For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை சில்க்ஸ் தீ விபத்து - தி நகர் தீ நகர் ஆனது ஏன் தெரியுமா?

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் ஜோதிட ரீதியாக காரணங்களை ஆராயலாம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: சென்னை சில்க்ஸ் தீ விபத்துக்கு ஜோதிட ரீதியான காரணங்களை ஜோதிடர்கள் கூறியுள்ளனர். தீ விபத்திற்கு ஜவுளி மற்றும் துணிகளின் காரகன் சுக்ரன் நீர் ராசியிலிருந்து நெருப்பு ராசிக்கு நகர்ந்து தீ விபத்தினை ஏற்படுத்தும் கேதுவின் சாரத்தில் கேதுவின் பார்வை பெற்று குரு பார்வையை இழந்து நின்றதும் காரணமாகும் .

மேலும் வியாபாரத்தை குறிக்கும் புதனும் நெருப்பை குறிக்கும் செவ்வாயும் பரிவர்தனை பெற்று நின்றதும் வியாபாரம் செய்யும் இடத்தில் தீப்பிடிக்க ஒரு காரணமாகும். தீ விபத்திற்கு ஜோதிட ரீதியான காரணங்களை பார்க்கலாம்.

கேதுவை ஞான காரகன் எனவும் மோட்ச காரகன் என்றும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தீ விபத்து மற்றும் எரிந்து சாம்பலாவதற்க்கு ஜோதிட காரகர் யார் தெரியுமா? ஞான காரகன் என்றும் மோட்ச காரகன் என்றும் வர்ணிக்கப்படும் கேது பகவான்தான்.

கேதுவின் அதிதேவதை ருத்ரன் ஆகும். அதாவது சிவனின் மிக ஆக்ரோஷமான ஸ்வருபம் ஆகும். எனவேதான் கேதுவும் அழிக்கும் தன்மையை பெற்றிருக்கிறார். கேதுவின் தன்மை நெருப்புத்தன்மை ஆகும். அனைத்தையும் அழித்து பிடி சாம்பலாக்கி படைப்பின் மறுசுழற்சிக்கு உதவுபவர் கேதுவாகும்.

கேதுவின் காரகங்கள்

கேதுவின் காரகங்கள்

மேலும் கேதுவின் காரகங்களில் மயானம், கல்லரை, சுடுகாடு, பிணவரை, பிண ஊர்தி, கழிவு அகற்றுதல், முடி, முடி திருத்துதல், பிணம் எரித்தல்/அடக்கம் செய்தல், பிரளயங்கள், குரூர சம்பவங்கள், கொத்து கொத்தான மரணங்கள், தீ விபத்துகள், எரிந்து நாசமாகுதல் போன்றவை அடங்கும்.

கேதுவின் ஆதிக்கம்

கேதுவின் ஆதிக்கம்

ஆக்கத்திற்க்கு உபயோகிக்கும் நெருப்பிற்க்கு சூரியனும் செவ்வாயும் காரகனாகின்றனர். ஆனால் அழிவை தரும் நெருப்பு, தீ விபத்துகள், பிணத்தை எறிக்கும் நெருப்பு, எரிமலை, தூமகேது எனப்படும் எரிகற்கள் (தூமகேது கேதுவின் மகனாவார்) ஆகியவை கேதுவின் ஆதிக்கமும் காரகமும் கொண்டவையாகும்.

தீ விபத்திற்குக் காரணம்

தீ விபத்திற்குக் காரணம்

நேற்றைய தீ விபத்திற்கு ஜவுளி மற்றும் துணிகளின் காரகன் சுக்ரன் நீர் ராசியிலிருந்து நெருப்பு ராசிக்கு நகர்ந்து தீ விபத்தினை ஏற்படுத்தும் கேதுவின் சாரத்தில் கேதுவின் பார்வை பெற்று குரு பார்வையை இழந்து நின்றதும் காரணமாகும் . மேலும் வியாபாரத்தை குறிக்கும் புதனும் நெருப்பை குறிக்கும் செவ்வாயும் பரிவர்தனை பெற்று நின்றதும் வியாபாரம் செய்யும் இடத்தில் தீப்பிடிக்க ஒரு காரணமாகும்.

செவ்வாய், சனி பார்வை

செவ்வாய், சனி பார்வை

செவ்வாய் சனி சேர்க்கை பார்வை போன்றவை கொடூமான விபத்துகளை ஏற்படுத்துகின்றன. நேற்றைய கிரக நிலையில் நெருப்பு ராசியில் வக்ரம் பெற்று கேது சாரம் பெற்று நிற்கும் சனி செவ்வாயை பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

பேரழிவிற்கு காரணம்

பேரழிவிற்கு காரணம்

மேலும் மாந்தியோடு சேர்ந்து நெருப்பு ராசியில் நிற்க்கும் ராகு தனது பதினோராம் பார்வையால் புதன் வீட்டையும் அதில் உள்ள செவ்வாயையும் பார்ப்பது வியாபார ஸ்தல விபத்து மற்றும் பேரழிவை குறிக்கிறது.

கேரளா தீ விபத்து

கேரளா தீ விபத்து

இதே போன்று அழிக்கும் கடவுளான ருத்ரனை அதிதேவதையாக கொண்ட கேது, கேரளாவில் 10/4/2016 அன்று
கொல்லத்தை சேர்ந்த பரவுர் புத்திங்கள் காளி கோயிலில் (காளியும் கேதுவை குறிக்கும் சிவாம்சமே) ஏற்பட்ட பட்டாசு தீ வீபத்தால் 111பேர் மரணமும் 350 பேர் பலத்த காயமும் அடைந்த சம்பவ நேரத்தில் கேது கும்ப லக்னத்தில் நின்று லக்னாதிபதி சனி வக்ரம் பெற்று செவ்வாயுடன் காலபுருஷனுக்கு எட்டாம் வீடாகிய விருச்சிகத்தில் சேர்ந்து நிற்பதும் மற்றொரு நெருப்பு கிரகமான குரு வக்ரம் பெற்று நெருப்பு ராசியான சிம்மத்தில் ராகுவோடு சேர்ந்து பரிவர்தனை பெற்று நிற்க்கும் கொடுரமான நிலை தீ விபத்திற்கு காரணமானது. மேலும் லக்னத்தில் நிற்கும் கேது மாந்தியின் பார்வை பெற்றது மேலும் விபத்தை தீவிரமாக்கியது. இந்தியாவின் ஜாதகத்தில் ஏழாம்பாவத்தில் நிற்கும் ஜெனன கேதுவின் மீது சனியும் செவ்வாயும் கோசாரத்தில் சென்றது குறிப்பிடத்தக்கது.

English summary
Astrological indicators for fire accidents or death by fire. Planet Mars for accidents and fire. Planet Ketu for fire related accidents being a clone of Mars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X