எதிரிகளை துவம்சமாக்கும் மேஷம் ராசியினர்.. 40 நாட்களில் நடக்கும் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சூரிய கிரகண பலன்: 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவு 11 மணி 01 நிமிடத்தில் தொடங்கிய சூரிய கிரகணம் 12 மணி 22 நிமிடத்தில் நிறைவடைந்தது. சூரிய கிரகணம் தொடங்கி 40 நாட்களில் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் நடக்கும். அந்த வகையில், மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

நடப்பு ஆண்டில் சூரிய கிரகணமானது செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவில் உத்திர நட்சத்திரம், சிம்ம ராசியில் ஏற்பட்டுள்ளது. சூரியனும், கேதுவும் இந்த நேரத்தில் இணையக்கூடும். சூரியன் கேது இணையும்போது 3 ராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு சற்று அதிகமான பாதிப்புகள் ஏற்படும். இதைத் தவிர சிம்மத்திற்கு முன்னும் பின்னும் இருக்கக்கூடிய ராசிகளான கடகம், கன்னி ஆகிய ராசிகள் என மொத்தம் 5 ராசிகளுக்கு சூரிய கிரகணத்தின் பாதிப்புகள் ஏற்படும்.

mesham-rasi-palan-what-kind-of-benefits-will-get-mesham-rasi-people-during-this-surya-grahan-period

அதேபோல, மிதுனம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு நிறைய பிரச்சனைகள் தீரும். மீனம், விருச்சிகத்திற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 40 நாட்களுக்குள் நல்ல விஷயங்கள் நடக்கும். அந்த வகையில், வரும் 40 நாட்களுக்கு மேஷ ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், நன்மைகள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகண காலகட்டம் அற்புதமான வளர்ச்சியைக் கொடுக்கும். நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கவுன்சிலிங்கில் சீட் கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகளுக்கு சீட் கிடைக்கும். அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் பிரச்சனைகள், வாக்குவாதங்கள், சண்டைகள், கூடவே இருக்கும் நபர்களால் இருக்கும் பாதிப்புகள் அனைத்தும் நீங்கும்.

சிக்கல் நீங்கும்

வேலை செய்யக்கூடிய இடத்தில் இருக்கும் குடைச்சல்கள் நீங்கும். எதிரிகளை ஜெயிக்கக்கூடிய வலிமை உண்டாகும். சூரியன், கேது சேர்ந்தால் மேஷ ராசி, லக்கினக்காரர்களுக்கு வழக்கில் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். அரசாங்கத்துக்கு பாதிப்பையும், உங்களுக்கு வெற்றியும் உண்டாகும். வீடு, நிலம் அமையாதவர்களுக்கு நல்ல வீடு, இடம் அமையும். வீட்டின் ஓனரால் கொடுக்கப்பட்ட குடைச்சல்கள் நீங்கும்.

கவனம்

வேலையில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். அற்புதமான காலகட்டமாக உங்களுக்கு இருக்கம். சக ஊழியர்களிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு கீழ் வேலை செய்யும் நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. பாதுகாப்பு மிகவும் முக்கியம். சூரியன், கேது சேரும்போது மூலப் பத்திரம், பீரோவில் இருக்கும் பொருள்கள் காணாமல் போவதற்கான வாய்ப்புள்ளதால் கவனத்துடன் இருப்பது நல்லது.

தொட்டதில் ஜெயம்

கடின உழைப்பு போட்டு ஜெயிப்பதில் மேஷ ராசியினர் முதன்மையானவர்கள் என்பதால் எல்லா விஷயத்திலும் ஜெயிக்கக்கூடிய யோகம் உங்களுக்கு உண்டாகும். அரசாங்க வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு அது நிவர்த்தியாகும். கடன்களை அடைத்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் ராஜிநாமா செய்வார்கள். அந்தப் பதவி உங்களுக்கு வந்து சேரும்.

வழிபாடு

நல்ல நேரம் ஆரம்பிக்கும் காலகட்டமாக உங்களுக்கு இருக்கும். யாருடைய பேச்சை நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தீர்களோ அவர் இனிமேல் உங்களை தொந்தரவு செய்வது குறையும். கோதுமை தொடர்பான பொருள்களை தானமாக அளிப்பது, சிவன் வழிபாடு செய்வது உங்களுக்கு நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+