Rasi Palan This Week: மீன ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டு.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 26 முதல் 31 ஆம் தேதி வரையிலான ஆவணி 9 முதல் ஆவணி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 26 முதல் 31 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் நேரம். இந்த ஆவணி மாதத்தில் எதிரிகளிடமிருந்து வெற்றி பெறும் காலகட்டம். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில், வியாபாரம் தொடங்கும் யோகம் உண்டு. அரசு கெளரவங்கள் கிடைக்கும் காலகட்டம்.
நற்பலன்கள் கிடைக்கும்
தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும் காலகட்டம். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை செய்து முடிக்கும் யோகம் உண்டு. இதுவரை எந்த காரியத்தை எடுத்தாலும் அது முழுமையாக நடைபெறாமல் இருந்திருக்கும். இனி இழுபறியாக இருந்த நிலைமைகளை எல்லாம் அடுத்தடுத்து செய்து முடிப்பீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் நன்மைகள் நடக்கும் காலகட்டம்.
செல்வாக்கு
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட புதிய முயற்சிகள் பெரிய வெற்றியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்குகள் கூடும். யோக பலன்கள் அதிக அளவில் பெறக்கூடிய ராசிக்காரர்களாக இருப்பார்கள். முன்வைத்த காலை பின் வைக்காமல் எல்லா விதத்திலும் ஏற்றத்தைப் பெறுவீர்கள்.
பயணம்
உள்ளூர் பயணம், வெளியூர் பயணம், கடல் கடந்த பயணங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். செல்வாக்குகள் கூடுவதை கண்கூடாகப் பார்க்கலாம். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். மனதில் இருந்து வந்த பாரங்கள் அனைத்தும் நீங்கும்.
யோக பலன்
எதிர்பார்த்த அனைத்து விஷயத்திலும் யோக பலன்களை பெறுவீர்கள். வழக்குகளில் வெற்றி, அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு அதீத யோகம் உண்டு. கடல் கடந்த உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் யோகம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். ஏற்றம், அனுகூலம் நிறைந்த நேரமாக இருக்கும்.
ஆரோக்கியம், வழிபாடு
அனைத்து விதமான விஷயங்களிலும் ஜெயம் பெற பெருமாள் வழிபாடு செய்வது நல்லது. கோவிந்த நாம வழிபாடு நல்ல பலன்களைத் தரும். பாதம் வலி, மூட்டு வலி, முதுகுத் தண்டுவடம், சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications