பிள்ளையாருக்கு சிதறுகாய்... தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன் தெரியுமா
நாம் விநாயகருக்கு சிதறுகாய் உடைத்து வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் தடையின்றி நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.
சென்னை: நல்ல காரியத்திற்கு கிளம்பும் போது தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார் விநாயகர். அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.
விநாயகரை வணங்கும் போது தோப்புக்கரணம் போட்டும் தலையில் குட்டிக்கொண்டும் வழிபடுவார்கள்.
இருகைகளையும் முட்டியாகப் பிடித்து வலது கையால் வலது நெற்றி ஓரத்திலும், இடது கையால் இடது நெற்றி ஓரத்திலும் 3 முறை குட்டி அதன் பின் இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்து மூன்று முறை தோப்புக் கரணம் செய்து வழிபடுகின்றனர்.
கஜமுகாசூரன் என்ற அசுரனுக்கு முன்பு, தேவர்கள் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை அழித்து, தேவர்களை காப்பாற்றினார் விநாயகர். எனவே விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் தோப்புக்கரணத்தைப் போட்டனர். அந்தப் பழக்கமே நடைமுறைக்கு வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவது பற்றியும் தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவது பற்றியும் புராண கதைகள் கூறப்படுகின்றன. விநாயகருக்கு சிதறுகாய் போய் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

தலையில் குட்டிய அகத்தியர்
அகத்திய முனிவர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் தட்டி விட்டு கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் செல்லமாகக் குட்டினார். அப்போது விநாயகர் தன்னுடைய உண்மையான உருவத்தை அகத்தியரிடம் காட்டினார். உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க தான் அப்படி செய்ததாகக் கூறினார். இதைக் கேட்டதும் பிள்ளையாரை அடித்து விட்டோமோ என்று வருந்திய அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம் வந்தது.

நோய் தீர்க்கும் தோப்புக்கரணம்
விநாயகருக்கு முன்பாக தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொள்வது ஐதீகம். கைகளினால் காதைப்பிடித்துக் கொள்ளுதல் என்பது இதற்கு பொருளாகும். இவ்வாறு செய்வதால், ரத்த ஓட்டம் சீராகி மூளைக்கு தடையின்றி செல்கிறது; இதனால் நினைவாற்றல் கூடும். விநாயகரின் செல்ல கோபத்தை குறைக்க மாமா மகாவிஷ்ணு தனது காதை பிடித்துக் கொண்டு அமர்ந்து எழுந்தார் இதனால் விநாயகர் மகிழ்ச்சியடைந்தார். அதன் நினைவாகவே இன்றும் தோப்புக்கரணம் போடுகிறோம்.

சிதறுகாய் போடுவது ஏன்
மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார்.
எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார். அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.

விநாயகருக்குப் பிடித்த அருகம்புல்
அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார்.
விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை.
அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டுமென விநாயகர் கூறியதால் இன்றும் அருகம்புல் மாலை போட்டு விநாயகரை வழிபடுகிறோம்.

சதுர்த்தி விரதம்
ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள்கொடுப்பவர் ஆனைமுகன். விநாயகரைப் பிடிக்க வந்த பொழுது, சனிபகவானிடம் 'இன்றுபோய் நாளை வா' என்று எழுதி வைக்கச் சொல்லித் தந்திரத்தைக் கையாண்ட தலைவன் விநாயகன். அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் விரதமிருந்து, அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கள் பேறு கிட்டும். காரிய வெற்றி ஏற்படும். புத்திக்கூர்மை உண்டாகும். நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். விநாயகருக்கு எள்ளுருண்டை நிவேதனம் செய்து வழிபட்டால், சனிபகவானின் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications