கணேச சதுர்த்தி 2021: விக்னங்களைப் போக்கும் விநாயகர் தத்துவம் என்ன தெரியுமா
விநாயகர் என்ற சொல்லுக்கு வி என்றால் இல்லாமை. நாயகன் என்பவர் தலைவன். விநாயகர் என்றால் மேலான தலைவர், தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் என்று பொருளாகும்.
சென்னை: கணங்களுக்கு தலைவராயிருப்பதால் கணநாதன், கணபதி என்றும் வழிபடுவோரின் விக்கினங்களை அதாவது துன்பங்களைப் போக்குபவராதலின் இவருக்கு விக்னேஸ்வரன் என்றும் அன்புடன் வணங்கப்படுகிறார்.
விநாயகர் என்ற சொல்லுக்கு 'வி' என்றால் இல்லாமை. 'நாயகன்' என்பவர் தலைவன். விநாயகர் என்றால் மேலான தலைவர், தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் என்று பொருளாகும்.
ஸ்ரீ ஆதி சங்கரர் தாம் அருளிய கணேச பஞ்சரத்னத்துள் அநாயகைக நாயகம் என்று கணபதியைப் போற்றுகின்றார். அநாயக ஏக நாயகம் என்பது தனக்கு மேலோரு நாயகரில்லாமல் தானே ஏக நாயகனாக இருப்பவர் என்பது இதன் பொருள். ஓம் அநீஸ்வராய நம என்னும் மந்திரத்திற்கு - தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் என்பதே பொருள்.
கணங்களுக்கு தலைவராயிருப்பதால் கணநாதன், கணபதி என்றும் வழிபடுவோரின் விக்கினங்களை அதாவது துன்பங்களைப் போக்குபவராதலின் இவருக்கு விக்னேஸ்வரன் என்றும் அன்புடன் வணங்கப்படுகிறார்.

விநாயகர் வடிவத்தின் தத்துவம்
விநாயகருடைய வடிவம் பார்ப்பதற்கு விந்தையாக இருக்கும். யானைத் தலையும், பெரிய வயிறும், மனித உடலும், ஐந்து திருக்கைகளும் கூடிய வடிவமும் இடையின் கீழே மனித உடம்பும், இடைக்கு மேல் கழுத்து வரை தேவ உடம்பும், கழுத்துக் மேல் விலங்கு தலையாகும். ஒரு பக்கம் கொம்பு ஆண் தன்மை, மற்றொரு பக்கம் பெண் தண்மை. அஃறிணை, உயர்திணை அம்சங்கள் பொருந்தியவராக இருக்கிறார். மொத்தத்தில் விநாயகப் பெருமான் தேவராய்,மனிதராய், பூதராய்,விலங்காய், ஆணாய்,பெண்ணாய், இப்படி எல்லாமுமாக திகழ்கிறார்.

கணபதி வழிபாடு தத்துவம்
உயிர்களின் உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களில் மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தியின் மூலக்கனலை எழுப்பி பிரம்மத்துடன் ஆக்ஞையில் ஒன்றிடச் செய்வது. பிள்ளையாரின் மூல வடிவம் ஓம். ஓம்கார வடிவம். ஓம் என்பது தெய்வீக ஒளிவடிவம். வாழ்க்கை என்பதே தெய்வீக ஒளிவடிவில் அடங்கும் விஷயம்தான் என்பதை அறிந்துகொள் என்பதே விநாயகர் வழிபாட்டின் தத்துவமாகும்.

ஓம் வடிவம்
கணபதி திருவுருவை வலது காது முதல் தொடங்கி தலையை சுற்றி வளைத்து இடது காது வரை கொண்டு வந்து தொங்கும் தும்பிக்கை வரை நீட்டிக்கொண்டு சுழித்தால் ஓம் என்ற பிரணவ வடிவம் புலப்படும். சிவபெருமானிடத்திலிருந்து ஓம் எனும் நாதம் ஆதியில் பிறந்தது. ஓம் என்பதை பிரணவம் எனக் கூறுவர். விநாயகர் பிரணவ வடிவானவர். 'ஓம் பிரணவானன தேவாய நம' என்பது அவரது மந்திரங்களில் ஒன்று. ஓம் எனும் பிரணவத்தின் வரி வடிவமே விநாயகர் வடிவம் அதன் ஒளி வடிவமே நாத விந்துவாகும். மேல்சுழி இருக்குமிடம் விநாயகரது ஒடிந்த கொம்பு இருக்குமிடம். அது அங்கிருந்து வலது கை வழியாக மேலேறிக் கிரீடத்தைச் சுற்றி இடக்கைப் பாசம்வரை வந்து வளைந்து நெற்றிப் பொட்டு வரையிலும் சென்று துதிக்கை வழியாகக் கீழ் இடக்கை வரை வந்து கால்வரை இறங்குகிறது. இடக்கையும் அதிலிருக்கும் மோதகமும் பூஜ்ஜியம் என்பதைக் குறிக்கிறது. ஆதலின் ஓம் எனும் வரி வடிவமே விநாயகரது வடிவமாகும்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
விநாயகருக்கு ஐந்து திருக்கரங்கள் உள்ளன. திருமூலர் ஐந்து கரத்தனை, ஆனை முகத்தனை ,எனக் கூறுகிறார் துதிக்கையில் அமிர்த குடம், பின் இரண்டு கைகளில் பாசம், அங்குசம், முன் கைகளில் வலக்கையில் ஒடிந்த தந்தம், இடக்கையில் மோதகம் ஆகியவைகளை வைத்திருக்கிறார்.
யானையை அடக்க யானைப்பாகன் பாசாங்குசங்களை வைத்திருப்பான். விநாயகரோ அவற்றைத் தன் கைகளில் வைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு யானைப்பாகன் யானையை படுகுழிகளில் விழாமல் தடுத்து நேர்வழியில் நடத்துவது போல உயிர்களாகிய நாம் ஆசாபாசங்களாகிய படுகுழிகளில் விழாமல் தடுத்து நல்ல வழியில் நடத்தி நம்முடைய ஆசாபாசங்களை அவரது கையிலிருக்கும் பாசத்தால் கட்டி அங்குசத்தால் வெட்டிப் பாச நீக்கம் செய்து முக்திப்பேற்றை அருளுகிறார்.
முன் கைகளில் வலது கையில் ஒடிந்த கொம்பினை வைத்திருக்கிறார். இது கஜமுகாசுரனைக் கொன்று தேவர்களைக் காப்பாற்றியதன் அறிகுறியாகும். இடது கையில் மோதகத்தைத் தாங்கி இருக்கிறார். மோதகத்தில் இவருக்கு விருப்பம் அதிகம். மோதகம் என்பதன் பொருள் அழிவற்ற தன்மை அல்லது நிஜாநந்தம் என்பது ஆகும்.

மூஷிக வாகனம்
ஆங்காரத்தின் வடிவமான பெருச்சாளி இருளை விரும்பும், கேடு விளைவிக்கும்,கீழ்நோக்கும், அறியாமை ஆணவத்தின் அடையாளம். ஓங்கார வடிவான மேல்நோக்கும் மெய்ஞான வடிவமான பிள்ளையார் சிறிய பெருச்சாளியை தன் கால் கீழ் கொண்டு இருப்பது. அறியாமையையும் செருக்கையும் அடக்கி ஆள்பவர் என்பதையும் எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும் தாங்குபவராகவும் விளங்குபவர் என்பதையும் காட்டுகிறது.

விநாயகப் பெருமானின் ஆயுதங்கள்
பாசம், அங்குசம், தந்தம்,வேதாளம், சக்தி, அம்பு, வில், கத்தி, கேடயம், சம்மட்டி, கதை, நாகபாசம், சூலம், குந்தாலி, மழு,கொடி, தண்டம், கமண்டலம், பரசு,கரும்பு வில், சங்கம், புஷ்ப பாணம், கோடாரி, அட்சரமாலை, சாமரம், கட்டுவங்கம், சக்கரம், தீ அகல், வீணை.

தோப்புக்கரணம்
தோப்புக்கரணம் என்பது குண்டலினி யோகத்தின் ஒரு அங்கமாகும். அந்தக்கரணமாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கும் புறக்காரணமாகிய கை, கால், கண் முதலியன தூண்டப்பட்டு மனித உடலில் அடிவயிற்றின் கீழ் ஓங்கார வடிவத்தில் அமைந்து இருக்கும் சூஷ்மன ஒட்டி எழுப்பப்படுகிறது.

பிள்ளையார்சுழி
எந்த செயலும் நாம் செய்யத் தொடங்கும் முன்பாக பிள்ளையார் சுழி போட்டு செய்யத் தொடங்கு என்று சொல்வார்கள். பிள்ளையார்சுழி என்பது அகரம், உகரம், மகரம் (அ, உ, ம்) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள நாதப்பிரம்மமாகிய ஓம் என்னும் பிரணவத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம். கோடு சிவலிங்கம் என்றும் சொல்லப்படும். எழுதத் தொடங்குமுன் பிள்ளையார் சுழியை எழுதுவது எழுத மேற்கொள்ளும் செயல் இடையூறின்றி முடிய ஸ்ரீ மஹா கணபதியை நிறுத்தி வழிபடுவதைப் போன்றதாகும்.

இடையூறுகள் நீங்கும்
விநாயகரே குருவாக வந்து அருள் புரிவார் என்பதனை ஔவையார் கூறியுள்ளார். ஔவையாரை விநாயகப் பெருமான் தனது துதிக்கையால் தூக்கிக் கைலாசத்தில் சேர்த்தார் என்ற வரலாறும் இதனை வலியுறுத்துகின்றது. பிள்ளையாரை வணங்குவதால் மும்மலங்கள் விலகும், இடையூறுகள் அகலும், இருள்வினை நீங்கும். நம் வீட்டில் திருமகள் வந்துறைவாள்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications