For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏகாதசி திதியில் நெஞ்சுவலி தீர்க்கும் நெல்லிப்பொடி அபிஷேகம்

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஏகாதசி திதியில் நெஞ்சுவலி தீர்க்கும் நெல்லிபொடி அபிஷேகம் நடைபெற உள்ளது.

Google Oneindia Tamil News

வேலூர்: ஏகாதசி திதியை முன்னிட்டு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 10.06.2018 ஞாயிற்று கிழமை, காலை 10.00 மணியளவில் நட்சத்திர தோஷங்கள் அகலவும், மன நோயிலிருந்து விடுதலை பெறவும், மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிபொடியினால் மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது.

எந்த ஒரு தீராத நோய்க்கும் உடல் சம்பத்தப்பட்ட கோளாறுகளுக்கும் தன்வந்திரி பகவானை வழிபட்டு அபிஷேகம் செய்து அந்த தீர்த்தப்பிரசாதத்தை பெற்று உட்கொண்டால் நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடு.

Ekadasi Amla Powder Abhishekam on Sri Danvantri Arogya Peedam

பிரம்மன் நான்கு வேதங்களையும் படைத்து அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான், இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி பலரையும் அடைய வேண்டுமென முதலில் சூரிய பகவானுக்கு உபதேசித்தார். சூரிய பகவானிடம் இருந்து ஆயுர்வேதத்தை கற்றுத்தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது.

தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது சூரிய பகவானே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு உள்ளது. தன்வந்திரி பெருமாளை திருவோணம், ஹஸ்தம், சுவாதி புனர்பூசம் நக்ஷத்திரம், ஏகாதசி திதி,. ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் வழிபடுவது நல்லது.

தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தை சிருஷ்டித்தார் என்கிறது மத்ஸ்ய புராணம். இவரை வைத்திய ராஜா ஆதர்ச மருந்துவர் இன்றும் குறிப்பிடுகிறது. இவர் சுருண்டு காணப்படும் மென்மையான திருமுடி செவ்வரியோடிய கண்கள் வெண்சங்குக் கோடுகளுடன் கூடிய கழுத்து பரந்த மார்பு பட்டுப் பீதாம்பரம் மலர்மாலைகள் தரித்த ஆபரணத் திருமேனி நான்கு திருக்கரங்கள் மேல் இரு திருக்கரங்களில் சங்கு சக்கரம் தரித்து காணப்படுவார்.

கீழ் இரு திருக்கரங்களில் ஒன்றில் அட்டைப் பூச்சியையும் மற்றொன்றில் அம்ருத கலசத்தையும் தாங்கிக் காணப்படுவார். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள பகவான் அட்டைப் பூச்சியுடன் ”சீந்தில்கொடி” என்ற மூலிகையை ஏந்தியபடி காணப்படுகிறார்.

இவருக்கு துளசி, ஆலிலை, அரசு இலை, வில்வம் விஷ்ணு கிராந்தி, நாயுருவி, மருக்கொழுந்து இலை, தேவ தாரு இலை, போன்ற இலைகளும் செவ்வந்தி, செண்பகம், பிச்சிப்பூ, பாரிஜாதம், தாமரை, அரளி, புன்னைப்பூ, மந்தாரை போன்ற பூக்களைகொண்டு அர்ச்சனை செய்து, பால் பாயசம், கோதுமை அல்வா, சுக்குவெல்லம், பானகம் கொண்டு நைவேதிப்பது சிறந்தது!

மேலும் ஒரு கற்ப மருந்தாகத் திகழும் நெல்லிக்காயில் வைட்டமின் 'சி’ செறிந்து இருப்பதால், டயாபடீஸ் மட்டுமில்லாமல், ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் “சி” யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும், இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

நுரையீரல் சார்ந்த காசநோய் வைட்டமின் “சி” சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல். உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை, சிறுநீர் சம்பந்தமான நோய்கள், குடல் வாயுவை, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெளிளை, இருமல், சளி கண்ணில் தண்ணீர் வருவல் போன்ற பல நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தகைய நோய்களிலிருந்து நீங்கி ஆயுள் பலம் பெற தன்வ்ந்திரி மூலவருக்கு பிரதி மாதம் ஏகாதசி திதியில் நெல்லிக்காய் பொடி கொண்டு அபிஷேகம் செய்த தீர்த்த பிரசாதம் ஸ்வாமிகளின் திருக் கரங்களால் ஔஷதமாக வழங்கப்படவுள்ளது.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.

English summary
Sri dhanvantri temple walajapet amla powder abishegam for cure disease on June 10th, 2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X