Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐப்பசி மாதம் ராசி பலன்கள் 2019: ரிஷபம் ராசிக்கு பலன்கள் - பரிகாரங்கள்

ஐப்பசி மாதம் துலாம் மாதம் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரம் நவ கிரகங்களின் கூட்டணியைப் பொறுத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் வரிசையாக பலன்கள் எப்படி இருக்கும் என்ற

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Guru Peyarchi 2019 - 2020 in tamil | Rishabam | ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019

    சென்னை: தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் ஐப்பசி மாதத்தில் நீசம் அடைகிறார். சூரியனின் வேகம் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். இந்த மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரத்தின்படி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி அதற்கு பரிகாரங்கள் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

    கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியன், சுக்கிரன் புதன், மிதுனத்தில் ராகு, கன்னி ராசியில் செவ்வாய், விருச்சிகத்தில் குரு தனுசு ராசியில் சனி கேது என அமர்ந்துள்ளது. ஐப்பசி ஆறாம் தேதி விருச்சிக ராசிக்கு புதன் நகர்கிறார் 14ஆம் தேதிக்கு மேல் வக்ரகதியில் செல்கிறார். 11ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 18ஆம் தேதி குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 24ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் ரிஷபம் ராசிகாரர்களுக்கு நிறைய நன்மைகளும், சில பாதிப்புகளும் ஏற்படும்.

    ஐப்பசி மாதம் முதல் தேதி வெள்ளிக்கிழமை முதல் 30 நாட்கள் இம்மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவிரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராடி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்வது சகல பாபங்களும் நிவர்த்தியாகி புண்ணியங்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை. மேஷ ராசியில் நீசமடையும் சனிபகவானுக்குத் துலாம் ராசி உச்ச வீடு. இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனுடைய ஆதிக்கம் குறைந்தும் சுக்கிரன், சனி இவர்களுடைய ஆதிக்கம் அதிகரித்தும் காணப்படும். இந்த ஐப்பசி மாதம் குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது, தீபாவளி, கந்த சஷ்டி, முதல் சனி பிரதோஷம் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    நன்மை தரும் கிரகங்கள்

    நன்மை தரும் கிரகங்கள்

    ரிஷபம் ராசிக்கு இரண்டாம் வீட்டில் ராகு ஐந்தாம் வீட்டில் செவ்வாய் துலாம் ராசியில் புதன், சுக்கிரன், சூரியன், ஏழாம் வீட்டில் குரு எட்டில் சனி கேது சஞ்சரிக்கின்றனர். இந்த வாரம் சுக்கிரன் புதன் ஏழாம் வீட்டிற்கு செல்கின்றனர். செவ்வாய் ஆறாம் வீட்டிற்கு போகிறார். மாத பிற்பகுதியில் குரு பெயர்ச்சியாகி உங்க ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு போகிறார். துலாம் மாதம் ரிஷபம் ராசிக்கு நன்மையை தரும் காரணம் துலாம் ராசி அதிபதி சுக்கிரன் ரிஷபம் ராசிக்கும் அவரே அதிபதி என்பதால் இந்த மாதம் உங்களுக்கு அஷ்டம சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும்.

    வேலையில் கவனம் தேவை

    வேலையில் கவனம் தேவை

    ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை, ரோகிணி, மிருகஷீடம் நட்சத்திரகாரர்கள் வேலை விசயத்தில் கவனமாக இருங்க. இருக்கிற வேலையை விட்டு விட வேண்டாம். இது சரியான காலகட்டம் அல்ல. அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அதீக கவனம் செலுத்தணும். பணம் யாருக்கும் கொடுத்து ஏமாந்து போய்விட வேண்டாம். 7ல் குரு பெயர்ச்சியாகி எட்டாம் வீட்டிற்கு போகிறார்.

    தடைகள் நீங்கும்

    தடைகள் நீங்கும்

    எட்டாம் வீட்டில் சனி கேது சஞ்சரிக்கின்றனர். மாத பிற்பகுதியில் சனியோட குரு சேரும் போது பாதிப்புகள் எதுவும் நடக்காது. உங்க ராசியில உச்சமடையும் சந்திரன் சில நல்ல விசயங்களை செய்வார். தாராபலம், சந்திர பலம் உள்ள நாட்களில் செய்யும் காரியங்கள் நல்லதை செய்வார். குரு ஆட்சி பெற்று அமர்ந்து உங்க இரண்டாம் வீட்டை பார்ப்பதால் திருமண தடைகள் நீங்கும்.

    வெற்றிகள் தேடி வரும்

    வெற்றிகள் தேடி வரும்

    உங்க ராசியில உச்சமடையும் சந்திரன் சில நல்ல விசயங்களை செய்வார். தாராபலம், சந்திர பலம் உள்ள நாட்களில் செய்யும் காரியங்கள் நல்லதை செய்வார். குரு ஆட்சி பெற்று அமர்ந்து உங்க இரண்டாம் வீட்டை பார்ப்பதால் திருமண தடைகள் நீங்கும். உங்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களின் மனதில் எண்ணங்கள் வெற்றியை தேடித்தரும். நினைத்தது நிறைவேறும். முதலில் தடைகள் இருந்தாலும் வெற்றியை நோக்கி பயணிப்பீர்கள். வீடு நிலம் வாங்கலாம்.

    ஆரோக்கியம் அதிகமாகும்

    ஆரோக்கியம் அதிகமாகும்

    பணம் பலவழிகளில் வரும். உங்களின் தேவைகள் பூர்த்தியடையும். வேலைகளை சிறப்பாக செய்வீர்கள். சில நேரங்களில் பாராட்டுக்கள் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியம் அதிகமாகும் உற்சாகமடைவீர்கள். ஐப்பசி 12ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் உங்க ராசியை பார்க்கிறார். பொன் நகைகள் வாங்கலாம். கணவன் மனைவி இடையே நீடித்த புகைச்சல் தீரும்.

    மாணவர்கள் கவனம்

    மாணவர்கள் கவனம்

    நீசம் பெற்ற சூரியன் புதனோடு சேர்ந்து பயணிக்கிறார். காதல் வயப்படும் காதல் இது. ஜாக்கிரதையாக இருங்க. மருத்துவதுறை, ஆராய்ச்சித்துறையில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்க ராசிக்கு மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. சிறு தடங்கல்கள் வரலாம். எனவே உங்களை சில தொடர் தொந்தரவுகள் ஏற்படும் எனவே இனி உங்களுடைய கவனம் படிப்பில் மட்டுமே இருப்பது அவசியம். இந்த மாதம் தியானம் செய்வது நல்லது குருபகவானுக்கு வியாழக்கிழமை விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+