Rasi Palan This Week: மிதுன ராசி இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணுங்க.. வேற லெவல் முன்னேற்றம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான ஆவணி 23 முதல் ஆவணி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

midhunam-weekly-rasi-palan-what-kind-of-benefits-gemini-midhunam-people-will-get-from-september-8

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பொதுவாக இந்த மாதம் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.

சூரிய கிரகணம், குரு வக்கிர பெயர்ச்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும். உத்யோகத்தில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடி வரும். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம், புதிய பொறுப்புகள் கிடைக்கும். குழந்தைகள் விஷயத்தில் இருந்த மனக்குறைகள் நிவர்த்தியாகும். குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு, சுப காரியங்கள் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும்.

அனுகூலம்

வாழ்க்கை துணையுடன் இருந்த மோதல்கள் தீர்ந்து காதல் அதிகரிக்கும். அந்யோநியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். மனதில் இருந்த கஷ்டங்கள் தீர்ந்து தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் நிவர்த்தியாகி எல்லாவற்றிலும் அணுகூலம் அதிகரிக்கும். சுப காரிய தடைகள் முழுமையாக விலகும்.

பொருளாதாரம்

சுப செலவுகள் ஏற்படும். திருமணம், குழந்தை பாக்கியத்தில் நல்ல செய்தி கிடைக்கும். அரசுத்துறைகளில் பணியாற்றுவோர், அரசியல்வாதிகளுக்கு இந்த வாரம் சிறப்பான ஏற்றம் கிடைக்கும். பயணங்களால ஆதாயம் உண்டு. தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது. பொருளாதார தடை நீங்கும். பணவரவு நன்றாக இருக்கும். பொருளாதாரம் உயரும்.

புத்திசாலித்தனம்

ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில்களில் இருப்போருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் கிடைக்கும். வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டு மற்றும் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்யோகம், தொழில், வீடு உள்ளிட்ட பல விஷயங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.

கவனம்

தாய் மற்றும் தாய் வழி உறவுகள் மற்றும் ரத்தபந்த உறவுகளிடம் மிகுந்த கவனம் வேண்டும். அவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்லுங்கள். வயிறு, கழிவுகள் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்திலும் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் வீட்டு அருகில் உள்ள துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது எல்லாவற்றிலும் ஏற்றத்தை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+