குரு பெயர்ச்சி பலன் 2023: ரிஷபம் விரைய குரு..பணம் தண்ணீராக கரையும்..உஷாராக இருங்க மக்களே!
சென்னை: சுப கிரகமான குரு பகவான் 22 ஆம் தேதி குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். 2024ஆம் ஆண்டு மே மாதம் வரை குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்யப்போகிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு விரைய குருவினால் பண வருமானம் அதிகரித்தாலும் தண்ணீராக செலவாகப்போகிறது. குருவின் பார்வை பல அற்புதங்களை நிகழ்த்தப்போவதால் அச்சப்பட தேவையில்லை.
ரிஷப ராசிக்கு 12ஆம் வீட்டில் குரு மறைகிறார். கவலைப்பட வேண்டாம். குருவின் பார்வை அற்புதமாக உள்ளது. விரைய குரு சுப விரையங்களைத் தரப்போகிறார். பண வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாத அளவிற்கு செலவுகளும் வரிசை கட்டி நிற்கும். ரிஷபம் சுக்கிரன் வீடு. குரு உங்களுக்கு கெட்டவன்.. கெட்டிடில் கிட்டிடிடும் ராஜயோகம் என்பது போல குரு மறைவது சிறப்பு. சுப விரையம், எதிர்பாராத திடீர் செலவுகள் வரப்போகிறது. ஆன்மீக பயணங்கள் ஏற்படும்.

பத்தாம் வீட்டில் பயணம் செய்யும் சனி பதவி யோகத்தை தருகிறது. கவுரவம் அந்தஸ்து உயரும். 4ஆம் வீட்டினை குரு பார்வையிடுவதால் அம்மா வழி சொத்துக்கள் கிடைக்கும். அம்மாவின் ஆசியை பெறலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். தேங்கிக் கிடந்த தொழிலில் வெற்றி கிடைக்கும்.
வண்டி வாகனம் வாங்கும் யோகத்தை தரப்போகிறது. வெற்றிகள் தேடி வரப்போகிறது. சவால்களை சமாளிப்பீர்கள். வீட்டில் அமைதியும் சந்தோஷமும்,ஏற்படும். மறைமுக போட்டி, பொறாமைகள் நீங்கும். கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
குருவின் பார்வை 6வது இடத்தில் பதியும் போது ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். ஆயுள் கண்டங்கள் நீங்கும். வம்பு வழக்குகள் சாதகமான முடிவினை தரும். திருமண வாழ்க்கையில் சவால்களை சந்திப்பீர்கள். கடவுள் அனுகிரகத்தினால் நல்லதே நடக்கும். புதிய பட்டம், பதவிகள் தேடி வரும். கௌரவ பதவிகள் தேடி வரும். புரமோசன், டிரான்ஸ்பர் கிடைக்கும். தேவையற்ற வீண் செலவுகளை தவிர்க்க சுப விரைய செலவுகளை தவிருங்கள்.
சோதனைகளை வென்று சாதனைகளாக மாற்றுவீர்கள். வெளிநாடு சென்று வேலை செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வாக்கு கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். ராவணன் முடி வீழ்ந்தது 12ஆம் வீட்டில் குரு வந்த போதுதான். வீட்டு ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ஜீராண மண்டல உறுப்புகளில் அக்கறையும் கவனமும் தேவை.
வீடு வாகனம் வாங்கலாம். புது வீடு வாங்கலாம். வண்டி வாங்குவதற்கான யோகம் வந்து விட்டது. புது கடன் வாங்கி வீடு வாங்கலாம். பொருளாதார வசதி அதிகரிக்கும். கடன் பிரச்சினை நீங்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் பணத்தை கடனாக கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications