For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆகஸ்ட் 2ல் குரு பெயர்ச்சி: எந்த ராசிக்கார்களுக்கு யோகம்?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நிகழும் மங்களகரமான துர்முகி ஆண்டு ஆடிமாதம் 18 ம் நாள் (2.8.2016) செவ்வாய்க்கிழமை பூசம் நட்சத்திரம், அமாவாசை திதி சித்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 9.30 மணிக்கு குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

Guru Peyarchi on August 2nd 2016

யோகம் தரும் ராசிகள்:

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம்.

குரு வழிபாட்டினால் யோகம் அடையும் ராசிகள் :

மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம்.

ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு குரு பெயர்ச்சி எந்தெந்த ராசிக்கு எத்தனை சதவிகிதம் நன்மை தரும்

1.மேஷம்- 6 ம் இடம் (ரோகஸ்தானம்) 50% நன்மை.
2.ரிஷபம்- 5 ம் இடம் (பூர்வ புண்யஸ்தானம்) 70% நன்மை
3.மிதுனம்-4 ம் இடம் (கேந்திரஸ்தானம்) 50%நன்மை (அர்த்தாஷ்டம குரு)
4.கடகம்-3 ம் இடம்(தைரியஸ்தானம்) 40%நன்மை
5.சிம்மம்-2 ம் இடம் (தன ஸ்தானம்) 90%நன்மை
6.கன்னி-ஜென்ம ராசி 50%நன்மை (ஜன்ம குரு)
7.துலாம்-12 ம் இடம் (விரய ஸ்தானம்) 60%நன்மை
8.விருச்சிகம்-11 ம் இடம் (லாப ஸ்தானம்) 95%நன்மை
(சுப லாப குரு)
9.தனுசு-10 ம் இடம் (ஜீவன ஸ்தானம்) 55% நன்மை
10.மகரம்-9 ம் இடம் (பாக்ய ஸ்தானம்)90% நன்மை
11.கும்பம்-8 ம் இடம் (ஆயுள் ஸ்தானம்) 40% நன்மை. (அஷ்டம குரு)
12.மீனம்-7 ம் இடம் (களத்திரஸ்தானம்) 100% நன்மை.

குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா வரும் ஜூலை 21ம் தேதி முதல் கட்டமாக தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார்.
இதை முன்னிட்டு குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கி 28ம் தேதிவரை முதல் கட்டமாகவும், குருப் பெயர்ச்சிக்குப்பின் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதிவரை இரண்டாவது கட்டமாகவும் நடைபெறவுள்ளது.

காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் லட்சார்ச்சனை நடைபெறும். மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் மற்றும் இதர ராசிக்காரர்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.

லட்சார்ச்சனை கட்டணம் ரூ.400 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு குரு பகவான் உருவம் பொறித்த இரண்டு கிராம் டாலர் பிரசாதமாக வழங்கப்படும். தபால் மூலமாகவும் லட்சார்ச்சனையில் பங்கேற்கலாம்.

தபால் மூலம் லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்கள் தங்களது பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். டிமாண்ட்டிராப்ட் அல்லது மணியார்டர் மூலமாக தொகை அனுப்புபவர்கள் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் எனக் குறிப்பிட்டு அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயில் (குருபரிகாரஸ்தலம்) ஆலங்குடி-612801. வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். டிடி எடுத்து அனுப்புபவர்கள் கும்பகோணம் வங்கிக் கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்ப வேண்டும் என்று ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Jupiter transit to Virgo would happen on 11th August 2016. Juipetr will enter Virgo (Kanni Rasi) from Leo (Simha Rasi).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X