மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் மகா சிவராத்திரி...மாசி மகம்..என்னென்ன விஷேசங்கள் - விரத நாட்கள்
மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் மகாசிவராத்திரி,மாசி மகம் உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
சென்னை: மாசி மாதம் கும்ப மாதம். சூரியன் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். மாசி மாதத்தில் முக்கிய விரத நாட்கள் உள்ளன. மாசி மாதத்தில் மாசி மகம், மகா சிவராத்திரி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
மாசி மாதத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மாசி மாத அமாவாசை நாளில் மயானக் கொல்லை என்ற திருவிழா நடைபெறுகிறது. அங்காள பரமேஸ்வரி அம்மன், மயானத்திற்குச் சென்று சூறையாடுவதாக ஐதீகம். கதி இல்லாமல் மயானத்தில் பேயாய் அலைவோருக்கு அம்பாள் மோட்சகதி தரும் வகையில் இந்த மயானக்கொல்லை விழா கொண்டாடப்படுகிறது.
விஷ்ணுபதி புண்ணியகாலம்
மாசி 01 முதல் நாள் விஷ்ணுபதி புண்ணியகாலம் பிறக்கிறது. பீம துவாதசி விரதம்
மாசி 02 ஸோம பிரதோஷம். சிவ ஆலய தரிசனம் செய்யலாம்.
மாசி 03ஆம்தேதி செவ்வாய்கிழமை சதுர்த்தசி நடராஜர் அபிஷேகம்.
மாசி 04 புதன்கிழமை பௌர்ணமி திரிபுர சுந்தரி ஜெயந்தி
மாசி 05 மாசி மகம் சிவ விஷ்ணு ஆலயங்களில் விரதம்
மாசி மகம் என்பது மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாளில் இந்துக்களால் விரதமிருந்து மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாசி மக நட்சத்திரத்தன்று புனித நிர் நிலைகள், நதிகள், ஆறுகளில் நீராடி கோயிலுக்கு சென்று வழிபட்டு வர நாம் பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுபடலாம்.
மாசி 08 ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தி
மாசி 17 கிருஷ்ண அங்காரக சதுர்த்தி மகா சிவராத்திரி
மாசி மாதம் மகா சிவராத்திரி சிறப்பு வாய்ந்த பண்டிகையாகும். உலகம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்ட காலத்தில், அன்னை பார்வதி உலக உயிர்களுக்காக தவம் இருந்து இறைவனை பூஜித்தார். அந்த இரவே சிவராத்திரி நாளாகும். பார்வதிதேவி தவமிருந்து, சிவ பெருமானின் இடப்பாகத்தில் இடம் பெற்றது சிவராத்திரி தினமாகும். உமாதேவி சிவபெருமானிடம் ஆகம உபதேசம் பெற்றதும் சிவராத்திரி அன்றுதான். பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் தவம் செய்து, சிவபெருமானிடம் இருந்து 'பாசுபதம்' என்னும் அஸ்திரத்தை பெற்றதும் இந்த சிவராத்திரி தினமே. மார்க்கண்டேயனுக்காக, எமதர்மனையே சிவபெருமான் சம்ஹாரம் செய்த நாள் மகாசிவராத்திரி. பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து, கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததும் சிவராத்திரி தினத்தில்தான். கண்ணப்ப நாயனார், குருதி வடியும் லிங்க வடிவிலிருந்த ஈசனின் கண் மீது தன் கண்களைப் பொருத்தி முக்தி அடைந்ததும் மகாசிவராத்திரி நாளில்தான். பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும், லிங்க ரூபமாக சிவபெருமானின் அருள் வழங்கிய நாள் மகா சிவராத்திரி. இந்த ஆண்டு மாசி 16ஆம் தேதி மார்ச் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
மாசி 22 ஞாயிற்றுக்கிழமை வாஸ்து நாள் மாத சதுர்த்தி
மாசி 24 செவ்வாய்கிழமை சஷ்டி விரதம் கிருத்திகை விரதம்
மாசி 30 திங்கட்கிழமை காருடையான் நோன்பு விரதம். தீர்க்க சுமங்கலி வரம் தரும் விரதம்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications