Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் 4 வாசல்களும் திறப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி

நெல்லையப்பர் கோயில் பாதுகாப்பு கருதி, கடந்த 2004ம் ஆண்டு மூடப்பட்ட வாசல் கதவுகள் 17 வருடங்களுக்குப் பிறகு சிறப்பு பூஜையுடன் திறக்கப்பட்டன.

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் கடந்த 2004ம் ஆண்டு மூடப்பட்ட வாசல் கதவுகள் 17 வருடங்களுக்குப் பிறகு சிறப்பு பூஜையுடன் இன்று திறக்கப்பட்டன. நீண்ட காலத்துக்குப் பின்னர் திறக்கப்பட்ட வாசல்கள் வழியாக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்று நெல்லையப்பரையும் காந்திமதி தாயாரையும் கண் குளிர தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில், நெல்லையின் அடையாளமாகத் திகழ்கிறது. சிவபெருமானின் பஞ்சசபைகளில் தாமிரசபையாக போற்றப்படுகிறது. இறைவன் நெல்லையப்பராகவும். வேணுவனநாதராகவும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். வேதசர்மா என்பவர் சிவன் மீது பக்தி கொண்டவர். ஊர் ஊராக சென்று சேகரித்த நெல்மணிகளை தனது வீட்டிற்கு பக்கத்தில் காயவைத்திருந்தார். அப்போது பெரு வெள்ளத்துடன் மழை பெய்தது. மழை வெள்ளம் நெல்லை அடித்துச் சென்று விட்டால் இறைவனுக்கு எப்படி நைவேத்தியம் படைப்பது என்று கவலைப்பட்டார் வேதசர்மா. அப்போது இறைவன் சிவபெருமான் நெல்லுக்கு வேலி அமைத்தார். நெல்லுக்கு இறைவன் வேலி அமைத்து காத்த காரணத்தால் நெல்வேலி நாதானாக நெல்லையப்பராக போற்றப்படுகிறார். திருநெல்வேலி என்ற பெயரும் ஊருக்கு வந்தது.

நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் நெல்லையப்பர் கோயிலில் நடக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழா காலத்தின் ஆனித் தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம்.

நான்கு வாசல்கள்

நான்கு வாசல்கள்

சிவ ஆலயங்களில் உள்ளது போலவே பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலிலும் நான்கு புறமும் வாசல்கள் உள்ளன. அதன் வழியாகப் பக்தர்கள் வந்து செல்வார்கள். கடந்த 2004ஆம் ஆண்டு வடக்கு வாசல் அருகே நடந்த கொலைச் சம்பவம் காரணமாக பாதுகாப்பு கருதி கிழக்கு வாசல் தவிர பிற வாசல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. கோயிலின் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு வாசல்கள் மூடப்பட்டு கடந்த 17 வருடங்களாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால் நெல்லையப்பர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கவலையடைந்தனர்.

அமைச்சர் ஆய்வு

அமைச்சர் ஆய்வு


கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழா சமயத்தில் மட்டும் மேற்கு மற்றும் வடக்கு கோபுர வாசல்களின் கதவுகள் திறக்கப்பட்டாலும் திருவிழா முடிந்த மறுநொடியே கதவுகள் மீண்டும் மூடப்பட்டு விடும்.
நெல்லையப்பர் கோயிலில் கடந்த வாரம் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் சார்பாக, கோயிலில் பூட்டிக்கிடக்கும் வாசல்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வாசல்கள் திறப்பு

வாசல்கள் திறப்பு

கோபுர வாசல் பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, கோயிலின் அனைத்து கோபுர வாசல்களையும் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அவரது உத்தரவைத் தொடர்ந்து கோயிலின் மேற்கு வடக்கு மற்றும் தெற்கு வாசல்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறப்பு தீபாராதனை

சிறப்பு தீபாராதனை

நெல்லையப்பர் கோயிலின் வாசல்கள் இன்று திறக்கப்பட்டதையொட்டி கோயில் யானையான காந்திமதி வரவழைக்கப்பட்டு கஜபூஜை நடத்தப்பட்டது. பின்னர் வாசல் கதவுகளுக்குச் சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டன.

பக்தர்கள் மகிழ்ச்சி

பக்தர்கள் மகிழ்ச்சி

17 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலின் நான்கு வாசல்களும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோயிலில் நான்கு வாசல்களும் திறக்கப்படும் நிகழ்வில் செயல் அலுவலர் ராமராஜூ உள்ளிட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். நெல்லையப்பர் கோயில் வந்த அனைத்து பக்தர்களும் கொரனா நடைமுறையைப் பின்பற்றி வழிபட்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட வாசல்கள் வழியே பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்று நெல்லையப்பரையும் காந்திமதி தாயாரையும் தரிசனம் செய்து வழிபட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+