வைத்தீஸ்வரன் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை - 144 தடை உத்தரவு
வைத்தீஸ்வரன்கோவில் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை நடைபெறுகிறது. யாக சாலை பூஜைகள், குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி ஆலய குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். குடமுடக்கு விழாவில் பக்தர்கள் பங்கேற்கபதை தடுக்க 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் நாளை காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு அமலாக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக் குமாரசுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 29-ந்தேதி குடமுழுக்குவிழா சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி பக்தர்கள் பங்கேற்பின்றி, அரசின் நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறவுள்ளது.

யாகசாலை பூஜை
விழாவையொட்டி 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் 25ஆம் தேதி தொடங்கியது. நேற்று காலை மங்களவாரம், விஷேசசாந்தி, பாவனா பிஷேகம் செய்விக்கப்பட்டு நான்காம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை விசேஷசாந்தி 5ஆம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பரிவார மூர்த்திகளுக்கு பிம்பசுத்தி பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

குடமுழக்கு
இன்று காலை 6ஆம் கால யாக பூஜைகள் தொடங்கியது. மாலை 7ஆம் கால யாக பூஜைகள் நடக்கிறது. நாளை காலை 8ஆம் கால யாக பூஜைகளுக்கு பின் கடங்கள் புறப்பாடு, தொடர்ந்து ராஜகோபுரங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்ற குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம்
யாக சாலை பூஜைகளில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாச்சாரியசுவாமிகள், திருமுதுகுன்றம் குமாரத்தேவர் ஆதீனம் ஆகியோர் பங்கேற்றனர்.

திருநாவுக்கரசுத் தம்பிரான் சுவாமிகள்
அப்போது திருநெல்வேலி கட்டளை மடம் திருஞான சம்பந்தத் தம்பிரான் சுவாமிகள், வைத்தீஸ்வரன்கோவில் கட்டளை திருநாவுக்கரசுத் தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் மாணிக்கவாசகத் தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றனர்.

பக்தர்கள் பங்கேற்க தடை
யாக சாலை பூஜைகள், குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். குடமுடக்கு விழாவில் பக்தர்கள் பங்கேற்கபதை தடுக்க 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் நாளை காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு அமலாக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications