For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆவணி மூலம் திருவிழா திருவிளையாடல் : கருங்குருவிக்கு உபதேசம் செய்த சிவன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவின் முக்கிய அம்சமான சிவனின் திருவிளையாடல் நாளை முதல் தொடங்குகிறது. கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நாளை நாடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

மதுரை: சிவபெருமானின் திருவிளையாடல்களை மையமாக வைத்து ஆவணி மூலத்திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொண்டாடப்படுகிறது. 64 திருவிளையாடல்களில் 12 முக்கிய திருவிளையாடல் லீலைகள் இந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெறும். முதல்நாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீவை நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய அம்சமாக நாளை முதல் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. முதல் நாளான நாளை கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெறும்.

ஒருவன் முற்பிறவியில் எவ்வளவோ புண்ணிய காரியங்கள் செய்திருந்த நிலையில் சிறிதளவு பாவம் செய்திருந்ததால் மறுபிறவியில் கருங்குருவியாக பிறக்கிறான். அந்த கருங்குருவியை காகங்கள் மிகவும் துன்புறுத்தின. அவற்றிற்கு பயந்து கருங்குருவி நெடுந்தூரம் பறந்து சென்று ஒரு மரத்தின் கிளையில் தன் நிலையை எண்ணி வருந்தியபடி அமர்ந்திருந்தது.

புரந்தரதாசரின் கதை பணமில்லாவிட்டால் என்ன மங்காத புகழ் இருக்கிறது -புரந்தரதாசரின் கதை பணமில்லாவிட்டால் என்ன மங்காத புகழ் இருக்கிறது -

கருங்குருவி வழிபாடு

கருங்குருவி வழிபாடு

அந்த சமயத்தில் அந்த மரத்தின் கீழே சிலர் மதுரையைப்பற்றியும், அங்குள்ள மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சுந்தரேசுவரரை வழிபட்டால் எண்ணியது நடக்கும் என்று பேசி கொண்டனர். இதை கேட்ட கருங்குருவி அங்கிருந்து பறந்து மதுரைக்கு வந்தது. அங்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் உள்ள பொற்றாமரைக்குளத்தில் நீராடி இறைவனை தினமும் வணங்கி வந்தது.

இறைவன் உபதேசம்

இறைவன் உபதேசம்

இறைவனும் அந்த குருவியின் பக்திக்கு மனமிரங்கி மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். அப்போது கருங்குருவி இறைவனிடம் எங்கள் இனத்தையே எளியான் என்னும் பெயர் மாற்றி வலியான் என வழங்கும்படி கேட்டது. மேலும் கருங்குருவி இறைவன் வழங்கிய மந்திரத்தை உபதேசித்து முத்திபேறு அடைந்தது என்பது வரலாறு.

திருவிளையாடல்கள்

திருவிளையாடல்கள்

ஆவணி மூலத்திருவிழாவின் முக்கிய அம்சமான 12 திருவிளையாடல்களில் முதல்நாளான நாளை 1ஆம் தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்வதுடன் தொடங்குகிறது. 2 ஆம் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 3 ஆம் தேதி மாணிக்கம் விற்றது, 4 ஆம் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தது, 5 ஆம் தேதி உலவாக்கோட்டை அருளியது, 6 ஆம் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டியது, 7 ஆம் தேதி வளையல் விற்றது, இரவு சாமிக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது.

புட்டுத்தோப்பில் திருவிழா

புட்டுத்தோப்பில் திருவிழா

8ஆம் தேதி நரியை பரியாக்கியது, 9 ஆம்தேதி பிட்டுக்கு மண் சுமந்தது, 10 ஆம் தேதி விறகு விற்றது, 11 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் சட்டதேரில் ஆவணி மூல வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். 12 ஆம் தேதி பொற்றாமரைக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

English summary
The Avani Moola festival, the decorated presiding deities of Meenakshi Sundareswarar temple.During the festival, a total of 12 Tiruvilayadals stories centring around various events in the lives of Lord Shiva’s devotees — were performed. The God is dressed according to the selected Tiruvilayadal of the day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X