Rasi Palan This Week:மிதுன ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. இந்த வாரத்தில் வரும் சூப்பர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

mithunam-rasi-palan-what-kind-of-benefits-that-mithunam-gemini-signs-will-get-from-october-13-to

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

அந்த வகையில், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு மனதில் நல்ல மகிழ்ச்சி ஏற்படும். புத்துணர்ச்சி ஏற்படும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசியலில் பதவிகள் தேடி வரும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். அவர்களுடைய ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வீடு வாங்குவதற்கான யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகள் கிடைக்கும். வெளியூரில் செட்டிலாகும் யோகம் உண்டாகும். எவை எல்லாம் நடக்காமல் தள்ளிப் போனதோ அவை அனைத்தும் நடக்கும் காலகட்டம்.

தடைகள் விலகும்

இதுவரை எடுத்த காரியங்களில் இருந்து வந்த தடை, தாமதங்கள் அனைத்தும் நீங்கும். மிகப்பெரிய ஏற்றம், வெற்றியைக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். அதிகாரம் கிடைக்கும். நெஞ்சகம் சார்ந்த பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது.

புதிய வேலை

குடும்பத்திலும், பேச்சுவார்த்தையிலும் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் நிம்மதி பிறக்கும். செய்யாத தவறுக்கு வேலை இழந்த மிதுன ராசியினருக்கு வேலை கிடைக்கும். தொழில் அதிகமாக அனுகூலம் ஏற்படும்.

முயற்சிகளில் முன்னேற்றம்

உத்தியோகம் நிமித்தமாக எடுக்கம் முடிவுகள் அனுகூலத்தை தரும். புதிய முயற்சிகள் ஏற்றத்தை தரும். இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். வழக்குப் போன்ற விஷயங்கள் உங்களுக்கு சாதகமாகும். உத்தியோகம் சார்ந்த பயணத்தால் ஆதாயம் உண்டு. குடும்பத்தை விட்டு பிரிகிறோம் என்று மன வருத்தம் அடைய வேண்டும்.

அனுகூலம்

உறவுகளால் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் பெரிய சந்தோஷத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். புதிய தொழிலைத் தொடங்குவீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+