போது தலைமை, பொறுப்பை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மற்றபடி இந்த சந்திரகிரகண காலகட்டத்தில் 95 சதவீதம் நன்மைகள் பெறும் காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு, தொழிலில் ஏற்றம், அபரிமிதமான லாபம் கிடைக்கக் கூடிய அற்புதமான காலகட்டம்.

வெற்றி

எந்தவொரு விஷயத்திலும் பொறுப்பை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் அதன் மூலம் பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தொட்டது துலங்கக்கூடிய யோகமான காலகட்டமாக இருக்கும். ராகுவும், சந்திரனும் 10 இல் சேர்வதால் அற்புதமான யோகங்கள் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+