Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சினால் வரப்போகும் கண்டம்.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு யோக பலன்களைப் பெறும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். உத்தியோகம் ரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாதவற்றை பேசி மாட்டிக் கொள்ளும் சூழல் உள்ளது. குடும்பத்தில் தேவையில்லாத குழப்பம், வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
கடன்கள் தீரும்
காது, மூக்கு, தொண்டை, பற்கள் விஷயங்களில் சிறிது கவனமாக இருப்பது நல்லது. மகான்கள் வழிபாடு வாழ்க்கையை மாற்றிக் கொடுக்கும். பழைய கடன்களை அடைத்தும் முடிக்கும் வாய்ப்புகள் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பெற்று வீடு திரும்பக் கூடிய சூழல் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
மகிழ்ச்சி
இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். ராஜயோகத்தைப் பெறக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். மன அழுத்தம் தீரும். யோகமும், சந்தோஷமும், அனுகூலமும் உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கும், தனிப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கும் நல்ல காலகட்டம். வண்டி, வாகனத்தை மாற்றக்கூடிய யோகம் உண்டாகும்.
லாபம் அதிகரிக்கும்
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் நீங்கள் எடுக்கக் கூடிய முடிவுகளில் வெற்றி பெறுவீர்கள். பலரும் உங்களை ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். வெற்றிகள் வந்து சேரும். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் மாறும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும்.
மன அழுத்தம் நீங்கும்
உத்தியோகத்தில் அற்புதமான ஏற்றத்தைப் பெறுவீர்கள். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் அனுகூலம் ஏற்படும். மனதில் இதுவரை இருந்து வந்த அழுத்தங்கள் அனைத்தும் நீங்கும். தைரியம் ஏற்படும். அரசு உத்தியோகம், அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு சில காரியங்கள் தடைப்பட்டுக் கொண்டே வந்திருக்கும்.
பண வரவு
இனி அதுபோன்ற இழுபறியான விஷயங்கள் அனைத்தும் நீங்கும். அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான அற்புதமான யோகம் ஏற்படும்.
-
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications