For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே மாதம் சந்திராஷ்டம நாட்கள் : 12 ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாட்கள்

சந்திரன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நாள் சந்திராஷ்டம நாட்கள் இந்த நாட்களில் பலருக்கும் மன கலக்கம் இருக்கும். இந்த நாட்களில் அமைதியாக இருந்தாலே எந்த பிரச்சினையும் வராது.

Google Oneindia Tamil News

சென்னை: சந்திராஷ்டம நாட்கள் வந்தாலே பலருக்கும் பயம்தான். ஏதாவது வம்பு வந்துருமோ அப்படின்னு வாயை கூட திறக்க மாட்டாங்க. சந்திராஷ்டமம் வந்தாலே இனி கவலை வேண்டாம் அதற்கு சரியான பரிகாரம் செய்யலாம். மே மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று பார்க்கலாம். உங்க டைரியில இந்த நாட்களை குறித்து வைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரிகாரங்களை செய்து விட்டு உங்கள் வேலையை பாதிப்பின்றி தொடருங்கள்.

மேஷம் ராசிக்கு இந்த மாதம் 08-05-2020 அதிகாலை 03.13 மணி முதல் 10.05.2020 காலை 05.02 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். வெல்லம் சாப்பிட்டு விட்டு வேலைகளை தொடரலாம் எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும்.

Chandrashtama period for the month of May 2020

ரிஷபம் ராசிக்கு இந்த மாதம் மே 10ஆம் தேதி காலை 5.02 மணி முதல் மே 12ஆம் தேதி காலை 10.16 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. பயப்பட வேண்டாம் பயம் அகல ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள்.

மிதுனம் ராசிக்கு மே 12ஆம் தேதி காலை 10 மணிமுதல் 14ஆம் தேதி இரவு 7.22 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. வீட்டை விட்டு வெளியே எதற்காகவும் போகாதீங்க.

கடகம் ராசிக்கு மே 14 இரவு 7.22 மணி முதல் மே 17 காலை 7.14 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருங்க எந்த காரணத்திற்காவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

சிம்மம் ராசிக்கு மே 17 காலை 7.14 மணி முதல் மே 19 இரவு 7.53 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாகவும் எச்சரிக்கையாக இருக்கவும். எந்த காரணத்திற்கும் நீங்க வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

கன்னி ராசிக்கு மே 19ஆம் தேதி இரவு 7.53 மணி முதல் மே 22ஆம் தேதி காலை 7.37 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் ரொம்ப கவனமாக இருங்க. வீட்டில் யார் கூடவும் கோபமாக பேசவேண்டாம். நிதானமாக இருங்க.

துலாம் ராசிக்கு மே 22ஆம் தேதி காலை 7.37 மணி முதல் மே 24 மாலை 5.34 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். வீண் பேச்சுக்களை கட்டுப்படுத்துங்கள்.

விருச்சிகம் ராசிக்கு மே24ஆம் தேதி மாலை 5.34 மணி முதல் மே 27ஆம் தேதி காலை 1.24 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் ரொம்ப கவனமாக இருங்க சின்ன பிரச்சினைகள் கூட பெரிதாக வாய்ப்பு உள்ளது கவனமாகவும் நிதானமாகவும் இருங்க.

தனுசு ராசிக்கு மே 2ஆம் தேதி அதிகாலை 1.05 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது கவனமாக இருங்க. மே 27அதிகாலை 1.24 மணி முதல் மே 29 காலை 6.58 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. எந்த காரணத்திற்காவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். வண்டி வாகனத்தில் வெளியே போனால் பிரச்சினை வரும் கவனமாக இருங்க.

மகரம் ராசிக்கு மே 2ஆம் தேதி அதிகாலை 1.05 மணி முதல் மே 4 காலை 3.09 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாக இருக்கவும். அதே போல மே 29காலை 6.58 மணி முதல் மே 31காலை 10.19 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருங்க. இந்த 4 நாட்களும் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்காதீங்க. மவுன விரதம் இருங்க.

கும்பம் ராசிக்கு மே 4 காலை 03.09 மணி முதல் மே 6 காலை 03.15 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாக இருங்க வீட்டை விட்டு எந்த காரணத்திற்காகவும் வெளியே போக வேண்டாம்.

மீனம் ராசிக்கு மே 6 காலை 3.15 மணி முதல் மே 8 காலை 3.13 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நாட்களில் கவனமாக இருங்க. வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்காதீங்க. மவுன விரதம் இருங்க. வீட்டை விட்டு எந்த காரணத்திற்காகவும் வெளியே போக வேண்டாம்.

English summary
Chandrashtama days occurs for all Janma rashi or Moon Sign when Chandra or Moon transits in the 8th house or Rashi.Here is the table with ready reference to your Chandrashtama days for the month of May 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X