புத்தாண்டு ராசி பலன் 2026: அதிர்ஷ்டத்தை அள்ளும் 4 ராசியினர்.. லிஸ்டில் உங்க ராசி இருக்கா பாருங்க
New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 2026 புத்தாண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது. 1.1.2026 மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புத்தாண்டு பிறக்கிறது. 2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும்.

திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். வரும் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார். அந்த வகையில், இந்த 2026 புத்தாண்டில் ராஜயோகம் பெறும் நான்கு ராசிக்காரர்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு வரும் 2026 புத்தாண்டு அற்புதமான ஆண்டாக இருக்கும். பொருளாதாரத்தில் சூப்பர் மாற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். இதுவரை இருந்த நிலைமைகள் மாறி நிதி சார்ந்தள விஷயங்கள் சிறப்பானதாக இருக்கும். புதிய வாகனங்களை வாங்கும் யோகம் ஏற்படும். நல்ல வரன்கள் கிடைக்கும். திருமண யோகங்கள் கைகூடி வரும் காலகட்டம். குடும்பத்தில் புதிய உறவுகள் வரும் நேரமாக இருக்கும்.
சிம்மம்
2026 ஆம் ஆண்டு புத்தாண்டு சிம்ம ராசியினருக்கு மாற்றத்தை தரும் காலகட்டமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இதுவரை இருந்து வந்த பிரச்சனையான நிலைமைகள் எல்லாம் மாறி நல்ல சூழ்நிலை ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளுடனான உங்கள் உறவுகள் இணக்கமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக இருக்கும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். லாபம் கிடைக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். ஏற்றத்தை தரும் ஆண்டாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு வரும் புத்தாண்டு பணத்தை அள்ளிக் கொடுக்கும் ஆண்டாக இருக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். மன அழுத்தங்கள் இருந்தாலும் பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். குடும்பத்திலும், சமுதாயத்திலும் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஏற்றத்தைக் காண்பீர்கள்.
-
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications