பட்டத்தரசி மீனாட்சி திக் விஜயம்... சிவனை சந்தித்த போது முகத்தில் தோன்றிய நாணம்
பட்டத்தரசியாக முடிசூட்டிக்கொண்ட மீனாட்சி எட்டு திக்கும் வென்று, இமயத்தையும் வென்றுவர சென்றபோதுதான் சிவபெருமானை முதன் முதலாக சந்தித்தாள். அப்போது இவர்தான் தனது மணாளன் என்று உணர்ந்த உடன் முகத்தில் புதிதாய் வெட்கம் படர்ந்தத
மதுரை: மீனாட்சியின் மீது சிவபெருமானின் பார்வை பதிந்த மாத்திரத்தில் அவளது மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று. அப்போதுதான் தன்னுடைய மணாளன் இவரே என்று எண்ணி, நாணினாள். ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள்வதாக சிவபெருமான் உறுதியளித்தார்.
Recommended Video
மதுரை சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெற்றாலும் 8,9,10 ஆம் நாட்களில் நடைபெறும் விழா நிகழ்ச்சிகள் முக்கியமானவை. பட்டாபிஷேகம், திக்கு விஜயம், அதையடுத்து திருக்கல்யாணம் நிகழ்வுகளும் சிறப்பானது.
மதுரையின் பட்டத்தரசியாக முடிசூட்டிக்கொண்ட உடன் எட்டு திக்கும் வென்று வர அம்மன் திக் விஜயம் செல்வதைக் காணவே ஏராளமான பக்தர்கள் நகர வீதிகளில் காத்துக்கொண்டிருப்பார்கள். இந்த ஆண்டு திக் விஜயம் கோவிலுக்குள்ளேயே நடைபெற்றது.

வெற்றியின் நாயகி
மதுரையை ஆண்டு வந்த மலையத்துவஜ மன்னனின் மகளான மீனாட்சி ஆணுக்கு நகரான அனைத்து வகைபோர்க்கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர். மதுரையின் அரசியாக, மங்கையர்க்கரசி மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. மூன்று தனங்களுடன் பிறந்த மீனாட்சி, எந்த மன்னனைப் பார்க்கும் போது ஒரு தனம் மறைகிறதோ, அவரையே திருமணம் செய்து கொள்வார் என்று மலையத்துவஜ மன்னன் கூறுகிறான்.

அஷ்ட திக் விஜயம்
பட்டாபிஷேகதிற்குப் பிறகு மதுரையிலிருந்து படையுடன் கிளம்பி, ஒவ்வொரு திக்கிற்கும் சென்று போர்தொடுக்கிறார் மீனாட்சி. பூமியில் உள்ள ஒவ்வொரு மன்னனையும் வெற்றி கொள்கிறார். அவ்வாறு கிழக்கு திசையில் அவர் சென்றபோது, அமராவதி நாட்டின் மன்னனான இந்திரன் மீனாட்சியுடன் போர்செய்கிறான். ஆனால் மீனாட்சியின் வீர பராக்கிரமத்திற்கு ஈடு கொடுக்காமல் பணிகிறான்.

வரவேற்க வந்த சிவன்
ஒவ்வொரு திசையிலும் போர் தொடுத்து அனைவரையும் வெற்றி கொள்கிறார் அன்னை மீனாட்சி. கயிலாயத்தின் மீது படையெடுத்து செல்கிறார் அன்னை மீனாட்சி. அங்கு குடியிருக்கும் சிவபெருமான்மீனாட்சியை யார் என்று அறிந்தவர் ஆதலால், உற்சாகத்துடன் அன்னையை எதிர்கொள்ளச் செல்கிறார். படையுடன் வீரம் கொப்பளிக்க நின்று கொண்டிருக்கிறார் மீனாட்சி.

அன்னையின் முகத்தில் நாணம்
எதிர்ப்புறத்தில் சிவபெருமான் வந்து கொண்டிருக்கிறார். சிவபெருமான் நெருங்கி வர வர அன்னையின் உள்ளத்தில் வெற்றி வேட்கை குறைந்து வெட்கம் முடி சூடுகிறது. சிவபெருமான் அருகில் வர வர தனது கையில் ஏந்தி இருந்த வாளை கீழே போட்டு விட்டு நாணத்தோடு தலை குனிகிறார். அப்போது மீனாட்சியின் மூன்றாவது தனம் மறைகிறது. தனது மணாளனைக் கண்ட பூரிப்பில் அமைதியாக நிற்கிறார் அன்னை.

வாழ்க்கைத் துணைவி
அப்போது சிவபெருமான், அங்கயற்கண்ணியே நீ என்று மதுரையம்பதியை விட்டு படையுடன் கிளம்பினாயோ அன்றே நானும் உன்னைப் பின்தொடர ஆரம்பத்து விட்டேன். இன்றுதான் உன்னை நேரில் காண்கிறேன். இனிமேல்நீயே என் துணைவி என்று கூறவே அன்னையின் முகம் வெட்கத்தால் சிவந்தது. அன்றே அன்னையின் கரம் பிடித்தார் சிவபெருமான். இதுதான் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தின் பின்னணி.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications