மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா: கன்னியாகுமரியில் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை திருவிழாவை ஒட்டி கன்னியாகுமரியில் மார்ச் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மாசி மாதக்கொடை விழாவை முன்னிட்டு வரும் 8 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோயில் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயம். ஆண் பக்தர்களுக்கு கேரள மாநிலத்தில உள்ள சபரிமலை ஐயப்பன் பிரசித்தமோ, அது மாதிரி நெல்லை, குமரி மற்றும் கேரள மாநில பெண் பக்தர்களுக்கு பெண்களின் சபரிமலை போன்றதாகும். கேரள மாநில பெண்கள் இருமுடி கட்டிக்கொண்டு இக்கோயிலுக்கு வந்து இங்குள்ள பகவதியம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்று போற்றப்படுகிறது.

கேரள கோவிலை போன்று அமைப்பு கொண்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வருகின்றனர். சபரிமலைக்கு ஆண்கள் 41 நாள்கள் விரதம் இருந்து,பயபக்தியுடன் சென்று வழிபட்டு வருவதைப் போல, ஒவ்வொரு ஆண்டும் மாசி கொடை விழாவை ஒட்டி கேரளத்து பெண்கள் 41 நாள்கள் பயபக்தியுடன் விரதம் இருந்து, இருமுடி கட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வார்கள்.

கல்யாண வரம், குழந்தை வரம், உடல் உறுப்புகளில் குறைபாடு, கண் திருஷ்டி தோஷம், தலைவலி நிவாரணம் போன்றவற்றிற்காக இங்கு பிரார்த்தனை செய்யப்படுகின்றது. இக்கோயிலில் கொடுக்கப்படும் மண்டையப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. அரிசிமாவில் வெல்லம்,பாசிப் பருப்பு,ஏலம்,சுக்கு ஆகியவை சேர்ந்து நீராவியால் அவித்துத் தயார் செய்யப்படுகிறது இந்த மண்டையப்பம். அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. மாசி கொடை விழாவின் போது வேண்டுதல் நிறைவேற ஆலய வளாகத்தை சுற்றிலும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்கின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயிலிருந்து மீண்டபிறகு இங்கே வந்து, முத்தப்பம் என்னும் அப்பத்தை நைவேத்தியம் செய்கின்றனர்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் கொடைவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இவ்விழாவில் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் வந்து பகவதியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த பிப்ரவரி 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான மாசி கொடை திருவிழா மார்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. 10 வது நாள் இரவு ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. அரசின் முக்கிய பணிகளுக்காக தலைமை கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்களில் மட்டும் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என்றும், இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 9ம் தேதி 2வது சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications