மேஷ ராசி மனதில் நினைத்தது அப்படியே நடக்க போகுது.. நவம்பர் மாதத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
நவம்பர் மாத ராசி பலன்: 2025 ஆம் வருடம் இப்போதுதான் பிறந்தது போல உள்ளது. அதற்குள் 11வது மாதமான நவம்பர் மாதம் பிறக்க போகிறது. இந்த வருடத்தில் ஏற்கனவே கிரக நிலைகளில் ஏராளமான மாற்றங்களை சந்தித்துவிட்டோம். நவம்பர் மாதத்திலும் கிரக நிலைகளில் மாற்றங்கள் காணப்படும். இது சில ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கும். சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையும் வரலாம். நவம்பர் மாதம் மேஷ ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்தில் இருக்கிறார். அவர் நவம்பர் 11 ஆம் தேதி வக்ர கதி அடைகிறார். பொதுவாக சில ராசிகள் குரு பகவான் உச்சமடைந்தாலே நல்ல பலன்களை பெறுவார்கள். சில ராசிகள் குரு பகவான் உச்சத்தில் இருந்து வக்ரமானால் நல்ல பலன்களை பெறுவார்கள். மேலும் இந்த நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

நவம்பர் மாத பலன்கள்
சூரியன், சுக்கிரன் இணைந்து மூல திரிகோண வீட்டில் இருக்கிறார்கள். இதில் சூரியன் நீசமடைந்தாலும் நீட்ச பங்க ராஜயோகம் கிடைக்கப் போகிறது. மேலும் சுக்ரன், புதன் இணைந்து லட்சுமி நாராயண யோகம் தரப்போகிறார்கள். சூரிய பகவான் 16 ஆம் தேதிக்கு பிறகு செவ்வாயின் வீடான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதே வீட்டில் 26 ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே அங்கு செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். தவிர குருவின் பார்வையும் உள்ளது.
சூரியனும், செவ்வாயும் இணைவது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். இதனால் அரசு, அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் மிகப்பெரிய ஏற்றம் காண்பார்கள். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல யோகம் கிடைக்கும். இந்த கிரக நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மேஷ ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.
மேஷம்
உங்கள் ராசி அதிபதி குரு சொந்த ராசியில் ஆட்சி பலத்துடன், குரு பார்வையில் இருக்கிறார். இந்த மாதம் விறுவிறுப்பாகவும், விவேகமாகவும் செயல்படுவீர்கள். உத்யோகத்தில் இருந்த அழுத்தங்கள் நீங்கும். குரு பகவானும் உச்ச பலத்தில் இருப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். மனம் துவண்டு கிடந்த நீங்கள் இப்போது உற்சாமாகி தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த நிலை மாறும்.
செல்வாக்கு
ராசி அதிபதி வலுவாக இருப்பதால் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம். முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். மனதில் தெளிவு பிறந்து, அடுத்தக்கட்டத்திற்கு செல்வதற்கான பாதை பிறக்கும். சுக்ர திசையும் நன்றாக இருக்கிறது. இதனால் பொருளாதாரம் உயர்வடையும். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை செல்வாக்கு உயரும்.
வெற்றி
சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்கு திருமணம் நடைபெறும். பணவரவு சீராக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். கழுத்தை நெரித்த கடன் சுமை குறையும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல ஏற்றம் உண்டு. உத்யோகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் உங்களின் முயற்சிகளுக்கு கை மேல் பலன்உண்டு.
பரிகாரம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். அரசியல் புள்ளிகள், லாட்டரி சந்தை சார்ந்திருப்பவர்களுக்கு ஜாக்பாட் அடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அரசு உத்யோகத்தில் இருப்போருக்கு எதிர்பார்த்த பணியிடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்கள் வீட்டின் அருகில் உள்ள ராகவேந்திரர் கோயில் சென்று வழிபடுவது நற்பலன்களை கொடுக்கும்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications