ஆகஸ்ட் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது சந்திராஷ்டமம் - பரிகாரம் என்ன
சந்திராஷ்டமம் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே காலண்டர் கிழிப்பவர்கள் இருக்கிறார்கள். இதே இந்த நாட்களை உங்கள் டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
சென்னை: சந்திராஷ்டம நாட்கள் என்றாலே பலருக்கும் மனதில் அச்சம் குடியேறும். சந்திரன் ஜென்ம ராசிக்கு எட்டாவது வீட்டில் மறைவது சந்திராஷ்டம நாளாகும். இந்த நாளில் சிலருக்கு பதற்றமாக இருக்கும். சிலரோ அதிக கோபமாக பேசி பிரச்சினையில் மாட்டிக்கொள்வார்கள். அந்த 2 நாட்களில் பதற்றமோ பயமோ வேண்டாம் சந்திராஷ்டம நாட்களை எளிதில் கடந்து விடலாம்.
ஆகஸ்ட் மாதத்தில் சந்திராஷ்டம நாட்கள் எப்போது என்று எழுதியிருக்கிறோம். சந்திராஷ்டம நாட்களை உங்க டைரியில் குறித்து வைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
மன கலக்கம் இன்றி மகிழ்ச்சியோடு இந்த நாட்களில் வழக்கமான செயல்களை செய்யலாம். வெல்லம், சர்க்கரை,மிளகு, பால் போன்ற பொருட்கள் பரிகாரத்திற்காக உள்ளது. சந்திராஷ்டம நாட்களை தைரியமாக எதிர்கொள்ளலாம்.

மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு, ஆகஸ்ட் 15,2021 இரவு 10.46 மணி முதல் ஆகஸ்ட் 18,2021 அதிகாலை 01.35 வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை
மிளகு கலந்த பால் சாப்பிட்டு விட்டு பயணத்தை தொடங்குங்கள்.

ரிஷபம்
சுக்கிர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களக்கு ஆகஸ்ட் 18,2021 அதிகாலை 01.35 மணி முதல் ஆகஸ்ட் 20,2021 அதிகாலை 04.21 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. சர்க்கரை கலந்த பால் சாப்பிட்டு விட்டு வழக்கமான பணியை செய்யலாம். அதே நேரத்தில் பெரிய அளவிலான முதலீடுகளைத் தவிர்த்து விடவும்.

மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, ஆகஸ்ட் 20,2021 அதிகாலை 04.21 மணி முதல் ஆகஸ்ட் 22,2021 காலை 07.57 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை
இரவு நேர பயணங்களைத் தவிர்த்து விடவும். தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு வழக்கமான பணிகளை செய்யலாம்.

கடகம்
சந்திரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள், ஆகஸ்ட் 22,2021 காலை 07.57 மணி முதல் ஆகஸ்ட் 24, 2021 பிற்பகல் 01.38 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் வேலையில் விழிப்புணர்வு தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமும் நிதானமும் அவசியம். இந்த நாட்களில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பனங்கற்கண்டு சாப்பிட்டு விட்டு பயணத்தை தொடங்குங்கள்.

சிம்மம்
சூரிய பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, ஆகஸ்ட் 24, 2021 பிற்பகல் 01.38 மணி முதல் ஆகஸ்ட் 26,2021 பிற்பகல் 10.29 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் அவசியம். பணம் கடன் கொடுக்கவோ, கடன் வாங்கவோ வேண்டாம். பால் சாதம் சாப்பிட்டு விட்டு பயணம் செய்யலாம்.

கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்கள், உங்கள் ராசிக்கு மாத ஆரம்பமே சந்திராஷ்டமம்தான். ஆகஸ்ட் 02ஆம் தேதி அதிகாலை 02.22 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. ஆகஸ்ட் 26,2021 பிற்பகல் 10.29 மணி முதல் ஆகஸ்ட் 29,2021 காலை 10.19 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் பேச்சில் கவனம் தேவை. முதலீடுகளைத் தவிர்க்கவும்.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே,ஆகஸ்ட் 02, 2021 அதிகாலை 02,22 மணி முதல் ஆகஸ்ட் 04, 2021 பிற்பகல் 03.07 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் அவசியம். ஆகஸ்ட் 29,2021 காலை 10.19 மணி முதல் ஆகஸ்ட் 31,2021 காலை 11.12 மணி வரைக்கும் சந்திராஷ்டம் உள்ளது பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் அவசியம்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, ஆகஸ்ட் 04,2021 பிற்பகல் 03.07 மணி முதல் ஆகஸ்ட் 07,2021 அதிகாலை 01.54 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் அவசியம். இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். யாருக்கும் பணம் கடனாகக் கொடுக்க வேண்டாம். மிளகு கலந்த உணவு சாப்பிட்டு விட்டு வேலையைத் தொடங்கவும்.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, ஆகஸ்ட் 07,2021 அதிகாலை 01.54 மணி முதல் ஆகஸ்ட் 09, 2021 காலை 09.50 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. பேச்சில் கவனம் தேவை. வீண் விதண்டாவாதம் தவிர்க்கவும். இரவு நேர பயணங்கள், உணவு விசயத்தில் அக்கறையும் கவனமும் தேவை.
சர்க்கரை கலந்த பால் சாப்பிடலாம் நன்மைகள் நடைபெறலாம்.

மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, ஆகஸ்ட் 09, 2021 காலை 09.50 மணி முதல் ஆகஸ்ட் 11,2021 பிற்பகல் 03.23 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. பேச்சில் விழிப்புணர்வு அவசியம் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பனங்கற்கண்டு கலந்த உணவு சாப்பிடலாம்.

கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, ஆகஸ்ட் 11,2021 பிற்பகல் 03.23 மணி முதல் ஆகஸ்ட் 13, 2021 இரவு 07.28 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் இரவு நேர பயணங்கள் தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை. தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு வேலை செய்யலாம்.

மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, ஆகஸ்ட் 13, 2021 இரவு 07.28 மணி முதல் ஆகஸ்ட் 15,2021 இரவு 10.46 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இரண்டு நாட்கள் கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருப்பது அவசியம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பால் சாப்பிட்டு விட்டு வேலையை பதற்றமில்லாமல் தொடருங்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications