For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா பரவலுக்கு தமிழ் பஞ்சாங்கம் கூறும் காரணம் : மகரம் கும்பம் மீன ராசிகளில் பயணிக்கும் குருபகவான்

பிலவ ஆண்டில் குரு பகவான் மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பயணம் செய்கிறார். ஒரே ஆண்டில் மூன்று கிரகங்களில் குரு அதிசாரமாகவும் வக்ரமாகவும் பயணிப்பதே கொரோனா பரவலுக்கு காரணம் என்று தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக உள்ளது. கொத்து கொத்தாக வைரஸ் பரவி வருவதற்குக் காரணம் நவ கிரகங்களில் குரு பகவான் ஓர் ஆண்டில் மூன்று ராசிகளில் பயணிப்பதே என்று என்று தமிழ் பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சார்வரி ஆண்டில் தனுசு, மகரம், கும்ப ராசிகளில் குரு பயணித்தார். தற்போதய பிலவ ஆண்டில் மகரம்,கும்பம், மீன ராசிகளில் குரு பயணிப்பதால் வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் என்றும் பிலவ வருட தமிழ் பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்பு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பஞ்சாங்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

Recommended Video

    Corona link with guru peyarchi Tamil panchangam prediction - Video

    ஆயிரக்கணக்கில் இருந்த கொரோனா பாதிப்பு லட்சக்கணக்கான மாறி வருகிறது. தினசரியும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினசரியும் மரணமடைந்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. நாளொன்றுக்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

     கோடீஸ்வரர் ஆக மாற்றும் 1 ரூபாய் நாணயம்... அலட்சியமாக எங்கேயும் போட்டு விடாதீர்கள் கோடீஸ்வரர் ஆக மாற்றும் 1 ரூபாய் நாணயம்... அலட்சியமாக எங்கேயும் போட்டு விடாதீர்கள்

    கொரோனாவைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கடைகளுக்கு செல்வதற்காகவும், வெளியூர் செல்லவும் வண்டிகளில் வலம் வருகின்றனர். கொரோனா பற்றிய அச்சம் மக்களுக்கு இல்லாமல் போதே கொரோனா பரவல் அதிகரிக்க காரணமாகி விட்டது சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா போய் கருப்பு பூஞ்சையும் மக்களை பாதித்து வருகிறது. இந்த நோய் பரவலுக்குக் காரணம் குரு பகவானின் சஞ்சாரமே என்று பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மகரம், கும்பம், மீனம்

    மகரம், கும்பம், மீனம்

    குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் சஞ்சரிப்பார். சில மாதங்கள் அதிசாரமாக சென்று வருவார். மீண்டும் வக்ரமடைந்து நேர்கதிக்கு திரும்புவார். சுப கிரகமான குரு பெயர்ச்சியை பலரும் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். சார்வரி ஆண்டில் குரு பகவான் தனுசு, மகரம், கும்ப ராசிகளில் பயணம் செய்தார். பிலவ ஆண்டில் குரு பகவான் மகரம், கும்பம், மீன ராசிகளில் பயணம் செய்கிறார்.

    குரு பெயர்ச்சி 2021

    குரு பெயர்ச்சி 2021

    சித்திரை முதல் பங்குனி வரையிலான ஒரு வருடத்தில் குருபகவான் 3 ராசிகளில் பயணித்தால் உலக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் கொடிய நோய் தாக்கும் என்றும் ஜோதிட சாஸ்திர நூல்கள் தெரிவித்துள்ளன. சார்வரி ஆண்டில் மகர ராசியில் பயணித்த குரு பகவான் பங்குனி 23ஆம் தேதி அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றார். பிலவ ஆண்டு ஆவணி மாதம் வரை கும்ப ராசியில் பயணம் செய்வார்.

    கும்பம் முதல் மீனம் வரை

    கும்பம் முதல் மீனம் வரை


    பிலவ ஆண்டில் குரு பகவான் சித்திரை முதல் ஆவணி வரை அதிசாரமாக கும்ப ராசியில் பயணம் செய்கிறார். ஆவணி மாதம் 29ஆம் தேதி முதல் கார்த்திகை மாதம் 4ஆம் தேதி வரை மீண்டும் மகர ராசியிலும் பயணம் செய்கிறார். குரு பெயர்ச்சிக்கு பிறகு நேர்கதியில் கும்ப ராசிக்கு செல்கிறார் குரு பகவான்.

    மக்களுக்குத் துன்பம்

    மக்களுக்குத் துன்பம்


    பங்குனி 30ஆம் தேதி பகல் 03.49 முதல் மீன ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த ஆண்டும் 3 ராசிகளில் குரு பயணம் செய்வதால் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என்றே பஞ்சாங்கம் கணித்திருந்தது. உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் துன்பமடைவார்கள் என்றே பஞ்சாங்கம் கணித்துள்ளது.

    குரு பார்வை எப்படி

    குரு பார்வை எப்படி

    குரு பகவான் தற்போது கும்ப ராசியில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை மிதுனம், சிம்மம், துலாம் ராசிகளின் மீது விழுகிறது. குரு சஞ்சாரத்தினால் கும்பம், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஓரளவிற்கு பலன் கிடைத்து வருகிறது. சில ராசிக்காரர்களுக்கு தொடர் கஷ்டங்களும், துயரங்களுமே நீடிக்கிறது. நோய் பாதிப்புகளும் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அதிகம் உள்ளது.

    விரையம் அதிகம்

    விரையம் அதிகம்

    பிலவ ஆண்டில் ஆதாயத்தை விட விரையம் அதிகமாக இருப்பதால் சம்பாதிக்கும் பணத்தை விட விரைய செலவுகள் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியத்தை விட அனாரோக்கியம் அதிகம் இருப்பதால் பொதுமக்களுக்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குரு கிரகத்தின் சஞ்சாரம் நோய் பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளது.

    தீபம் ஏற்றி வழிபடலாம்

    தீபம் ஏற்றி வழிபடலாம்

    கொரோனா பாதிப்பு ஜூன் மாதம் குறையத் தொடங்கும் மூன்றாவது அலை வீசும் என்று மருத்துவர்கள் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நோய் பாதிப்புகள் அதிகம் பாதிக்கப்படாமல் இருக்கவும் நோய் தாக்கினாலும் விரைவில் குணமடையும் தினசரியும் வீட்டில் அகல்விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். கோவில்களில் நடைபெறும் யாகங்களில் பங்கேற்க வேண்டும். யாகம் நடத்த தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    English summary
    According to the Tamil Srinivasan Panchangam prediction the spread of the virus was due to Guru Bhagavan traveling in three zodiac signs Makaram, Kumbam and Meenam in Pilava Tamil varudam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X