Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

62 ஆண்டுகளுக்குப்பின் முதல்முறை.. வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர்

62 ஆண்டுகளுக்கு பிறகு வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளுவது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 16ஆம் தேதி நிகழ்கிறது. 17ஆம் தேதி வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். புதுப்பொலிவுடன் காட்சி தரும் நூற்றாண்டு பழமையான தேனூர் மண்டபத்தில் 62 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சி தரப்போகிறார்.

சித்திரை திருவிழா என்றாலே மதுரை தான் நினைவுக்கு வரும். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சித்திரை திருவிழாவுக்கு மகுடம் சூட்டும் விதமாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 அழகர் கோவில் சித்திரை திருவிழா

அழகர் கோவில் சித்திரை திருவிழா

அழகர்கோவில் சித்திரை பெருந்திருவிழா இன்று மாலையில் தொடங்குகிறது. இதை தொடர்ந்து 14ஆம் தேதி மாலையில் கள்ளழகர் தங்கப்பல்லக்கில் அதிர்வேட்டுக்கள் முழங்க மதுரைக்கு புறப்படுகிறார். 15ஆம் தேதி காலையில் மதுரையில் தேரோட்டம் நடைபெறும். மாலையில் எதிர்சேவை நடைபெறும்.

கள்ளழகர் வைகையில் இறங்குதல்

கள்ளழகர் வைகையில் இறங்குதல்

மதுரை மாநகரில் தொன்று தொட்டு நடந்து வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி 16ஆம் தேதி நடக்கிறது. அன்று ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். அதன்பின் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தங்கக் குதிரை வாகனமும் கருட வாகனமும்

தங்கக் குதிரை வாகனமும் கருட வாகனமும்

இதையொட்டி நேற்று காலையில் அழகர்கோவிலில் இருந்து 3 வாகனங்களும் தனித்தனியே லாரி போன்ற வாகனம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன. வைகையில் இறங்குவதற்காக தங்கக்குதிரை வாகனம் தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும், வைகை ஆறு தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தருவதற்காக கருடவாகனமும், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சேஷ வாகனமும் கொண்டு வரப்பட்டு உள்ளன.

தேனூர் மண்டபம்

தேனூர் மண்டபம்

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கியபின் அன்றைய தினம் இரவு வண்டியூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் எழுந்தருள்வார். அப்போது வண்டியூர் பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கும். வண்டியூர் வைகை ஆற்றின் நடுவில் தேனூர் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அழகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுவது வழக்கம். பிரசித்தி பெற்ற இந்த மண்டபம் பராமரிப்புகள் இல்லாததாலும், வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் காலப்போக்கில் சிதிலமடைந்தது. இதனால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தேனூர் மண்டபம் வைகை ஆற்றின் நடுவே காட்சிப் பொருளாகவே இருந்து வந்தது. இதனால் இந்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

தேனூர் மண்டபம் சீரமைப்பு

தேனூர் மண்டபம் சீரமைப்பு

இந்நிலையில் அரசு உத்தரவுப்படி வண்டியூர் தேனூர் மண்டபம் ரூ‌ 40 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மண்டபத்தில் கள்ளழகரை எழுந்தருளச் செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி கோவில் இணை ஆணையாளர் அனிதா தலைமையிலான குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனூர் மண்டபத்தில் உறுதித் தன்மையை ஆய்வு செய்தனர்.

Recommended Video

    மதுரை: சித்திரை திருவிழா முன்னிட்டு நீர் திறப்பு... வைகை ஆற்றில் நீர் வந்ததால் மக்கள் மகிழ்ச்சி!
    மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம்

    மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம்

    அதனைத் தொடர்ந்து பரிட்சார்த்த முறையில் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும் கருட வாகனம் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஏற்றி இறக்கி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரீட்சார்த்த முறை வெற்றி பெற்றதை தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். 62 ஆண்டுகளுக்கு பிறகு வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளுவது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+